Daily Archive: June 11, 2018

குமரகுருபரன் விருதுவிழா

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,இத்துடன்  குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது – 2018 நிகழ்வின் காணொளிகள் உங்கள் பார்வைக்கு…u விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது – 2018 எழுத்தாளர் ஜெயமோகன் உரை Jeyamohan speech https://www.youtube.com/watch?v=Qq1BsNMunn8 டி பி ராஜீவன் உரை T. P. Rajeevan speech https://www.youtube.com/watch?v=D02clr1R6kc கவிஞர் கலாப்ரியா உரை https://www.youtube.com/watch?v=XTBtNbuB-LY எழுத்தாளர் அஜயன் பாலா உரை https://www.youtube.com/watch?v=6EXqc3888BM காளி பிரசாத் உரை https://www.youtube.com/watch?v=5pVPCNTLYS4 கவிஞர் கண்டராதித்தன் ஏற்புரை https://www.youtube.com/watch?v=tV2Eb3d2r_I நன்றி கபிலன் – சுரேஷ்குமார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110074

அலையிடைப்படுதல்

அன்புள்ள ஜெ.,   தங்களுடைய “காஞ்சி முதல் ஊட்டி வரை” படித்தேன். இலக்கிய சிம்மாசனத்தில் நீங்கள் அமர்ந்து நீண்டகாலம் ஆகி விட்டது. இருந்தும் இத்தனை அமர்தலும் அலைதலும்.   இந்த “பிரசவ” வேதனையை உங்கள் ஒவ்  வொரு  படைப்புக்கும் அனுபவித்திருக்கிறீர்களா? இந்த அலைக்கழிவு எத்தனை நாளைக்கு? “வெண்முரசு” ல் இன்னும் எத்தனை  நாவல்கள் மீதம் இருக்கின்றன? “வெண்முரசு” க்குப் பிறகு வேறு திட்டம் ஏதும் உண்டா? நீங்கள் வெண்முரசு எழுதாமலும் இருக்கவேண்டிவரும். அதற்கும் மனதைத் தயார் செய்து கொள்ளுங்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109950

எழுத்தும் எதிர்வினையும்

  அன்பு ஜெ ,   தங்களின் படைப்பாற்றலை பெரிதும் வெளிப்படுத்தும் “வெண்முரசின்”நாவலின் ஊடே ,என் போன்றோரின், ‘முத்தென்ன தமிழின் ‘தாகம் தீர்த்து வரும் செயல் சாமனியமன்று. இதனுடைய வெளிப்பாடாக தங்களுக்கு எழுதிய சில மெயில் கள் , தங்களின் விவாத தளத்தில் வெளி வந்ததைப் பார்த்த பெருமிதத்தில் எங்களின் உறவினர்களுக்கென ஏற்படுத்தியுள்ள தளத்தில் பகிர முயன்றுள்ளேன்.   எதிர்பார்த்த தாயினும் கொஞ்சம் ஏமாற்றத்தையே அது கொடுத்ததென்றே சொல்ல வேண்டும். சில பொதுவான பாராட்டுக்கள் கிடைத்தது என்றாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109987

பாரத ஸ்டேட் வங்கி -ஒரு நிகழ்வு

ஜெ முகநூலில் Shankar Ji என்பவர் எழுதிய உண்மைச்சம்பவம் இது அருண் மனைவியின் பிரசவகால நேரத்தில் அவரது எஸ் பி ஐ அக்கவுண்டிலிருந்து ₹25000 பணம் எடுக்கவேண்டி மனைவியின் டெபிட் கார்டை வாங்கிக்கொண்டு பணம் எடுக்கச் செல்கிறார் கணவர். எஸ் பி ஐ ஏடி எம்மில் கார்டை நுழைத்து எல்லா பொத்தான்களையும் அழுத்தி முடித்தபின் பணம் கணக்கில் கழிக்கப்பட்டதாக மெசின் ஸ்லிப்பை தருகிறது. ஆனால் ஏ டி எம்மில் பணம் வரவில்லை. உடனே மனைவின் கணக்கிலிருந்து அவரது ஏ டி எம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110016

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 11

கருவறைக்குள் கரடித்தோல் பீடத்தில் மெலிந்த கால்களை மடித்து அமர்ந்திருந்த தலைமைப்பூசகர் செங்கர் காரி தன் மெலிந்த கைகளைத் தூக்கி வளைந்து உருக்குலைந்த சுட்டுவிரலை நீட்டி சுரேசரை அழைத்தார். அவருடைய முழங்கையிலும் கையிலும் நைந்த தசை தொங்கி கையின் நடுக்கத்துடன் சேர்ந்து அசைந்தது. சுரேசர் அருகே அணுகி வாய்பொத்தி உடல்வளைத்து பணிந்து கேட்க அவர் வெளியே சுட்டி ஏதோ ஆணையிட்டார். சுரேசர் விரைந்து சென்று யுதிஷ்டிரரிடமும் பின்னர் திரௌபதியிடமும் ஓரிரு சொற்கள் பேசிவிட்டு பாய்ந்த நடையுடன் வெளியே சென்றார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109928