Daily Archive: June 14, 2018

வெண்முரசு விவாதஅரங்கு – பல்லடம்

நண்பர்களே , நிகழ் காவியமான வெண்முரசு குறித்து வாசகர்கள் தமக்குள் சந்தித்து உரையாடவும், தெளிவு பெறவும், வாசிப்ப்பின் சாத்தியத்தை அதிகரித்துக் கொள்ளவும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளோம். இது குறித்து அறிய   ஆர்வமுடையோர் மற்றும் தொடர் வாசகர்கள் சந்திப்பில்  பங்கு பெற அழைக்கிறோம். இம்முறை வெண்முரசில் இசை வர்ணனைகள் என்கிற தலைப்பில் தாமரைக்கண்ணன் உரையாற்றுவார் இப்படிக்கு தீபன் : 94437 38367 நாள், நேரம் :17/06/2018 ஞாயிறு காலை 11 மணி. இடம் See me on …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110168

நாவல், கவிதை, விழா

விழா புகைப்படங்கள் கணேஷ் பெரியசாமி விழா உரைகளின் காணொளிகள் -சுருதி டிவி கவிஞர் கண்டராதித்தனுக்கு குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா சென்னையில் சென்ற 10-6-2018 அன்று நிகழ்ந்தது. ஜூன் பத்து குமரகுருபரன் மறைந்த நாள். எல்லார் நினைவிலும் ஏதோ ஒருவகையில் நிறைந்து வாழ்ந்தவர் அவர். விரைவிலேயே விடைபெற்றுச்செல்பவர்களின் வாழ்க்கையை முன்னரே நோக்கினால் மிகையான சலிப்பும் ஒதுங்குதலும் அல்லது மிகையான துடிப்பும் பாதிப்பூட்டும் தன்மையும் காணப்படும் என்பார்கள். எல்லா இடத்திலும் தடம்விட்டுச்செல்லும் நோக்குடன் அறைந்தும் அடித்தும் சென்ற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110141

நவீன நாவல் -விஷால்ராஜா

“நவீன நாவல்” என்று சொல்லும்போது நாம் இரண்டு விஷயங்களை உத்தேசிக்க வாய்ப்புகள் உள்ளன. முதலாவது உத்தேசம் – நம் சமகாலத்து நாவல்கள். சமகால நாவல் எதையும் நவீன நாவல் என்றே அழைக்க முடியும். நவீனம் என்பது “Modern” என்பதன் பெயர்ப்புச் சொல். அதன் லேட்டின் வேர்ச்சொல்லுடைய அர்த்தமே “தற்போது” என்பதுதான். (Modo – Current). இந்த நேரடி அர்த்தத்தை தாண்டிய விரிவான பொருளிலும் “நவீன நாவல்” என்கிற சொற்றொடர் பொதுவாக உபயோகிக்கப்படுகிறது.  தோராயமாக பதினாறாம் நூற்றாண்டு முதல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110146

இயல் விருது விழா- செய்தி  

இம்முறை கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா ஞாயிற்றுக்கிழமை 10 யூன் 2018 அன்று ஆறு மணிக்கு டோரொண்டோவில் நடைபெற்றது. கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள்  மூலம் 50 ஆண்டுகளாக தமிழ் இலக்கிய உலகில் இயங்கிவரும் திரு கல்யாணசுந்தரம் சிவசங்கரன் (வண்ணதாசன்) அவர்களுக்கு தமிழ் இலக்கிய வாழ்நாள் சாதனையான இயல் விருது வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து  ’வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்’ நாவலுக்கான புனைவுப் பரிசு தமிழ்மகனுக்கு வழங்கப்பட்டது. அபுனைவுப் பரிசு ’கனடாவில் இலங்கைத் தமிழரின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110128

நவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன்

எழுத்தாளர் விஷால் ராஜா விரிவாக நாவல் உருவாகி உருமாறி வரும் பின்புலத்தை நவீனத்துவ பின் நவீனத்துவ புரிதல்களின் அடிப்படையில், ஏற்கனவே இங்கு நிலவிவரும் உரையாடலின் தொடர்ச்சியாக கருத்துக்களை தொகுத்து அளித்துள்ளார். அவருடைய கட்டுரையில் இருந்து சில மேலதிக புள்ளிகளையும், மாற்று பார்வைகளையும் முன்வைக்க முயல்கிறேன். 2013 ஆம் ஆண்டு ஜெயமோகன் திருவண்ணாமலை வந்திருந்த போது எல்லோரும் கிரிவலம் சென்றோம். அப்போது அவரிடம் ந. பிச்ச்சமூர்த்தி எழுத்து இதழுக்கு அளித்த நேர்காணலில் “சொல்லை மந்திரம் என்பார்கள் சொல்லைக் கொண்டே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110144

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 14

சாத்யகி படைவெளியை கடந்துசென்று பாஞ்சாலப் படைப்பிரிவுகளை அடைந்தான். அங்கு ஏற்கெனவே பாடிவீடுகள் அனைத்தும் கலைக்கப்பட்டு பாய்களாகவும் மூங்கில்களாகவும் தரையில் அடுக்கப்பட்டிருந்தன. சில நாட்களுக்கு முன்பு சீரான படைகளால் நிறைந்திருந்த வெளியில் வெறுமை அலைந்தது. அவ்வெறுமை புரவியில் சென்றவர்களை தேவையின்றி விரையச் செய்தது. வெறுமனே கூச்சலிட வைத்தது. இறுதியாகச் செல்லும் ஏவலர்களின் அணிகளும், தச்சர் குழுக்களும் மட்டுமே எங்கும் தென்பட்டனர். சுமைகள் கொண்டுசெல்லும் அத்திரிகளும் வண்டிமாடுகளும் அவற்றின் சாணியும் நீரும் கலந்த மணத்துடன், வால்சுழலல்களுடன் ஊடுகலந்திருந்தன. பணிக்கூச்சல்கள், வண்டிகளின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110084