Daily Archive: June 6, 2018

காஞ்சி முதல் ஊட்டிவரை

  இருபதுநாட்களுக்குப்பின் இன்று [5-6-2018] நாகர்கோயில் வந்துசேர்ந்தேன். இமைக்கணம் முடிந்ததுமே வந்த நிலைகொள்ளாமை. எங்காவது செல்லவேண்டும் என்றிருந்தது. சினிமா வேலைக்காக ஒரு பயணம். அங்கிருந்து பெங்களூர் சென்றேன். நண்பர் தனா இயக்க நான் எழுதும் தேஹி என்ற கன்னடப்படத்தின் படப்பிடிப்பு சென்ற 21- 5-2018 அன்று தொடங்கியது. அதற்குச் சென்று இரண்டுநாள் அங்கிருந்தேன். படப்பிடிப்பு சூடு பிடித்தபின் எழுத்தாளர் அங்கிருப்பது தேவையல்ல, சுமையும்கூட. ஆகவே கிளம்பிவிட்டேன் தேஹி கேரள களரிக் கலை பற்றிய படம். கிஷோர் கதாநாயகனாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109864

தும்பையும் காந்தளும்- வெண்பா கீதாயன்

  நவீன எழுத்துகளில் மரபிலக்கியச் சித்திரங்களைக் கண்டடைவது களிப்ப்பூட்டுவது. பெரும்பாலான நவீனக் கவிதைகள் அன்றாடங்களுக்குள் சுருங்குபவை. ஆகவே இறந்தகாலத்திலிருந்து தங்களை அறுத்துக்கொண்டவை. அவற்றின் பொருள்விரிவு நிகழ்காலச்சூழலில் மட்டுமே உருவாவது. ஆகவே அவை நம்மை நம் நீண்ட மரபை நோக்கிச் செலுத்தி அதன் புறச்சுவையையோ அகச்சுவையையோ அளிக்க இயலாதவையாக இருக்கும். மரபை ஏதோ ஒருவகையில் சுட்டும் கவிதைகள் அவை எண்ணியிராத ஆழத்தை வாசகன் உள்ளத்தில் உருவாக்கிவிடுகின்றன. ஏனென்றால் ஒவ்வொரு சொல்லும், படிமமும் மரபில் பலநூறு வகைகளில் முன்னரே கையாளப்பட்டிருக்கும். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109861

ஏழாம் உலகம்- கடிதங்கள்

  ஜெயமோகன் அவர்களுக்கு,     தங்களது பதில் கடித்த்திற்கு நன்றி.     தங்களது ஏழாம் உலகம் படித்து முடித்தேன். படித்து முடித்த போது, என்னுள் எழுந்த உணர்வை விவரிக்க முடியவில்லை. அன்றாடம் நாம் பார்த்தும் பார்க்காத்து போல் போகின்ற மனிதர்களின் கதை. இனி என்னால் அவர்களை சாதரணமாக கடந்து செல்ல முடியுமா என்று தெரியவில்லை. ஒரு எழுத்தாளரால் இப்படியும் கூட சொல்லவொன்னாத உணர்ச்சிகளை, வாசகனுக்குள் எழுப்ப முடியுமா? அருமை.     படித்த பின்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109700

தூத்துக்குடி மாசு -கடிதம்

  அன்புள்ள ஜெ, மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற ஆவணப்படம் மிக முக்கியமானது. இதற்கு முன்பு தங்களது ஸ்டெர்லைட் மற்றும் அதன் தொடர்ச்சியாக வந்த கட்டுரைகளுடன் சேர்த்துக் கொள்ளத்தக்கது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மட்டுமல்ல அதனைச்சுற்றியும் அதைவிட அதிகமான மாசுக்களை உற்பத்தி செய்யக்கூடிய ஆலைகள் சிறிதும் பெரிதுமாக உள்ளன. தூத்துக்குடியிலிருக்கும் மற்ற ஆலைகளுக்கும் ஸ்டெர்லைட்க்கும் இருக்கும் முக்கிய வேறுபாடு, என்பது அதன் அமைவிடத்தில் இருக்கிறது. கிட்டத்தட்ட ஆறு முதல் ஒன்பது மாதங்கள்  காற்றின் திசை கடலை நோக்கி இருப்பதால் கடற் கரையிலிருக்கும் TAC, SPIC, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109815

அந்திமழை – ZHAKART இணைந்து நடத்தும் நூல் விமர்சனப் போட்டி  

  எழுத்தைக் கொண்டாடும் ஒரு முயற்சியாக அந்திமழை மாத இதழ் முன்னெடுக்கும் நூல் அறிமுக/விமர்சனப் போட்டி இது. இந்தப் போட்டியில் பங்குபெற தமிழ் கூறும் வாசக/எழுத்தாள நண்பர்களை பங்கேற்குமாறு அந்திமழை அழைத்து மகிழ்கிறது.     பரிசு விவரங்கள்:        முதல் பரிசு – ரூ.10000          இரண்டாம் பரிசு – ரூ.5000 [ இருவருக்கு]          மூன்றாம் பரிசு – ரூ.1000 மதிப்புள்ள புத்தகங்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109889

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 6

ஒவ்வொருவராக வெளியேறுவதை நோக்கி அமர்ந்திருந்த சாத்யகி அசங்கனிடம் “அவையில் நிகழ்ந்த எதைப்பற்றியும் உங்களுக்குள் பேசிக்கொள்ளவேண்டியதில்லை. இங்கு நிகழ்ந்தன அனைத்தும் உங்கள் நினைவில் நின்றால் போதும். சென்று அரண்மனையில் ஓய்வெடுங்கள். நான் அரசரையும் அமைச்சர்களையும் பார்த்துவிட்டு திரும்பிவருகிறேன்” என்றான். சாந்தன் “ஏன் நாங்கள் பேசிக்கொள்ளக்கூடாது?” என்றான். சினத்துடன் திரும்பிய சாத்யகி “ஏனென்றால் நீங்கள் பேசிக்கொள்ளத் தொடங்கினால் உடனே இளிவரல்தான் எழுந்துவரும். இந்த அகவையில் அரசுசூழ்தலும் அதன் பலநூறு சிடுக்குகளும் விசைநிகர்களும் புரிந்துகொள்ள முடியாதவையாகவே இருக்கும். தங்களால் புரிந்துகொள்ள முடியாதவற்றை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109753