Daily Archive: May 24, 2018

வேட்கைகொண்ட பெண்

   அப்பு பவானியம்மாள் நடத்தும் வேதபாடசாலையில் தலைமை மாணவனாகவும் ஆசிரியனாகவும் இருக்கிறான். ஏழைப்பிராமணப்பையன்கள் சிலர் அங்கே வேதம் பயில்கிறார்கள். பவானியம்மாள் விதவை. கணவனின் நினைவாக அந்த வேதபாடசாலையை நடத்துகிறாள். மிக எளிய சூழல். ஊளைமோரும் புழுநெளியும் ஊறுகாயும்தான் உணவு. ஆனால் காவேரிக்கரையின் அழகிய சிற்றூரின் அக்ரஹாரம் அது. அப்பு அங்கே மனநிறைவுடன் வாழ்கிறான். பவானியம்மாளின் மருமகள் இந்து சிறுமிப்பருவத்திலேயே கணவனை இழந்த விதவை. கண்களில் இளமையின் குறுகுறுப்பும் காதோரம் இறங்கிய மென்மயிரும் காமம் மிக்க உதடுகளும் கொண்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109292

சில நாவல்கள் – அரங்கசாமி

ஜெ, முழுக்க இலக்கியம் பக்கம் திரும்பி தினமும் நீங்கள் எழுதும் இலக்கியம் மட்டுமேயான கட்டுரைகள் உருவாக்கும் மனநிலை மிக அரியது, பலதளங்களைத் தொட்டு நீங்கள் எழுதினாலும் முதன்மையாக நீங்கள் இலக்கிய ஆசிரியன், நாங்கள் முதன்மையாக இலக்கிய வாசகர்கள். கிண்டில் அருளால் 20 நாட்கள் உரிய மனநிலையும் வாய்க்க புனைவு வாசிப்பை மீண்டும் துவக்க முடிந்தது. கொமோரா லஷ்மி சரவணக்குமாரின் பெரிய நாவல், தேவிபாரதியின் நிழலின் தனிமைக்கு பின்பு தமிழில் வந்த சிறந்த நாவல் என்று நிச்சயமாக சொல்லலாம். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109431

ஓபி குப்தா, என்.எஃப்.பி.டி.இ- கடிதங்கள்

பட்டாபி, ஜெகன்,ஓ.பி.குப்தா அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். உங்கள் வலைத்தளத்தை வாசிப்பவன் என்றாலும் எதிர்வினைகளை பதிவிடுவதில்லை. தொடர்புடைய விஷயம் என்பதால் இதனை எழுதுகிறேன். ஒரு காலகட்டத்தின் முடிவு என்று தோழர் குப்தாவின் மறைவை கூறியிருக்கிறீர்கள். உண்மைதான். ஒர் மாபெரும் இயக்கத்தை வளர்த்தெடுத்த பெரும் மனிதர் அவர். தபால் தந்தி பேரியக்கத்தை ஒரு வழிநடத்தும் இயக்கமாக மாற்றிக் காட்டியவர். இப்போதுள்ள நிலையில் தாங்கள் ஒரு பொது மனிதனாக அவர் குறித்த விமர்சனம் சற்றே வருத்தம் தரக்கூடியதாக இருந்தாலும், குறிப்பிட்டக் காலத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109426

விசும்பு -கடிதங்கள்

  அன்புள்ள ஜெ, அலுவலகம் செல்லும்போதும், கிடைக்கும் உணவு இடைவேளையில் Kindle mobile app மூலமாக படித்து வருகிறேன்.விசும்பு கதைத்தொகுதியின் முன்னுரை என் கேள்விக்கான பதிலை தருகிறது என்றாலும், படித்த நான்கு கதைகளுமே முடியும்போது புதிய கதைக்கான தொடக்கம் போல நிற்கின்றன..இது சுவாரஸ்யத்துக்கானதா, வாசகன் யோசிக்க வேண்டுமென்பதற்காகவா? ஒரு கதைக்குள்ளேயே சொல்லப்படும் குறிப்புகள் நிறைய படிக்காமல் நம்பும்படி எழுத சாத்தியமில்லை எனக் காட்டுகின்றன. பூர்ணம் – கதை உரையாடலில் நிறைய அறிவியல், தத்துவக் குறிப்புகள் தொடர்புபடுத்தி இருந்தீர்கள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109356