Daily Archive: June 7, 2018

பிரமிள் படைப்புக்கள் முழுத்தொகுப்பு -முன்விலைத்திட்டம்

லயம் – பிரமிள் அறக்கட்டளை வெளியீடாக 2018 ஜூன் மாத இறுதிக்குள்  பிரமிளின்  ஒட்டுமொத்த எழுத்துக்களின் தொகுதிகள் வெளிவரவுள்ளன. தமிழ் புதுக்கவிஞர்களில் தலையாயவரும் தமிழ் அழகியல் சிந்தனையில் ஆழமான செல்வாக்கைச் செலுத்தியவருமான பிரமிள்  எழுதிய கவிதைத் தொகுதிகளும், எழுத்து முதல் லயம் வரையிலான இதழ்களில் அவர் எழுதிய விமர்சனக் கட்டுரைகளும் பல இடங்களிலாகச் சிதறியுள்ளன. அடுத்த தலைமுறையினரின்பொருட்டு இவை ஒன்றாகத் தொகுக்கப்பட்டுள்ளன.,   பிரமிள் படைப்புகள் (பதிப்பு : கால சுப்ரமணியம்)     தொகுதி-1 : கவிதைகள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109893/

சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்

  சுஜாதாவின் இலக்கிய இடம் தமிழ்ச் சிறுகதை இந்திய இலக்கியத்தில் மிக முக்கியமான ஓர் இடம் வகிக்கும் தகுதி கொண்டது. தமிழ் சிறுகதையாளராக சுஜாதா அதில் தவிர்க்க முடியாத இடம் வகிப்பவர். பல காரணங்களினால் சுஜாதாவில் இலக்கிய இடம் அடையாளம் காணப்படவோ அங்கீகரிக்கப் படவோ இல்லை. அக்காரணங்களை நமது கலாச்சாரத்தின் அரசியல் பின்புலத்தில் வைத்து விரிவாக விவாதிக்கவேண்டியுள்ளது. நான் என் முதல் சிறுகதை தொகுதியான ‘திசைகளின் நடுவே ‘ 1992 ல் வெளிவந்தபோது என் எழுத்தின் மீது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/174/

கண்டராதித்தன் கவிதைகள் :கடிதங்கள்

அன்புள்ள ஜெ விஷ்ணுபுரம் – குமரகுருபரன் விருது பெற்ற கண்டராதித்தன் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வெளியிட்டுவருகிறீர்கள். விருதுகள் நிறையவே வழங்கப்படுகின்றன. இவ்வாறு அக்கவிஞரை அனைத்துவகையிலும் கவனப்படுத்தி முன்னிறுத்தும் கட்டுரைகளை வெளியிடுவதுதான் மேலும் முக்கியமானது என நினைக்கிறேன். ஏனென்றால் இங்கே கவிஞர்களின் எழுத்துக்களை மிகக்குறைவானவர்களே வாசிக்கிறார்கள். பெரும்பாலும் கவிதை எழுதுபவர்கள் மட்டுமே கவிஞர்களை வாசிக்கிறார்கள் என நினைக்கிறேன். இருநூறுபேர் கவிதைவாசகர்கள் இருந்தால் ஆச்சரியம். ஆகவே ஒரு கவிஞனைப்பற்றிய குறிப்பு பிரசுரமாவதே அரிதாக உள்ளது. இந்நிலையில் ஒரு கவிஞரைப்பற்றி தொடர்ச்சியாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109915/

கைப்பை – மேலும் கடிதங்கள்

  ஆடம்பர கைப்பைகளின் வாழ்க்கை அன்புள்ள திரு.ஜெயமோகன் அண்ணாவுக்கு,   உங்கள் கட்டுரைக்குப் பின் “ரத்னா பாயின் ஆங்கிலத்தை” மீள் வாசித்தேன்.   முற்றிலும் மற்றொரு கோணத்தில் என் கருதுகோள்கள் மாறிப்போயின.   மீரா பாய் பற்றிய ஒரு முக்கிய சித்திரத்தை சுரா ஏற்படுத்தி இருப்பதை இப்போதுதான் உணர்கிறேன். தெருவில் அவருடைய மகளுடன் நடக்கும் பாவனையிலும், மக்களின் காதற் கடிதங்களை மறைவில் படித்துப் புளங்காகிதம் அடைவதிலும் சுரா அவர்கள் ஏற்படுத்தும் சித்திரம், ரத்னா பாயை பெரும்பாசாங்குக்காரி என்றளவில்  புரிந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109575/

ஆகாயத்தில் ஒரு பறவை — போரும் அமைதியும் குறித்து…

    அன்புள்ள  ஆசானுக்கு ,   நலம் தானே ? . கடந்த  பத்து நாட்களாக  போரும் வாழ்வும்  நாவல்  படித்து  முடித்தேன்.தல்ஸ்தோய் என்ற மாமனிதரின் தரிசனத்தை நான் கண்டடைந்ததை  வாசிப்பனுபவமாக  எழுதியுள்ளேன். தல்ஸ்தோய்யை    நான்  உணர்ந்துக்கொள்ள  நான் வாசித்தவற்றைக்கொண்டு அவரை அடைய முயற்சி செய்தேன் அதன் விளைவாக இதை எழுதுகிறேன்.       ” ஆகாயத்து  பறவைகள்  விதைப்பதில்லை  அறுவடை செய்வதுமில்லை ”   – பைபிள்   ரப்பர்  நாவலில்  பிரான்ஸிஸ்ஸின்  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109621/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 7

சாத்யகி கிளம்பி மாளிகையிலிருந்து வெளியேவந்து புரவியில் ஏறும்பொருட்டு காலைத்தூக்கி சேணத்தில் வைத்தபோது ஓர் எண்ணம் எழுந்தது. புரவி உபப்பிலாவ்யத்தின் கோட்டையைக் கடந்ததும் நேராகச் செல்லும் மையப் பாதையில் இருந்து விலகி பக்கவாட்டில் சென்ற சாலையில் பெருநடையாக விரைந்தான். அது படைநகர்வுக்கென உருவாக்கப்பட்ட சாலை. மலைப்பாறைகளைப் போட்டு யானைகள் தூக்கி இடித்த பெருங்கற்களால் இறுக்கி உருவாக்கப்பட்டது. அதன் இருமருங்கும் குறுங்காடு முழுக்க படைகளின் பாடிவீடுகள் செறிந்திருந்தன. குரலோசைகளின் முழக்கமும், வண்டிகளும் படைக்கலங்களும் பிறவும் எழுப்பிய ஓசைத்திரளும், எங்கும் அசைந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109780/