Daily Archive: May 28, 2018

செந்நா வேங்கை

வெண்முரசு நாவல்வரிசையின் பதினெட்டாவது நாவல் செந்நா வேங்கை. யானை மத்தகத்தைப் பிளந்து குருதி உண்டு முகவாய் நக்கிப் படுத்திருக்கும் அன்னை வேங்கை குருக்ஷேத்திரப் போர்நிலம்தான். அங்கே அறமும் மெய்ஞானமும் வென்றிருக்கலாம். ஆனால் எல்லாப் போர்க்களங்களும் அடிப்படையில் கொலைவெளிகள் மட்டுமே.   இதை தொடங்குவதற்காக சிலநாட்களாகவே ஊரில் இல்லாமல் அலைந்துகொண்டிருக்கிறேன். இன்று தொடங்கிவிட்டேன். சில பகுதிகளாவது முன்னால் சென்றால் நன்று.   ஜூன்மாதம் ஒன்றாம் தேதி முதல் வெளிவரும்.   ஜெ   வெண்முரசுவிவாதங்கள்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/109496

விரல்நுனி வண்ணத்துப்பூச்சி

நண்பர்களே, இந்த அவையில் நான் மிக மதிக்கும் பெரியவர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். நான் எப்போதும் சொல்லிவரும் நிகழ்வொன்றுண்டு. கொற்றவை என்ற நாவலை நான் எழுதும்போது எனக்கு உந்துதலாக இருந்தது ஒரு பாட்டு. ‘கண்டேன் எங்கும் பூமகள் ஊர்வலம்’ என்ற இளையராஜாப்பாடல். எப்படியோ அந்தப்பாடல் அந்நாவலுக்குரியதாக ஆகிவிட்டது. ஒவ்வொருநாளும் அந்தப்பாடலை பலமுறை கேட்பேன். அது உருவாக்கும் வெறும் மனச்சித்திரங்கள் வழியாக கொற்றவைக்குள் சென்று விடுவேன். இப்படி மாதக்கணக்கில். நூற்றுக்கணக்கான முறை. அந்நாவல் முடியும்வரை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/33397

நடிகையின் நாடகம்- கங்கா ஈஸ்வர்

ஜேகே ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள் நாவலின் முன்னுரையை இப்படி தொடங்குகிறார். ”காதல் என்பது மிகவும் அற்பமானது அது பிறப்பதற்கும் அழிவதற்கும் அற்பகாரணங்களே கூட போதும்” என்று. காதல் என்பது மானுடத்தின் உயர்பண்பு, தெய்வீகமானது என்ற புரிதல் நமக்குண்டு. காதலை சாதியை மதத்தை வளர்க்கவோ அழிக்கவோ முக்கியமான கருப்பொருளாக இன்றைய சமூகம் பயன்படுத்திக் கொள்வதையும் கண்டுகொண்டிருக்கிறோம். இந்நிலையில் “காதல் மிக அற்பமானது” என்ற வரி ஒரு அக அதிர்வை உருவாக்குகிறது. “அந்தக் காதல் வளர்வதற்கும் மேன்மையுறுவதற்கும் அதனுடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109472

செவிநுகர் கனிகள்

  அன்புள்ள ஜெ, ஒரு ஆட்டோவின் பின்புறம் எழுதியிருந்தது “உமக்கு எதிரான ஆயுதங்கள் கை கூடாமல் போம்” என. உங்களையே நினைத்துக்கொண்டேன் . நிற்க. பீம்சென் ஜோஷி கேட்டிருக்கிறீர்களா? தங்கள் தளத்தில் தேடியபோது இல்லாதது சற்றே ஏமாற்றம் அளித்தது. தான் வாழும் காலத்திலேயே தனக்கான உச்சபட்ச அங்கீகாரங்கள் அனைத்தையும் கண்டவர், பாரத் ரத்னா உட்பட.பீம்சென் ஜோஷியை கேட்க ஆரம்பிப்பதற்கு அவருடைய கன்னட பஜன்ஸ் சரியான நுழைவாயில். You Tube ல் கிடைக்கிறது. “பாக்யதா  லட்சுமி பாரம்மா”  வித்யாசமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109493

முயலின் அமைதி – கடிதங்கள்

  அமைதிப் பிரதேசத்தின் முயல்  :    ஹஸ்ஸான் ப்ளாஸிம் அன்புள்ள ஜெ   நலம்தானே?     நானும் நலம். ஹசன் பிளாஸிமின் கதை முக்கியமான ஒரு படைப்பு. அதை மொழியாக்கம் செய்த நரேன் அது தன் நண்பர்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொல்லியிருந்தார். ஏன் என்று நான் குழப்பம் அடைந்தேன். ஆகவே சில நண்பர்களிடம் அக்கதையைக் கொடுத்தேன். வழக்கமான சிற்றிதழ் வாசகர்கள் அதை நல்ல கதை அல்ல என்று சொன்னார்கள்.ஏனென்றால் இலக்கியக்கதையில் இந்தவகையான கொலை, அரசியல்கொலை போன்றவை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109512