Daily Archive: June 9, 2018

நாளை சென்னையில் இரு நிகழ்ச்சிகள்…

            நாளை சென்னையில் இரு நிகழ்ச்சிகள். குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது கவிஞர் கண்டராதித்தன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாலை மூன்று மணிக்கு விஷால்ராஜா நாவல்குறித்து உரையாடுகிறார்.சுனீல்கிருஷ்ணன், சிவமணியன் ஆகியோர் எதிர்வினையாற்றுகிறார்கள் உரையாடல் நிகழவிருக்கிறது. அரைமணிநேரம் இடைவேளைக்குப்பின் மாலை ஆறுமணிக்கு  அதே இடத்தில் தொடர்ந்து விருவிழா நிகழும். கலாப்ரியா, டி.பி ராஜீவன் ,அஜயன் பாலா, காளிப்பிரசாத் ஆகியோருடன் நானும் பேசுகிறேன் நான் நாளைக் காலையில் சென்னை வந்துசேர்வேன். சத்யானந்த யோகமையத்தில் நண்பர்களுடன் தங்கியிருப்பேன். நாளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110019/

அயல் இலக்கியங்களும் தமிழும்

  ஜெ   நீங்கள் நடத்திய தஸ்தயேவ்ஸ்கி நூல் மொழியாக்க அரங்கிற்கு வந்திருந்தேன். வெளியே நின்றுபேசிக்கொண்டிருந்தபோது ஒருவர் தமிழ்ச்சூழலில் தல்ஸ்தோய் தஸ்தயேவ்ஸ்கி இருவரும் பெரிய அளவில் பேசப்பட்டதற்குக் காரணம் ருஷ்ய தூதரகம் அவற்றை ‘பிரமோட்’ செய்தமையாலும் அவை தமிழில் ருஷ்ய அரசால் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டமையாலும்தான் என்று சொன்னார். ஐரோப்பிய அமெரிக்க இலக்கியங்களில் மிகப்பெரிய செல்வங்கள் உள்ளன என்றும் அவற்றையெல்லாம் ஆங்கிலம் தெரியாததனால் தமிழ் எழுத்தாளர்கள் வாசிக்கவில்லை என்றும் சொன்னார்.   அரைமணிநேரம் அவரிடம்பேசிக்கொண்டிருந்தபோதே அவர் ஒரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109936/

“ஞானமும் சன்னதமும்’  – லக்ஷ்மி மணிவண்ணன்

“நீண்டகாலம் நண்பனாக இருந்து விரோதியானவனை வெளியூர் வீதியில் சந்திக்க நேர்ந்தது பதற்றத்தில் வணக்கம் என்றேன் அவன் நடந்து கொண்டே கால்மேல் காலைப் போட்டுக் கொண்டே போனான்.” – கண்டராதித்தன் நவீனத்திற்குப் பிந்தைய தமிழ்க்கவிதை அடைந்திருக்கும் நெகிழ்வான பாய்ச்சலுக்கு ஒரு நற்சான்று திருச்சாழல்.இப்படி ஒரு கவிஞன்தோன்றுவதற்காகத்தான் தொடர்ந்து மொழியில் விமர்சனங்களும் கவிதை தொடர்பானகுறைகளும் அல்லற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன . வேறு எதற்காகவும் இல்லை. கவியின்  பன்மைத்தன்மையின் சுய வியாபகம் சூழ்ந்த மொழி, மனப்பரப்பின்மீது தனது பாய்ச்சலை நிகழ்த்தும்போது  குறைகளுக்கு அவசியம்இல்லாமற்போகிறது.திருச்சாழல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109981/

ராஜராஜ கோலான்

இனிய ஜெயம்   தி லாஸ்ட் ஹிஸ்டரி என்றொரு சானல் ”ஆதாரபூர்வமான” வரலாற்று ஆய்வுக்கே வராத ”மறைந்து ”போன வரலாறை உலகெங்கும் இருந்து ”கண்டுபிடித்து ”இந்த சேனல் முன்வைக்கிறது . சர்வாங்கமும் முட்டாள்தனத்தால் நிறைந்த ஒன்றைக்கூட ஆங்கிலம் வழியே கேட்கும்போது லைட்டாக புல்லரிப்பு ஏற்படத்தான் செய்கிறது . அசோகர் ஏற்படுத்திய நவ அறிஞர் எனும் இன்று வரை அறுபடாமல் தொடரும் அந்த அமைப்பை பற்றி உங்களுக்கு தெரியுமா ? இதோ அதன் ”ஆதாரபூர்வமான ”வரலாறு .அநேகமாக ஆசிரியர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109908/

யானை டாக்டர் பாடத்தில்

யானைடாக்டர் [சிறுகதை] -1 யானைடாக்டர் [சிறுகதை] 2 யானைடாக்டர் [சிறுகதை] 3   அன்புள்ள ஜெயமோகன் சார்,   வணக்கம். தமிழ்நாடு பள்ளிக்கு கல்வித் துறை  பாடத்திட்டத்தில்  பல  புதிய அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. உள்ளடக்க அளவில் மிகச் சிறப்பாக வந்துள்ளதாக பெரும்பாலான ஆசிரியர்கள், வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.   குறிப்பாக தமிழ் மொழி  பாடப் புத்தகங்கள்  மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  தமிழின் நவீன கவிஞர்களின்  கவிதைகள் (பிரமிள், ஞானக்கூத்தன்…)  தலை சிறந்த எழுத்தாளர்களின்  சிறுகதைகள் ( ஜெயமோகன் -யானை டாக்டர்) எஸ்.ரா.-ரப்பர் பந்து) என பாடநூல் வல்லுநர் குழுவினர்  புத்தகத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109944/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 9

சாத்யகி தன் மாளிகையை அடைந்தபோது தொலைவிலேயே ஊடி அமர்ந்திருக்கும் கைக்குழந்தைபோல அந்தச் சிறிய கட்டடம் ஓசையின்றி இருப்பதை கண்டான். அங்கு தன் மைந்தர்கள் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. அவர்கள் அரண்மனையிலிருந்து திரும்பிய பின்னர் வேறு ஏதேனும் பணிக்கு அமர்த்தப்பட்டிருக்கிறார்களா? அதன் பின்னரே தேர்களும் புரவிகளும் முழுமையாகவே முற்றத்தில் பரவியிருப்பதை நோக்கி அவர்கள் எங்கு சென்றிருப்பார்கள் என்று வியந்துகொண்டான். அவ்வெண்ணத்தால் துயில் விலக அவன் உடலெங்கும் எரிச்சல் குடியேறியது. தலைவணங்கி அணுகிய சூதனிடம் கடுமுகம் காட்டி கடிவாளத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109817/