Daily Archive: June 10, 2018

ரயில்மழை

சென்னை செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸில் ஏறிக்கொண்டேன். காலை முதலே உக்கிரமான மழை. இங்கு தென்மேற்குப்பருவமழைக்கே ஒரு கம்பீரம் உண்டு. வடகிழக்குப்பருவமழை நின்று நெடுநேரம் அறைந்து ஊற்றி மெல்ல ஓய்ந்து நெடுநேரம் இடைவெளிவிட்டு அடுத்த அறையை தொடங்கும். ஆனால் தென்மேற்குப்பருவமழை ஓய்வதேயில்லை. ஓய்ந்ததுமே எழும். அறைந்தறைந்து பொழியும். மீண்டும் கருமைமூண்டு பொதிந்து நாற்புறத்தில் இருந்தும் வீசிச்சொடுக்கும். கிளம்பியதும் மழையில். ரயில் நிலையமே முகில்கூட்டங்களால் மூடப்பட்டிருந்தது. இடி மின்னல் ஏதுமில்லை. ஒரு மாபெரும் அருவிக்கடியில் நின்றிருந்தது நகரம். கொஞ்சம் நனைந்துகொண்டுதான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110044

காலம்-காதல்-சிதைவு -வே.நி.சூர்யா

[1] தேடலும் செயலும் ஒன்றாக அலைந்துகொண்டிருந்த கொந்தளிப்பான காலங்கள் கடந்துவிட்டிருக்கின்றன. நகரம், அதிகாரம், கடவுள், உடல், வீடு என்பவைகளின் மீதிருந்த புனிதப் புகைமூட்டங்கள் மூர்கத்துடன் கலைக்கப்பட்ட காலங்கள் அவை. அக்காலங்கள் திரும்பப்போவதில்லை. எஞ்சியிருப்பதோ அக்காலத்தின் ஞாபகங்களும் ஏக்கங்களுமே. இப்போது 2010க்கு பின்பான ஒரு காலகட்டத்தில் நின்று கொண்டிருக்கிறோம். “எனக்கு எல்லாம் ஒன்றுதான்” எனும் குரலே இக்காலத்தின் குரல் (அப்படி சொல்லும்போதே ஒரு எள்ளல் வந்துவிடுகிறது). காலம் சுவீகரித்து வைத்திருந்த அத்தனை தத்துவார்த்தமான பின்புலங்களும் வரலாற்றின் நம்பகத்தன்மையும் ஆன்மீக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110024

எளிமையில் தன்மாற்றம் அடைந்த கவிஞன் – லக்ஷ்மி மணிவண்ணன்

“நீண்ட காலமாக ஒருவித விறைப்புத் தன்மையுடனேயே இருப்பவர்களைக் காணும்போது அச்சம் தோன்றி நிற்கிறது ” கண்டராதித்தன் கவிதைகள் ,சீதமண்டலம் ஆகிய இரண்டு கவிதைத் தொகுப்புகளைக்கடந்து கண்டராதித்தனின் திருச்சாழல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த போது அதன்முன்னுரையில் அவர் எழுதியிருந்த ஒரு வாசகம் இது.அந்த தொகுப்பில் மிகுந்தஎளிமையுடன் வாசகனின் முன்பாக நின்று கொண்டிருந்தார்.எளிமையெனில் கவித்துவத்தின் மெருகு கூடிய எளிமை.முற்றிலும் அனுபவங்களின் முன்பாகநிர்வாண நிலையில் நிற்க தயாராக இருக்கிறேன் என அறைகூவல் விடுப்பது போன்றஎளிமை.தன்னையே உதறி அசையில் உலர வைத்திருப்பது போலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110031

கண்டராதித்தன் -ஒரு கடிதம்

ஜெ, கண்டராதித்தனின் கவிதைகளை இப்போதுதான் கவனிக்கத்தொடங்கினேன். அவருடைய திருச்சாழல் விகடன் விருதுபெற்றதை அறிந்திருந்தேன். ஆனால் இங்கே கவிதைகளை எவரேனும் எங்கேனும் சுட்டிக்காட்டாமல் வாசிக்கத் தோன்றுவதில்லை. ஏனென்றால் கவிதைகள் பெரும்பாலும் குப்பையாகவே எழுதப்படுகின்றன. உழைப்பு இல்லாமல் எழுதமுடியும் என்பதனாலும், உடனடியான எதிர்வினையாக இருப்பதனாலும் எழுதுகிறார்கள். அதோடு ஏற்கனவே எழுதப்பட்டவற்றை கொஞ்சம் மாற்றி மீண்டும் எழுதமுடியும் என்பதனாலும் எழுதுகிறார்கள். ஆகவே கவிதை விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது என் வழக்கம். கவிதைகளை எவராவது சொன்னாலொழிய, சாம்பிள் வாசித்தாலொழிய வாங்குவதில்லை.ஏனென்றால் நூல்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110028

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ –10

உபப்பிலாவ்யத்தின் தென்மேற்கு மூலையில் அமைந்திருந்த சிறிய ஆலயத்தின் கொற்றவை ரக்தஃபோஜி என்று அழைக்கப்பட்டாள். மக்கள் நாவில் ரக்தை என்று. அந்நகரைவிட மிகத் தொன்மையானது அவ்வாலயம். முன்பு அப்பகுதி அடர்காடாக இருந்தபோது அதனூடாக கோடைகாலங்களில் மட்டுமே உருவாகி முதல் மழை விழுந்ததுமே செடியும்கொடியும் படர்ந்து மறையும் ஒற்றையடிப்பாதை ஒன்று இருந்தது. விராடபுரிக்கு அவந்தியிலிருந்து செல்லும் அப்பாதையை மலைப்பொருட்களை கொண்டுசென்று விற்கும் வேட்டுவ வணிகர் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். வணிகர் செலவு தொடங்கும் இளவேனிலில் அத்திரிகளும் கழுதைகளும் நடந்து நடந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109840