Daily Archive: June 4, 2018

குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழா அழைப்பிதழ்

    குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018 மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக அளிக்கப்படும் குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது குமரகுருபரன் பிறந்தநாளான ஜூன் 10 அன்று சென்னையில் வழங்கப்படவுள்ளது. தமிழ் புதுக்கவிதைத்தளத்தில் செயல்படும் இத்தலைமுறைக் கவிஞர்களில் முக்கியமானவரான கண்டராதித்தன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்த கண்டராதித்தனின் இயற்பெயர் இளங்கோ. இதழியலாளர். கண்டராதித்தன் கவிதைகள் (2002) சீதமண்டலம் (2009) திருச்சாழல் (2015 என மூன்று தொகுதிகள் வெளியாகியிருக்கின்றன. ஐம்பதாயிரம் ரூபாய் பரிசும் நினைவுச்சின்னமும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109820

ஏகமென்றிருப்பது

“குறைவான சொற்கள் கொண்டவர்கள் புதுக்கவிஞர்கள்” என்று என்னிடம் முப்பதாண்டுகளுக்கு முன் பிரமிள் சொன்னார். நான் அவருடன் உரையாட நேர்ந்த குறைவான தருணங்களில் ஒன்று அது. அவர் என்னை சுந்தர ராமசாமியை வசைபாடுவதற்கான முகாந்திரமாகவே பயன்படுத்திக்கொள்வார். ஆனால் வழக்கமான ‘பார்ப்பனவாதம்’ பற்றிய வசைகளை என்னிடம் சொல்லமாட்டார். நான் அதை பொருட்டாக நினைக்கமாட்டேன் என அவருக்குத்தெரியும். அவருக்கும் அது ஒரு பொருட்டு அல்ல. அவருக்கு அது ஒரு நல்ல தடி. அதைக்கொண்டு அவரால் சுந்தர ராமசாமியை எளிதில் ஓரம்கட்ட முடியும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109718

புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து

  நித்ய சைதன்ய யதி ஒரு முறை சொன்னார், “இரவில் அஜீரணத்துடன் தூக்கம் பிடிக்காமல் தவிக்கும்போது நேரம் போக்குவதற்காக எந்த நூலை நோக்கி உங்கள் கரம் இயல்பாக நீள்கிறதோ அதே நூலையே வாழ்வின் இக்கட்டுகளில் வழிகாட்டுதலுக்காகவும் நாடினீர்கள் என்றால் அதுவே பேரிலக்கியம் ஆகும்.” தல்ஸ்தோய், தாமஸ் மன், ஐசக் பாஷவிஸ் சிங்கர், வைக்கம் முஹம்மது பஷீர், தாராசங்கர் பந்தோபாயாய ஆகியோரின் நூல்களை வெறும் பொழுதுபோக்குக்காக, வேடிக்கைக்காக நான் படிப்பது உண்டு. தல்ஸ்தோயில் மிகவும் தமாஷான பல பகுதிகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/134

செல்வராணியின் பயணம் -கடிதம்

செல்வராணியுடன் ஒரு பேட்டி   அன்புள்ள ஜெ, வணக்கம் செல்வராணியின் இருசக்கர வாகனப்பயணம் குறித்த திரு கிருஷ்ணன் அவர்களின் பதிவினை வாசித்தேன். செல்வாராணி கடந்த ஊட்டி முகாமிற்கு திருச்சியிலிருந்து  இருசக்கரவாகனத்தில் வந்தபோதே நான் பிரமித்து அவரைப்பார்த்துக்கொண்டிருந்தேன். அதைவிடவும் ஆச்சர்யப்பட்டது அவரின் உணவுக்கட்டுப்பாட்டினைப்பார்த்து. முகாமில் பங்குபெற்ற நாங்கள் அனைவரும் அங்கு வழங்கப்பட்ட பல்வேறு விதமான சுவையான  சூடான உணவுகளை மகிழ்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் எந்த சலனமும் இல்லாமல் ஒரு சிறு கிண்ணத்தில் துருவிய தேங்காயும் வெல்லமும் கலந்து  சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அவரின் இந்தபயணமும் எனக்கு பெரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109629

தூத்துக்குடி மாசு

தமிழகத்தின் சூழியல்பிரச்சினைகள் குறித்த பேச்சுக்கள் 90களில் தொடங்கின. அப்போதே அதன் அனைத்து அமைப்புக்களுடனும் தொடர்புகொண்டிருந்தவன் நான். பல தளங்களில் செயல்பட்டவனும்கூட. எப்போதுமே என் சார்பு சூழியலாளர்களுடன்தான். ஆனால் இந்த ஆவணப்படம் முக்கியமான வினாக்களை எழுப்புகிறது என நினைக்கிறேன்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/109802

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 4

அறையிலிருந்து அனைவரும் வெளியே சென்றதும் சாத்யகி திரும்பி அசங்கனிடம் “இங்கு நிகழ்ந்த எதையுமே அவ்வண்ணமே பொருள்கொள்ள வேண்டியதில்லை. அரசுசூழ்தலின் கணக்குகள் நம்மால் புரிந்துகொள்ள முடியாதவை. இங்கு ஏன் இளைய யாதவர் இந்தத் திருமணப் பேச்சை எடுத்தார் என்று ஒருபோதும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது” என்றதும் சாந்தன் “புரிந்துகொள்ள முடிகிறது, தந்தையே. அவையில் பேரரசி கடுமையாக பேசிவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் உளம் மலரும் ஓர் இனிய செய்தியை தொடங்கிவைக்கிறார். இங்கு வரும்போது பேரரசியின் முகம் கடுமை கொண்டிருந்தது. செல்லும்போது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109679