Daily Archive: May 25, 2018

தூத்துக்குடி

  ஊரிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் அப்பால், செய்திகளிலிருந்து மிகமிக அப்பால், தனிமையில் இருக்கிறேன். இங்கிருந்து நோக்குகையில் இப்போதிருக்கும் தவிப்பையும் வெறுமையையும் மேலும் செறிவூட்டுகிறது தூத்துக்குடிப் படுகொலைகள். எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாத நேரடி வன்முறை இது.  உரிமைக்காகப்போராடும் மக்கள் ஒடுக்கப்படுவதற்கு ஜனநாயகத்தில் இடமில்லை. நேரடியான கொலை என்பது ஒரு வெறியாட்டம்.  எவராயினும் இதை நிகழ்த்தியவர்கள், இதற்கான பொறுப்பை ஏற்கவேண்டியவர்கள் தண்டிக்கப்படவேண்டும். இல்லையேல் ஜனநாயகம் அழியும். நீண்டகால அளவில் அனைத்துப் பண்பாடுகளும் அழியும். இத்தருணத்தில் என் துயரையும் கொதிப்பையும் மட்டும் பதிவுசெய்கிறேன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/109483

பொருள்மயக்கம்

  பொருள்மயக்கம் என்பதை ஒரு குறையாகவே பொதுவான வாசிப்பில் சொல்கிறோம். ‘ஆசிரியர் சொல்லவந்ததை தெளிவாகச் சொல்லியிருக்கிறார்’ என்ற வரியை அடிக்கடி மதிப்புரைகளில் பார்க்கிறோம். ஆனால் இலக்கியத்தில் அவ்வாறு சொல்லவந்த விஷயம் என்ற ஒன்று இல்லை. இலக்கியம் எப்போதும் ஆசிரியன் அறியவிரும்பும் ஒரு மன எழுச்சியை அவனே மொழியைக்கொண்டு வடித்துக்கொள்ள முயல்வதுமட்டுமே. நல்ல இலக்கிய ஆக்கங்களை ஆசிரியனாலேயே விளக்கிவிடமுடிவதில்லை. ஆகவே இலக்கிய ஆக்கங்களில் மொழி அடையும் புதிய அர்த்தங்கள் முக்கியமானவையாகின்றன. மொழியில் சொல்லுக்கும் பொருளுக்கும் இடையேயான உறவின் சாத்தியக்கூறுகளை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/9454

சென்னையில் பாவண்ணன் விழா

பாவண்ணனைக் கொண்டாடுவோம்! இந்திய- அமெரிக்க வாசகர் வட்டம் நடத்தும் பாவண்ணனைப் பாராட்டுவோம் “  நாள்: 26.05.2018 சனிக்கிழமை இடம்: கவிக்கோ அரங்கம்   6,சி.ஐ.டி.காலனி, 2ம் பிரதான சாலை மைலாப்பூர் சென்னை -600 004   நேரம்: 09.45 -10.45   வாழ்த்துப்பாடல் : ரவி சுப்பிரமணியன் வரவேற்புரை:    அ.வெற்றிவேல் தொடக்கவுரை:   பவா. செல்லத்துரை     அமர்வு:1   நேரம்: 10.45 – 11.45 பாவண்ணன் சிறுகதை எம்.கோபாலகிருஷ்ணன் கடற்கரய் ஒருங்கிணைப்பாளர்: ரவி சுப்பிரமணியன்     …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109389

கோவிந்தராஜ்

  அன்புள்ள ஜெ நலம்தானே…   எண்ணற்ற தருணங்களில் எழுத எண்ணியும் எழுதவில்லை. இன்று உங்கள் 25 ஆண்டு கால நண்பர் மரு.கோவிந்தராஜூ அவர்கனள சந்தித்தது ஊக்கம் தந்தது.   5 ம் வகுப்பு வரை மட்டுமே படித்த போதும் தன் குன்றா ஊக்கத்தால்CBSE boardல் 7ஆண்டுகள் போராடி +2 முடித்துள்ளார். முன்பு இவருக்கு physics என்ற வார்த்தையை கூட எழுத தெரியாது. +2 physics புத்தகம் 1200 பக்கங்கள். தானாகவே படித்து வென்றிருக்கிறார். பின்னர்   தன்  ஒரே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109446

வா மணிகண்டன் -கடிதங்கள்

வா.மணிகண்டன் – களப்பணியாளருடன் ஒரு பேட்டி   அன்பு ஜெயமோகன்,     வணக்கம். தங்களுக்குக் கடிதம் எழுதி நெடுநாட்களாகின்றன. வீட்டில் அனைவரின் நலத்தையும்(அருண்மொழி அக்கா, அஜிதன் மற்றும் சைதன்யா) விசாரித்ததாகக் கூறவும்.     வா.மணிகண்டனுடன் கிருஷ்ணன் உள்ளிட்ட நண்பர்கள் கலந்துரையாடியதை மிக அவசியமான ஒன்றாகவே நான் பார்க்கிறேன். தனிமனிதனாக வா.மணிகண்டன் மேற்கொள்ளும் பணிகளை அருகிலிருந்து பார்த்தவன்(பார்த்துக் கொண்டும் இருப்பவன்) எனும் வகையில், அவரை வியப்பவன் நான். கடந்த பத்தாண்டுகளில், தனி ஒரு மனிதனாக அவர் முன்னெடுத்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109450

வெண்முரசு சென்னை கலந்துரையாடல்

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,   மே மாத வெண்முரசு( சென்னை )கலந்துரையாடல்  வருகிற ஞாயிறு  மாலை 5 மணி முதல்  8 மணி வரை நடைபெற உள்ளது   இந்த கலந்துரையாடலில் காண்டீபம்  குறித்து  உரையாற்றுவோம்     வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..   நேரம்:-  வரும் ஞாயிறு (27/05/2018) மாலை 5:00 மணிமுதல் 08:00 மணி வரை   இடம்   சத்யானந்த யோகா மையம்   11, தெற்கு பெருமாள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109458