Daily Archive: May 29, 2018

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018

  மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக விஷ்ணுபுரம் அமைப்பு சென்ற ஆண்டுமுதல் அளிக்கப்பட்டுவரும் குமரகுருபரன் நினைவு விஷ்ணுபுரம் விருது இவ்வாண்டு கவிஞர் கண்டராதித்தனுக்கு வழங்கப்படுகிறது.   விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் கண்டராதித்தன். இதழியலாளர். இயற்பெயர் இளங்கோ. கண்டாச்சிபுரத்தை ஆண்ட சிற்றரசர் கண்டராதித்தர் நினைவாகக் கண்டராதித்தன் என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வருபவர் கண்டராதித்தன் கவிதைகள் (2002) சீதமண்டலம் (2009) திருச்சாழல் (2015) என மூன்று தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றில் திருச்சாழல் சென்ற இரண்டு ஆண்டுகளில் பெரிதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109615

செல்வராணியுடன் ஒரு பேட்டி

செல்வராணி 38 வயது, தனி நபர், திருச்சியில் வழக்கறிஞராக பணிபுரிகிறார். ஒரு மாதத்திற்கு முன் திருச்சியில் இருந்து ஒரு வெஸ்பாவில் கிளம்பி மணாலி வரை சென்றார், 30 நாட்களுக்கு பிறகு திருச்சி திருப்பும் வழியில் 24-5-2018 மாலை பத்து நண்பர்களுடன் நாமக்கல்லில் சந்தித்து அவருடன் உரையாடினோம். பொருத்தமாக சுபாஷ் சிலையின் முன்பு ஒரு படமும் எடுத்துக்கொண்டோம். அறிந்த நபர்களை முழுவதும் நாம் அறிவதில்லை, மிக நெருங்கிய நண்பர்களிடம் கூட நாம் ஊகிக்காத நடத்தை வெளிப்படுவதை அவ்வப்போது காணலாம், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109537

மின்னல் மலர்த்திடும் தாழை

  கல்லூரி நூலகத்தில் ஒரு புத்தகக்தின் அட்டையில் நரைத்த புருவங்களோடு இருந்த இந்தத் தாத்தா ஒரு மந்திரவாதி என்பது அறியாமல் இவரது ‘அபிதா’வுடன் அறிமுகமானேன். என் அப்பா அந்தப் புத்தகத்தைப் பார்த்து விட்டு லா.ச.ரா, தான் பணிபுரிந்த பஞ்சாப் நேஷனல் வங்கியில்தான் பணிபுரிந்தார் என்று கூறிவிட்டு மேலதிகமாக ‘லா.ச.ரா பார்ப்பதற்கு மகாபாரதத்தில் வரும் பகதத்தன் போலிருப்பார். பகதத்தன் எனும் மன்னனுக்கு வயோதிகம் காரணமாக புருவங்கள் நரைத்து இமை இரப்பைகள் தொங்கி விழிகளை மூடியிருக்கும், எனவே விழித்து நோக்கவென பட்டுத்துணியால் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109528

அம்மா வந்தாள் – கடிதங்கள்

வேட்கைகொண்ட பெண் ஜெ அவர்களுக்கு வணக்கம். நலம் தானே. குழந்தைகளின் விடுப்பு என்பதால் வாசிப்பும் சற்றே விடுபட்டுவிட்டது. சென்ற வாரம் தற்செயலாய் புத்தகக்கடையில், அட்டை ஈர்த்தது என்று அம்மா வந்தாள் வாங்கினேன். கேள்விப்பட்டதுண்டு. வாசிக்க வேண்டிய புத்தக வரிசையில் இருந்தது. ஒரே மூச்சில் படித்து முடித்தேன். முன்னுரையில் சுகுமாரன் அவர்கள் குறிப்பிட்டது ஆச்சரியமாய் இருந்தது., இக்கதையை எழுதியதால், தி.ஜ அவர்கள் ஊர் விலக்கம் செய்யப்பட்டார் என்பது. இருவேறு உணர்வுகள் எழுந்தன. ஒரு கதையை எழுதியதாலா ஊர் விலக்கம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109499

வேணுவின் கவிதை

தவளை நீங்கள் நிறுத்தக்கூட தேவையில்லை. அது உங்களால் இயலாத காரியம். விரைந்து செல்லும் உங்கள் காலச்சக்கரம் வேறு கதியில் சுழல்கிறது.   ஆனால் ஒரே ஒரு மந்திர கணம் நீங்கள் தயங்கினால் போதும் நான் தப்பித்துக் கொள்வேன்.   இதோ ஒரே ஒரு தாவல்தான் தவளை நான் பிழைத்திருப்பேன்.   (வேணு வேட்ராயன்)     இது சமீபத்தில் நான் படித்த நல்ல கவிதை, காலச் சக்கரம் என்கிற சொல் தடத்துவ எடை கூட்டப்பட்டது  போல முதலில் பட்டது, படித்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109508