Daily Archive: June 12, 2018

பிச்சை

அன்புள்ள ஜெ,   பிச்சை எடுப்பவர்களைப்பற்றிச் சொல்லியிருந்தீர்கள். அலைபவர்களை அமர்ந்தவர்கள் அறியலாகுமா? கட்டுரையில்   தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வண்ணாரப்பேட்டையில் ஒரு பிச்சைக்காரர் இறந்து கிடந்தார். அவருடைய கோணிப்பையில் இருபத்தெட்டாயிரம் ரூபாய் வெறும் நாணயங்களாகவே இருந்தது அன்றைய தினத்தந்தியின் செய்தி.     நானெல்லாம் கிராமத்திலிருந்து வந்தவன். நான் சிறு வயதில்(70 மற்றும் 80 களில்)  பார்த்திருக்கிறேன், ராப்பிச்சைக்காரர்கள்  வருவார்கள், வீட்டில் நிச்சயம் சாப்பாடு எடுத்துவைத்திருப்பார்கள். அநேகமாக சாதம்தான் இருக்கும்(ஒரு பிச்சைக்காரர் எல்லா வீடுகளிலும் “அம்மா வெஞ்சனம்” என்று கேட்பதைப் பார்த்திருக்கிறேன்) …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109955/

கன்னிநிலம் -கடிதம்

  அன்புடன் திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,   ‘கன்னி நிலம்’   கதைக்களம் மணிப்பூர் எல்லை என்றவுடன் முதல் அத்தியாயம் முடித்ததும் தொடர்வதை சற்றே நிறுத்தி, இணையம் மூலம் மணிப்பூர் பற்றி சில படங்களையும் காணொளிகளையும் பார்த்துவிட்டு அதன் பின்ணணியில் கதையைப் படிக்கத் தொடங்கினேன்.  காரணம் மணிப்பூர் என்றவுடன் லாட்டரியும் , கறுப்பு வெள்ளையில் “மணிப்பூரில் கலவரம். துப்பாக்கி சூடு” என்று வழக்கொழிந்த தகவல் படிமங்களைத்தவிர எதுவும் நினைவிலில்லை.  காடுகளின் வர்ணனைகளில் மனதில் காடு விரிந்தாலும் படங்கள் மேலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109995/

காஞ்சி ,ஊட்டி -கடிதங்கள்

  இனிய ஜெயம்,     தேங்காயை விட்டவரே மாங்காய்ப் பாலுண்டு மலை மேல் அமர இயலும் .  மலை மேல் மாங்காயுண்டு என கிஞ்சித்தும் அறியாதவரே தேங்காயுடன் தெருவில்  அமைய இயலும் . தேங்காயைக் கையில் காவியபடி ,மாங்காயையும் தேடி மலையேறும்  கிருஷ்ண பரமாத்மா விளாயாட்டை மற்றொரு முறை விளையாடி இருக்கிறீர்கள் .சிறப்பு .   டோரா ஆளை  அடையாளம் தெரியாமல்,பயந்து போய் அருண்மொழி அக்கா பின்னால் பதுங்கி இருந்தால்தான் நிலவரம் கலவரம் என்று பொருள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109942/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 12

பணிதன் காரி கையசைத்ததும் அனைத்து ஓசைகளும் நின்றன. சூழ்ந்திருந்த அத்தனை பொருட்களும் தேனீக்கூட்டம்போல் ரீங்கரிக்கத் தொடங்கின. அதுவரை இசையிலாடியவை எனத் தோன்றிய தழல்கள் பொருளிழந்து துவண்டு காற்றில் தெறித்து துணிகளை உதறுவதுபோல் ஓசையிட்டன. பொருட்கள் ஒவ்வொன்றாக கொண்டுவரப்பட்டு அன்னையின் முன் படைக்கப்பட்டன. சலங்கை கட்டப்பட்ட மாபெரும் பள்ளிவாட்கள். குருதி மொள்ளும் குடுவைகள். நிறைக்கவேண்டிய புதிய மண்கலங்கள். யுதிஷ்டிரரின் உடைவாளை ஒரு பூசகர் வந்து வாங்கிச்சென்றார். அதை மரத்தாலத்தில் வைத்து அன்னையின் முன் படைத்தார். பணிதன் காரி அன்னையின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109933/