Daily Archive: June 3, 2018

அலைபவர்களை அமர்ந்தவர்கள் அறியலாகுமா?

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு   பப்பா ராம்தாஸ் (Papa Ramdas) ‌‌குறித்து நீங்கள் அறிந்திருக்கக்கூடும். கேரளாவில் காசர்கோடில் உள்ள காஞ்ஞாங்காடை(kanhangad) சேர்ந்தவர். ஆன்மிக நாட்டம் கொண்டு நாடு முழுவதும் சுற்றித் திரிந்தார். அவருடைய அனுபவங்களின் தொகுப்பாக அவர் எழுதிய நூல் தான் in quest of god. இது தமிழிலும் இலவச தரவிறக்கமாக கிடைக்கிறது.   மிக எளிய மனம் கொண்டவர். நான் முன்பு தயானந்தரின் கீதை விளக்கத்தை முன்பு வாசித்தப் போது அனைத்தையும் ‘ஈஸ்வர பிரசாத’மாகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109637/

அந்தரப்பந்துகளின் உலகு- பிரபு மயிலாடுதுறை

வாசிக்க நேரும் புதிய கவிதையும் அறிமுகமாகும் புதிய கவிஞனும் வாசகன் இதுவரை சஞ்சாரித்த உலகில் இருக்கும் இன்னும் கண்டடையப்படாத பிரதேசம் ஒன்றையோ அல்லது பிரதேசங்களையோ கோடி காட்டி விடுகின்றனர். ஆர்வம் தீராத வாசகன் புதுப் பிராந்தியத்துக்குச் செல்லும் போது அவனுக்குப் பழக்கமாயிருந்த உலகம் புதிய பிரதேசங்களாலும் புதிய பிரதேசங்கள் பழகியிருந்த உலகத்தாலும் சமன் செய்யப்பட்டு ஆசுவாசம் கொள்கிறான். தான் அறிந்த உலகிற்கு மிக அண்மையில் இருந்திருக்கும் இப்புதிய பிராந்தியத்தைத் தான் அறியாது போனது எங்கனம் என வாசகன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109733/

இரு கடிதங்கள்

ஜெயமோகன் அவர்களுக்கு,   நான் தங்களது புதிய வாசகி. நான் முதலில் படித்தது நான் இந்துவா கட்டுரை. பின்னர் தங்களுடைய அனைத்து எழுத்துக்களையும் படித்த கொண்டிருக்கிறேன் முக்கியமாக ஆன்மீகம் சார்ந்தவையை. மிக்க நன்றி என்னுள்ளே இருந்த பல கேள்விகளுக்கான விடை கிடைத்துள்ளது. பல நூல்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. வட இந்தியா வட மொழி மேல் இருந்த அல்லது இப்போதுள்ள ஊடகங்களினால் ஏற்படுத்தப்பட்ட வெறுப்பு நீங்கியுள்ளது.     ஆனால் தங்களின் கருத்துக்களை என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் ஒன்றை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109623/

அவர் ஒருவர்தான்!

  பாடல் என்பது இந்தியத் திரைப்பட மரபில் மட்டுமே இருப்பதால் இதற்கு எந்த மேற்கத்திய மாதிரிகளும் இல்லை. எனவேதான் எந்த முன்மாதிரிகளும் இல்லாமல் இளையராஜா உருவாக்கும் இசைச் சித்திரங்கள் பிரமிக்க வைக்கின்றன. இவை இந்திய இசை மரபில் புதிய வடிவங்கள். புதிய கோர்வைகள்.   செழியன் இளையராஜாவின் இசை பற்றி எழுதிய கட்டுரை     திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான நண்பர் செழியனும் அவருடைய குடும்பமும் மேலையிசையில் பயிற்சி கொண்டவர்கள்.  அவருடைய மனைவி மேலையிசைப் பயிற்சி அளிப்பவர். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109766/

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 3

யுதிஷ்டிரர் சலிப்புடன் நகுலனிடம் “எங்கே சென்றாள்? இன்னும் வந்தணையவில்லையே?” என்றார். நகுலன் “அரசியின் இயல்பே மாறிவிட்டது. எதிர்ப்படும் அனைவரிடமும் நலம்பேசாமல் வரமுடிவதில்லை. இளையோர் என்றால் முகம் மலர்ந்துவிடுகிறது” என்றான். யுதிஷ்டிரர்  இளைய யாதவரிடம் “அரசி போரில் என்னைவிட தயக்கமும் சலிப்பும் கொண்டிருக்கிறாள். சின்னாட்களுக்கு முன் போரவையில் இந்தப் போர் தன் பொருட்டல்ல என்று சொல்லப்போகிறேன் என்றாள். நான் அது முறையல்ல என்று சொன்னேன். அவள் ஒப்பவில்லை. அவளுடைய உளப்போக்கு என்னால் புரிந்துகொள்ள முடிவதாக இல்லை” என்றார். இளைய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109650/