Daily Archive: May 21, 2018

புதுவை கம்பன் உரை

கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி புதுவை கம்பன் கழகத்தில் பேசிய உரை, ஒலிவடிவம். கம்பன்கழக அமைப்பாளர்களுக்கும், அழைப்புவிடுத்த அரிகிருஷ்ணன் அவர்களுக்கும் அங்கே வந்து தங்கி ஓரு மகிழ்ச்சியான விழாநாளாக ஆக்கிய நண்பர்களுக்கும் நன்றி http://jeyamohanav.blogspot.in/2018/05/kamban-pondy-2018may13.html?m=1  

Permanent link to this article: https://www.jeyamohan.in/109399

பட்டாபி, ஜெகன்,ஓ.பி.குப்தா

  விஷ்ணுபுரம் வெளிவந்த நாட்களில் பட்டாபி திருவாரூரில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அருண்மொழியின் உறவினரான வீரபாண்டியன் பட்டுக்கோட்டையில். இருவரும் தொலைபேசித்துறை ஊழியர்கள். தீவிரமான தொழிற்சங்கவாதிகள். அவ்வாறுதான் அவர்களுடன் பழக்கம். நானும் அப்போது தொழிற்சங்கத்தில் இருந்தேன்   என்.எஃப்…டி.இ. இந்திய [வலது] கம்யூனிஸ்டுக் கட்சிச் சார்புடைய தொழிற்சங்கம். அன்று தொலைபேசித்துறையின் முதன்மைத் தொழிற்சங்கமாக இருந்தது. இந்தியாவின் மாபெரும் தொழிற்சங்கங்களில் ஒன்று. ஐம்பதாண்டுகள் தபால்-தந்தித்துறை இரண்டுக்கும் பொதுவானதாக இருந்தது. 1984ல் இருதுறைகளும் பிரிந்தபோது வலுவிழந்தது. இந்திய [இடது] கம்யூனிஸ்டுகள் தனியாக உடைத்துக்கொண்டபோது மேலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109335

முடிவின்மையில் நிகழ்பவை- ஒரு பார்வை

சமீபத்திய  கதைகளில், அதுவும் இளம் எழுத்தாளர்களின் கதைகளில்,  கவனிக்கதக்க  கதையாக முடிவின்மையில்  நிகழ்பவையை   சொல்லலாம்.  தேர்ந்த  எழுத்தாளனின் கதை போல பிசிறில்லாமல்  எழுதப்பட்டிருக்கிறது.  ஆனால்  சிக்கலான   உள்முடிச்சுகளை  கொண்டுள்ள  இந்தகதையை  விஷால்ராஜா  எழுத  எத்தனை  நாட்கள்  காத்திருந்தார்  என  தெரியவில்லை. ராபின்சன்  குருசோ  போன்று   பயணத்தை,   ஒரு ஃபன்டசியை  வெளிப்படுத்துகிற  கதை. தத்துவமும்  தொன்மமும்  கலந்த கதையாகவும்  இருக்கிறது.  ஸெல்மா  லாகர் லெவ்  எழுதிய தேவமலர் கதைபோன்று  கற்பனை  அழகியலையும்,  மோட்சப் பயணம்  போன்று   நீண்டபயணத்தையும்  நினைவுபடுத்துகிறது  இந்தக்கதை. விஷால்ராஜாவின் முடிவின்மையில் நிகழ்வது பற்றி கே ஜே அசோக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109285

இரு முதற் கடிதங்கள்

  அன்புள்ள ஜெயமோகன் சார்!   வணக்கம். நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். கடந்த சில வருடங்களாக உங்கள் வலைப்பக்கத்தைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்கள் தளத்தில் வௌியான அனேகக் கட்டுரைகளை படித்திருப்பேன். ‘ஏழாம் உலகம்’ நாவல் வாசித்திருக்கிறேன். ‘சோற்றுக்கணக்கு’, ‘நூறு நாற்காலிகள்’, ‘யானை டாக்டர்’ போன்றவை எனக்குள் மிக பாதிப்பை ஏற்படுத்திய சிறுகதைகள். நானும் குமரிக்காரன் தான். படந்தாலுமூடு. அந்தவகையில் எனக்கு ஓர் பெருமிதம் உண்டு. நம் ஊரிலிருந்து நீங்கள் இலக்கியத்தில் இத்தகைய சாதனை நிகழ்த்திக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109297