Daily Archive: June 8, 2018

மரத்திலிருந்து கனியின் விடுதலை

சரஸ்வதி தன் கணவனுடன் ஒரு மகானைப் பார்க்கச் செல்கிறாள். மகான் நகரில் ஒரு வீட்டுக்கு வந்து தங்கியிருக்கிறார். தன் வாழ்க்கைக்கு ஏதாவது வழிசெய்வார் என அவள் எதிர்பார்க்கிறாள். அவள் பிறந்தவீடு எளிமையானது. புகுந்த வீடு அதைவிட எளிமையானது. நகரத்தில் ஒரு சிறிய ஒண்டுக்குடித்தனத்தில் கணவனுடனும் ஒரு குழந்தையுடனும் வாழ்கிறாள். அவள் கணவன் மூர்க்கமானவன். கெட்டவன் அல்ல, பொதுவான நடுத்தரவர்க்கத்து கணவர்களைப்போல தன்முனைப்பும் அறியாமையும் கடுகடுப்பும் கொண்டவன்.  “‘வெற்றிலை பாக்கு புகையிலை, மாதம் நூற்றுமுப்பது ரூபாய் சம்பளம், பதினைந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109975/

பகடையின் மாறிலி – அருணாச்சலம் மகராஜன்

  “சொல் இருமுனை கொண்டது. அதன் ஒலியெனும் முனையே புறவுலகை தொட்டுக்கொண்டிருக்கிறது. மறுமுனையில் குறிப்புஎனும் கூர் முடிவிலியை தொடுகிறது.” என்கிறது வெண்முரசு. சொற்களின் இணைவான படைப்பிலக்கியத்தில் சிறுகதை துவங்கி நாவல், காவியம், கவிதை என பல வடிவங்கள் உள்ளன. அனைத்து வடிவங்களும் புறவுலகு என்னும் முனையை தொட்டு விரிவாக்கி நம்முன் பரப்புபவையே, கவிதை தவிர்த்து. கவிதை என்னும் வடிவம் புறத்தைக் காட்டக் கூடாது என்றில்லை, ஆனால் அதோடு மட்டுமே நின்று விடுவது நல்ல கவிதை அல்ல. நனவுள்ளம், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109952/

கன்யாகுமரி- கடிதங்கள்

  அன்புள்ள ஜெ,   நலமா? நான் நலம்.   வெள்ளிக்கிழமை புத்தகக்கடைக்கு சென்ற போது உங்கள் வேறு சில புத்தகங்களோடு  கன்னியாகுமரியும் வாங்கக்கிடைத்தது. இரண்டு நாட்களில் படித்தேன். வாசிக்கும்போது மேலோட்டமான ஒரு கதையை போல இருந்தாலும் கொஞ்சம் ஆழமாக வாசிக்க வேண்டியிருந்தது.   சந்தர்ப்பம் கிடைத்தால் ஒருமுறை கன்யாகுமரி தேவியை நானும் தரிசிக்க வேண்டும். நேற்று அருகில் உள்ள  கடற்கரைக்குச் சென்று  வந்தேன்.   கன்னியாகுமரி தேவி உற்பட , விமலா, ரமணி,பிரவீனா ,ஷைலஜா என ரவியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109635/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 8

பிறை விளக்குகளின் சிறுசுடர்கள் நடுங்கி விரித்த ஒளியில் எழுந்து சுழன்ற நிழல்கள் தொடர காவலனுக்குப் பின்னால் சாத்யகி நடந்தான். அவனுக்குப் பின்னால் இரு ஒற்றர்களும் நிழல்களென ஓசையின்றி வந்தனர். அறைகள் அனைத்திலும் பெண்களிருப்பதை மெல்லிய பேச்சொலிகளிலிருந்து உணரமுடிந்தது. இரு வாயில்களில் முதுபெண்டிரின் தலைகள் எட்டிப்பார்த்தன. விழிகள் உணர்வுகளை உள்ளிழுத்துக்கொண்டு அணைந்திருந்தன. படிகளிலேறி இடப்பக்கம் திரும்பி சிற்றறை ஒன்றின் வாயிலை அடைந்த பின் ஏவலன் திரும்பி மெல்லிய குரலில் “பெருந்தோழி இதற்குள்தான் இருக்கிறார். அவர் எவரிடமும் பேசுவதில்லை, பிறரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109793/