Daily Archive: June 15, 2018

சென்னையில் பேசுகிறேன்

சென்னை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் – நமது நம்பிக்கை இதழ் சார்பில் தொடர்சொற்பொழிவு ஒன்று நிகழ்ந்துவருகிறது. வெவ்வேறு துறைகளில் சென்ற ஆண்டுகளில் நிகழ்ந்துவரும் மாற்றங்களைப் பற்றியது இந்த உரைத்தொடர். இலக்கியத்தில் நிகழ்ந்துவரும் மாற்றங்களைப் பற்றி நான் பேசவிருக்கிறேன். சென்னையில் பேச்சுக்கச்சேரி அமைப்பின் சார்பில் நடந்த குறுந்தொகை உரைக்குப்பின் நான் முழுமையான தனியுரை எதையும் ஆற்றவில்லை. இது நீண்ட தனியுரை. நண்பர்கள், வாசகர்கள் அனைவரையும் அழைக்கிறேன். இடம்: பாரதியவித்யாபவன் கிழக்கு மாடவீதி மைலாப்பூர் சென்னை 4 நாள்: ஜூன் 19 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110220

காய்கறியாதல்

காலில் ஒரு சிறுபுண். சென்ற ஏப்ரல் 14 அன்று ஊட்டி சென்றபோது ரயிலில் இருந்து இறங்கியபோது சிறு தடிப்பாகத் தோன்றி புண்ணாக ஆகியது. ஏதோ கடித்துவிட்டது, தானாகச் சரியாகப் போய்விடும் என நினைத்தேன், சரியாகவில்லை. கொஞ்சம் மட்டுப்படும். பயணங்களில் மீண்டும் சற்றுப்பெரிதாகும். பெரிய வலியெல்லாம் இல்லை. ஆனால் இருந்துகொண்டே இருந்தது. ஆகவே பார்வதிபுரம் ஜோ டாக்டரிடம் காட்டினேன். மருந்தும் மாத்திரையும் அளித்தார். குணமாகவில்லை. மீண்டும் எட்டுநாட்கள் கழித்துச் சென்றேன். அடுத்த மருந்து வரிசை. அதுவும் பலனளிக்கவில்லை. சர்க்கரைநோய் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110176

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருதுவிழா -கடிதங்கள்

  அன்பு ஜெயமோகன், வணக்கம். இந்த ஆண்டு குமரகுருபரன் கவிதை விருது கண்டராதித்தனுக்கு வழங்கப்பட்டதில் மிகவும் மகிழ்ச்சி. கவனம் ஈர்க்கும் பரபரப்புகளின்றி இயங்குபவர் கண்டராதித்தன். எழுத்துக்கு வெளியில் எங்கும் தன்னை முன்வைக்காதவர். அவருடைய கவிதைகளின் தகைமை அறிந்து இவ்விருதுக்குத் தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி. அவரோடும் அவரது கவிதைகளோடும் 20 ஆண்டுகளுக்கு மேற்பட்ட நட்பும் பரிச்சயமும் கொண்டவன் என்ற வகையில் நானும் மகிழ்கிறேன். விருது விழாவில் உங்களை நேரில் சந்தித்து இதைச் சொல்ல விரும்பியிருந்தேன். தவிர்க்கவியலாத ஓர் உள்ளூர் நிகழ்வினால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110106

ஊமைச்செந்நாய் – மலையாளத்தில்

சென்ற ஜூன் 10 அன்று பாஷாபோஷிணி மாத இதழின் ஆண்டுமலரில் ஊமைச்செந்நாயின் மலையாள மொழியாக்கமான மிண்டாச்செந்நாய் வெளியாகியது. தமிழிலும் மலையாளத்திலும் கதைகள் வெளியாவதற்குச் சில வேறுபாடுகள் உள்ளன.அங்கே வாசகர் எண்ணிக்கை கிட்டத்தட்ட நூறுமடங்கு – இங்கே ஐம்பதாயிரம் என்றால் அங்கே ஐம்பது லட்சம். ஆகவே வாசக எதிர்பார்ப்பு ஒரு பெரிய பூதம்போல அருகே நின்றுகொண்டிருக்கும். கிட்டத்தட்ட தமிழ் சினிமாவின் அதே நிலை.ஆட்டோவில் ஏறினால் “அடுத்த நாவல் எப்ப சார்?” என்பார்கள். ஓட்டலில் டிபன் கொண்டு வைத்தபின் சர்வர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110181

நவீன நாவல் -சிவமணியன் எதிர்வினை

நவீன நாவல் -விஷால்ராஜா நவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன் விருதுவிழாவும் நாவல்விவாதமும் கொச்சின் துறைமுகப் பகுதி இயற்கையின் மாபெரும் கொடை. ஒரு புறம் இரண்டாகப் பிரிந்த பெரியாற்றின் கழிமுகமும்(estuary), மற்றொரு புறம் ஆலப்புழாவிலிருந்து , குமரகம் வரை நீண்டுள்ள,  வேம்பநாடு ஏரி நீரும், நடுவில் backwater எனப்படும் உப்பங்கழிப் பகுதியும், கடலின் முதன்மை முகத்துவாரத்தில் அரபிக்கடலின் சீற்றமும், துறைமுக கட்டுமானப் பகுதிகள் என அந்த பகுதியில் படகு சவாரி செய்வது விழியை நிறைத்து மனதினை உள்நிரம்பி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110162

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 15

பூரிசிரவஸ் அஸ்தினபுரியிலிருந்து அரசரின் ஆணையை பெற்றுக்கொண்டு எல்லைக் காவலரண்கள் அனைத்திற்கும் சென்று படைநிலைகளை பார்வையிட்டு தன் அறிக்கையை பறவைத்தூதினூடாக அனுப்பிவிட்டு பால்ஹிகபுரிக்கு வந்தான். அஸ்தினபுரியிலிருந்த அந்த மாதங்களில் அவன் பால்ஹிகபுரியை முழுமையாகவே மறந்துவிட்டிருந்தான். பின்னால் திரும்பி நோக்க பொழுதில்லாமல் படைப் பணிகள். ஒவ்வொரு நாளும் அவன் திகைப்பூட்டும்படி புதிய ஒன்றை கற்றுக்கொண்டான். படை என்பது தனியுளங்கள் முற்றழிந்து பொதுவுளம் ஒன்று உருவாவது. உலோகத்துளிகளை உருக்கி ஒன்றாக்கி ஒற்றைப் பொறியாக்குவது. மலைக்குடிகளின் படை என்பது ஆட்டுமந்தைபோல. சேர்ந்து வழியும்போதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110151