Monthly Archive: June 2018

சோழர்கலை

பிற்காலச் சோழர்காலம் தமிழ் சிற்பக்கலையின் மறுமலர்ச்சிக்காலமும் பொற்காலமும் ஆகும். தமிழ்நாட்டின் சிற்பங்களின் மூன்று முக்கியமான ஊடகங்களில் சோழர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள். கல்,சுதை,வெண்கலம் [மற்றும் பஞ்சலோகம்] இவை மூன்றும் மூன்றுவகையான நுண் அழகியல் ஓட்டங்களாக வளர்ந்து முழுமை பெற்றிருக்கின்றன. தமிழகத்துக் கலைகளைபப்ற்றிய விவாதங்களில் அதிகமாக பேசப்பட்டது சோழர்கலை குறித்தே. அது இயல்பும் ஆகும். சோழர்காலக்கலை என்பது அறியும்தோறும் பெருகுவது.   சோழர்கலைப்பாணியை எளிமையான வாசகர்கள் அறிவதற்கு உதவியாக இருக்கும் நூல்களில் குறிப்பிடத்தக்கது எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் எழுதிய சோழர்கலைப்பாணி என்ற நூல். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/2052

வாழும் சிற்பங்கள்

ஆத்திகர்கள் என்னும் பிழைப்புவாதிகள் சிற்பப்படுகொலைகள் மணல் வீச்சு நம் ஆலயங்களுக்கான ஐந்து நெறிகள் அன்புள்ள ஜெ,   தங்களுடைய சிற்பப் படுகொலைகள் (jeyamohan.in/327) என்ற கட்டுரையை சில ஆண்டுகளுக்கு முன்பு வாசித்த ஞாபகம் உண்டு. அதில் சிற்பங்கள் பற்றியும், அதன் நுணுக்கங்கள் பற்றியும் அறியாதவர்கள் அதனைப் புனருத்தாரணம் செய்கிறோம் என்ற பெயரால் ஏற்படுத்தும் அழிவுகளை விளக்கியிருந்தீர்கள். வாசிக்கும் போது அதிர்ச்சியாக இருந்தது. இன்றும் அந்த அழிப்புகள் தொடர்ந்து நிகழ்ந்துதான் வருகின்றது. நமது மன்னர்கள் விட்டுச் சென்ற முதுசொம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110654

பின்தொடரும் நிழலின் குரல், காந்தி

  பெருமதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு,     வணக்கம். தங்களின் நலம் அறிய விழைகிறேன். சென்ற வருடத்தில் இருந்து உங்கள் தளத்தின் மற்றும்  புத்தகங்களின் தீவிர வாசகனாக உள்ளேன். நான் உங்களுக்கு சில கடிதங்கள் எழுதி இருக்கிறேன்.  கடைசியாக எழுதிய கடிதம் தளத்திற்கு ஒவ்வாத, irelevant  ஆன கடிதம் என்று நினைக்கிறேன். நீங்கள் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருந்ததை போல் அக வயமான ஒரு விஷயத்தை பற்றி நான் விளக்கம் கேட்டு இருக்கிறேன் என பின்னர் நான் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110592

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 30

பூரிசிரவஸ் இடைநாழியினூடாக செல்கையில் சிற்றமைச்சர் மனோதரர் எதிர்பட்டார். “கனகர் எங்கே?” என்று பூரிசிரவஸ் கேட்டான். “பெருவைதிகர்களை அழைப்பதற்காக சென்றிருக்கிறார். பேரவையில் தென்னெரி எழுப்பப்படவேண்டும் என்றும், சிறு வேள்வி ஒன்று நடத்தப்பட வேண்டுமென்றும் சொல்லியிருக்கிறார்” என்றார் மனோதரர். அது எதற்கு என பூரிசிரவஸ் சொல்வதிலிருந்து உய்த்தறிய அவர் விழைவது தெரிந்தது. பூரிசிரவஸ் ஒன்றும் சொல்லாமல் நின்றிருக்க “இங்கிருப்பவர்கள் அவைமுறைமைப்படி வாழ்த்துரைக்கும் எளிய வைதிகர்கள். வேள்விக்குரிய வைதிகர்கள் அல்ல. அவர்களை முறைப்படி அரிசியும் மலரும் பொன்னுடன் அளித்து அரசகுடியினர் ஒருவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110622

மழைத்துளிகள் நடுவே நாகம்

  நகுலனின் உலகம் ஜெ   ஏழாண்டுகளுக்கு முன்னரே நான் உங்களிடம் கேட்டுக்கொண்டது உங்கள் தளத்தில் அரசியல், சண்டைகள் வேண்டாமே என்றுதான். ஏனென்றால் காலையில் எழுந்ததுமே படிப்பதற்குரியதாக உங்கள் இணையதளம் இருக்கிறது. காலையிலேயே அன்று முழுக்க கசப்படையச் செய்யும் எதையாவது வாசித்துவிட்டால் எதற்குடா வாசித்தோம் என்று இருக்கிறது. பெரும்பாலும் இவற்றால் எந்தப் பயனும் இல்லை. உடனடியாக விறுவிறுப்பாக எதையாவது வாசிக்க விரும்புபவர்களும், வேலைநேரத்துக்கு நடுவே வந்து நாலைந்து வரிகளை வாசித்துச்செல்பவர்களும் ஒருவேளை சண்டைச் சச்சரவுகளை விரும்பலாம். அவர்கள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110627

கே.எஸ்.ராஜா -கடிதங்கள்

இலங்கை வானொலி- கே.எஸ்.ராஜா அன்புள்ள ஜெ…   கே எஸ் ராஜா ரசிகன் என்ற முறையில்  அவர் குறித்த கடிதமும் உங்கள் பதிலும மகிழ்ச்சி அளித்தன..  எனககெல்லாம் அவர் குரல் ஏதோ போன ஜென்மத்து நினைவு போல மனதின் வெகு ஆழத்தில் உள்ளது.   .கடிதம் எழுதிய நண்பர் கிருஷ்ணன் , கேஎஸ் ராஜா இனக்கலவரத்தில் கொல்லப்பட்டதாக எழுதியிருந்தார்..  உண்மையில் அவர் கொல்லப்பட்டது இன யுத்தத்தில் அல்ல  சகோதர யுத்தத்தில்..   அவரைப்பிடித்து வைத்திருந்த அவரது எதிர்தரப்பு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110561

இலுமினாட்டி -கடிதங்கள்

இலுமினாட்டிகளின் பிரச்சாரகன்! அன்புள்ள ஜெ இலுமினாட்டிகளின் இலக்கணம் அறிய நிறைய படித்தேன்.ஆனால் எனது தலையில் இருக்கும் ஸ்க்ருக்கள் துரு பிடித்து போய்விட்டது என நினைக்கிறேன். அதனால் ஒன்றை கூட கழட்ட முடியாததால் இலுமினாட்டிகளின் அடிப்படை எனக்குப் புரியவில்லை. பின்பு யூடியுபில் இலுமினாட்டி பிரச்சாரகர் ஒருவரின் பேட்டியை காண நேர்ந்தது. அதில்  ஆளுமை உள்ள தலைவர்களாய் மூன்று பேரை அவர் குறிப்பிட்டார். ஒருவர் பிரபாகரன், இரண்டாவதுபெயர் காமராசர் மூன்றாவதாக அவர் குறிப்பிட்டது பழனி பாபா.இதை கேட்டதும்  ஒரு கணம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110596

‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 29

அவையில் அரசகுடிகள் அனைவரும் பால்ஹிகரை வணங்கி வாழ்த்து பெற்று முடிந்ததும் நிமித்திகன் மேடையேறி சிற்றுணவுக்கான பொழுதை அறிவித்தான். பால்ஹிகர் எழுந்து நின்று தன் மேலாடையை இழுத்து கழுத்தில் சுற்றிக்கொண்டு பூரிசிரவஸை விழிகளால் தேடினார். அவன் ஓடி அருகே சென்று வணங்கிநிற்க “யானை உணவுண்டுவிட்டதா?” என்றார். முதலில் அவனுக்கு புரியவில்லை. பின்னர் தன்னை மீட்டுக்கொண்டு “வருக, பிதாமகரே!” என்று அவரை அழைத்துச்சென்றான். வெளியே சென்றதும் அவருக்குப் பின்னால் வந்த கனகர் “நல்லவேளை! இவை இப்படி சிறப்பாக முடியுமென்று சற்றும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110620

ஆமீர்கான் – “நீரின்றி அமையாது உலகு” – அருண் மதுரா

2012 ஆம் ஆண்டு, ஆமீர் கான், தூர்தர்ஷனில், தன் முதல் தொலைக்காட்சித் தொடரான, “சத்யமேவ ஜெயதே (வாய்மையே வெல்லும்)” வைத் துவங்கினார். இதில், சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகள் பலவற்றையும் அலசினார். பிரச்சினைகளால் பாதிக்கப் பட்டவர்கள், அதைத் தீர்க்க முயலும் மனிதர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், அவற்றின் சமூகப் பரிமாணங்கள் எனப் பலதும் அலசப்பட்டன. சிறுவர் பாலியல் கொடுமை, பெண் சிசுக் கொலை, வறட்சி என பல தலைப்புகளில். இந்தத் தொலைக்காட்சித் தொடரின் முடிவில், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110646

சிறுபான்மையினர் மலர்கள்

அன்பின் ஜெ.மோ. அவர்களுக்கு     தினமணி ஈகைப் பெருநாள் மலர் 2018 வாங்கினேன். தோப்பில் முஹம்மது மீரானின் கதை இருந்தது. ”சொர்க்க நீரூற்று” எங்கோ படித்த நினைவு வேறு. ஒருவேளை மீள்பிரசுரம் செய்தார்களோ என்னமோ தெரியவில்லை. அது மட்டுமே கிடைத்த ஒரே திருப்தி. ஒரு ஒப்பீட்டுக்காக கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நாளிதழ், வார, மாத இதழ்கள் வெளியிட்டிருந்த தீபாவளி, பொங்கல் மலரை ஒரு பார்வை பார்த்தேன். பெரியதொரு வேறுபாட்டை உணர்கிறேன். இதை வேறெவரும் கவனித்தார்களா …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/110649

Older posts «