Daily Archive: May 27, 2018

ஆடம்பர கைப்பைகளின் வாழ்க்கை

ரத்னாபாய் அவள் இளமையில் நகரத்திலேயே மிக அழகான பெண்ணாக இருந்தாள். அவளுடைய நிறமும் உயரமும் உள்ளூர் இளைஞர்களைப் பித்தாக்கியது. அத்துடன் படிப்பில் மிகவும் கெட்டிக்காரி ஊரிலேயே நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவது அவள் மட்டும் தான். ஒவ்வொரு நாளும் அவள் அன்னை மீராபாய் தன் மகளை ‘எப்படி என் பொக்கிஷம்?” என்ற பாவனையுடன் நடக்கக் கூட்டிச்செல்வாள். அவளைப்பார்ப்பதற்காக இளைஞர்கள் சாலையோரங்களில் குவிந்து கிடப்பார்கள் ரத்னாபாய்க்குக் காதல் கடிதங்கள் வந்து குவிந்துகொண்டே இருந்தன. அவள் அம்மா மீராபாய் அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109380

ஊமைச்செந்நாய்- ஒரு கடிதம்

ஊமைச்செந்நாய்– 1 ஊமைச்செந்நாய் -2 ஊமைச்செந்நாய் -3 கடலுக்கு மீன் பிடிக்கச் செல்பவனுக்குக் கூட ,  முடியாத நாள் என்று புயலடிக்கும்  நாள் என்று ஒன்று உண்டு.  எனக்கோ எந்த மருந்துக்கும்  கேட்காத ஆஸ்டின் அலர்ஜியின் பாதிப்பில்  தும்மிக்கொண்டே இருக்கும்  நாட்களிலும்,  ஜெயமோகன்   எழுத்துக்களைப் படிக்காமல்  இருக்கமுடிவதில்லை. ஏதோ  ஒருகாரணத்தினால்,  ஊமைச்செந்நாய்  எனும்  கதை மட்டும் படிப்பதிலிருந்து  நழுவிக்கொண்டே இருந்தது.  கடந்த வியாழன் மாலை,  உடற்பயிற்சி செய்யும்பொழுது,   பவா செல்லத்துரை யூடியூபில் (ஸ்ருதி டிவி)  இந்தக் கதையை சொல்வதைக் கேட்போம்  என்று கேட்டேன்.  கேட்டு முடித்தபிறகு,  கதைசொல்லும் ஆரம்பத்தில்  பவா சார் சொல்வதுபோல்  என்னை  அந்தக் கதை   உள்ளுக்குள் சென்று  குடைய ஆரம்பித்துவிட்டது . பவா சொன்னதற்குமேலும்,  கதையில் இருக்கும்  சித்தரிப்புக்களை,   நுணுக்கங்களை நானே நேரடியாக  வாசித்து அனுபவிக்காமல்  என்னால்  தூங்கமுடியாது.  உறங்குவதற்கு முன்இருக்கும்  வேலைகளை ஒதுக்கிவிட்டு,  ஊமைச்செந்நாய் கதை படித்தேன்.   வேட்டையாடும் வில்சன் துரை,  அவனிடம் சொற்கள் சொற்களாகப் பேசும்  ஊமைச்செந்நாய் என்னும்  வேட்டைத்துணைவன்.   அவர்கள் இருவரும்வேட்டைக்கு சென்று , கொம்பன்  என்னும்  யானையைக்  கொன்றார்களா ,  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109477

ஆணவமும் எழுத்தும்

அன்புள்ள ஜெ   எப்போதும் உங்கள் சீண்டலை நான் ரசித்தே வந்திருக்கிறேன். பொதுவான உங்கள் உரைத் தொடக்கங்களும் அவ்வாறே அமைகிறது. அப்படி காயப்படுத்திவர்களாகவே உங்களை உருவாக்கியவர்களை நீங்கள் தொடர்ந்து குறிப்பிட்டிருக்கிறீர்கள். அன்றைக்கு ஊட்டியில் நடந்த உரையாடலில் நான் சுனீல் கிருஷ்ணனிடம் கூறிபடி அப்படியான கவிதைகளை தேர்ந்தெடுத்ததை நன்று என்று தோன்றும்படியான இடத்தில் என்னை நிற்கவைத்தீர்கள். என் வாழ்வின் முக்கியமான தருணங்களில் ஒன்று. அதே சமயம் இன்னும் சிலருக்காவது என்னால் உண்டான உரையாடல் உதவியிருக்கும் என்கிற மகிழ்ச்சியும் உண்டாகிறது. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109491

பேச்சும் பிரார்த்தனையும்- கடிதங்கள்

ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்-     யியூன் லீ ஜெ   யியுன் லீயின் ஆயிரம் ஆண்டுப்பிரார்த்தனைகள் நான் சமீபத்தில் வாசித்த மிக முக்கியமான கதை. ஒரு கதைக்குள் எத்தனை உட்கதைகள் என எண்ணி எண்ணி வியந்தேன். பிரச்சினை மொழி என முதலில் தோன்றுகிறது. அப்பா அவருடைய நாவை அடக்கவேண்டிய வேலை காரணமாக பேசமுடியாதவர் ஆகிறார். பேசாமலேயே அவர் மனைவி அன்பை அறியாமல் அழிகிறார். பேச நேர்ந்தமையால் அவரும் அழிகிறார். பேசமுடியாத அவரால் பேசுபவளாக மகளை வளர்க்கமுடியவில்லை. ஆகவே அவள் அமெரிக்காவில் தன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109503