Daily Archive: June 5, 2018

நாவல் விவாத அரங்கு, சென்னை

  ஊட்டி குருநித்யா நினைவுக் கருத்தரங்கில் விஷால்ராஜா நவீன நாவல் குறித்து ஓர் அரங்கை நடத்துவதாக இருந்தார். வேறு அரங்குகள் சற்று நீண்டு சென்றமையால் அவ்வரங்கு நடைபெறவில்லை. ஆகவே அதை சென்னையில் குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழாவன்று அதே அரங்கில் மாலை மூன்று மணிமுதல் ஐந்தரை வரை நடத்தலாமென முடிவெடுத்தோம்   விஷால்ராஜா முதலுரை வழங்குவார். சுனீல்கிருஷ்ணன், சிவமணியன் ஆகியோர் எதிர்வினையாற்றுவார்கள். சிறுவிவாதம் நிகழும். இலக்கிய ஆர்வலர் மூன்று மணிமுதல் இரு நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவேண்டும் என …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109831

வான்சரட்டுக் கோவணம் – ஏ.வி.மணிகண்டன்

[  I ] தனித்த மொழி கொண்ட ஒரு கவிஞனின் கவிதையுலகுக்குள் முதல் முறை நுழைவது, ஒரு பயணத்தில், புதிய இடத்தில் உறக்கத்திலிருந்து எழுவது போல. அத்தனை நிச்சயமாக வலது மூலையில் கதவும், நேர் எதிராக ஜன்னலும் இருக்குமென்ற அன்றாட வாழ்வின் பிரஞ்ஞை பதறி துடித்து விலகும் கணம் உருவாக்கும் பதற்றத்தோடு புதிய சூழலுக்குக் கண் விழிப்பது. சென்ற வருடம், சமீபத்தில் வெளி வந்த கவிதைத் தொகுதிகளை வாசிக்க முனைந்த போது முதல் முறை கண்டராதித்தனின் தொகுதியை வாசித்தேன். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109744

எழுத்தாளனின் விவாதம் -தடம் கேள்விபதில்

  கேள்வி; சமகாலம் குறித்து ஓர் இலக்கியவாதி கவனம் தரத் தேவையில்லை’ என்று ஒருபுறம் குறிப்பிட்டுக்கொண்டே அவ்வப்போது சமகால நிகழ்வுகள் குறித்து கருத்து சொல்வது, அதுகுறித்து சர்ச்சைகள் எழும்போது, ‘நான் வரலாற்றாய்வாளன் அல்ல; இது எழுத்தாளனின் தரப்புதான்’ என்று பதில் சொல்வது… இந்த முரணை எப்படிப் புரிந்துகொள்வது?   தடம்   உங்கள் கேள்வியிலேயே ஒருபகுதிதான் கேள்வி, இன்னொரு பகுதி அதற்கான விடை. ஓர் எழுத்தாளன் அனைத்து சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கும் எதிர்வினை ஆற்றக்கூடாது. அது அவனை சமகால விவாதங்களுக்குள் இழுத்துவிட்டுவிடும். அதற்கு முடிவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109385

நடிகையின் நாடகம்- கடிதங்கள்

நடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர் அன்பின் கங்கா, வணக்கம். உங்களுடைய கட்டுரையை ஜெமோவின் தளத்தில் வாசித்தேன். (I have read your articles on JK’s other works too.) Loved the flow of thoughts, thanks for sharing. என் கருத்துக்கள் சார்பற்ற அன்பின் நிரந்தரத்தை அறியும், வெளிக்காட்டும்  பெண் என்பவள் ஜெயகாந்தனின் முன்மாதிரி தலைவி. உறவு நிலைகளில் பெண்ணால் தனித்து (dispassionate) இயங்க முடிகிறது. எல்லாவற்றையும் கடந்து கொண்டே இருக்க முடிகிறது. ஆணிற்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109656

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 5

அவையில் ஒலித்த போர்க்கூச்சல்களையும் வாழ்த்தொலிகளையும் இளைய யாதவரும் அர்ஜுனனும் செவிகொள்ளவில்லை என்று சாத்யகிக்கு தோன்றியது. முற்றிலும் பிறிதொரு உலகில் அவர்கள் தனித்திருப்பதுபோல. அவர்களுக்கு மிக அப்பால் பிறிதொரு உலகிலென திரௌபதி அமர்ந்திருந்தாள். எத்தனை விரைவில் உணர்வெழுச்சியில் இருந்து கீழிறங்கினோம் என அவன் வியந்துகொண்டான். ஒரு சிறு எண்ணம் அனைத்து உணர்வுகளையும் திசைமாற்றிவிடுகிறது. அவன் இளைய யாதவரையே நோக்கிக்கொண்டிருந்தான். அங்கு எழுந்துகொண்டிருந்த அந்தப் போர்க்கூச்சல்களில் அவன் காணும் விளக்கிவிடமுடியாத குறைவை அவர் உணர்கிறாரா? சகதேவன் குனிந்து யுதிஷ்டிரரிடம் ஏதோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109689