Daily Archive: May 19, 2018

அமைதிப் பிரதேசத்தின் முயல்  :    ஹஸ்ஸான் ப்ளாஸிம்

  முட்டை தோன்றுவதற்கு முன், நான் இரவில் சட்டப் புத்தகமோ அல்ல மதம் சார்ந்த புத்தகம் ஒன்றையோ படித்துவிட்டு உறங்கச் செல்வது வழக்கம். என் முயலைப் போலவே நான் அதிகாலையிலும் பொழுது சாயும் வேளையிலும்தான் அதிக சுறுசுறுப்புடன் செயல்படுவேன். சல்சால் அதற்கு நேர்மாறாக இரவு வெகுநேரம் விழித்திருந்து நடுமதியத்தில்தான் தூங்கி விழிப்பான். படுக்கையிலிருந்து எழாமலேயே தன் மடிக்கணினியை விரித்து முகநூலுக்குள் நுழைந்து நேற்றிரவு நடத்திய விவாதங்களுக்கு புதிதாக வந்திருக்கும் பின்னூட்டங்களை ஆய்ந்துவிடுவான், பிற்பாடுதான் குளியல் எல்லாம். அதற்குப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109214

மொழியாக்கம்- கடிதங்கள்

    இலக்கியமும் மொழியும்   அன்புள்ள ஜெயமோகன், தங்களின் இலக்கியமும் மொழியும் கட்டுரையில், “நாம் வாசித்திருக்கும் தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் அவ்வகையில் பாதிக்குமேல் நம் உருவாக்கங்கள். மூலமொழி அறிந்தவர் உள்ளத்தில் இருக்கும் சித்திரத்தை நம்மால் அடையமுடியாது” என்ற வரிகள் மொழியாக்க நூலைக்குறித்த சிறந்த அவதானிப்பு. இவ்வரிகள் என்னுள் பல்வேறு மனப்பாய்ச்சல்களை ஏற்படுத்தியது. தன்னுடைய தெலைவிலிருக்கும் கவிதைகள் நூலில், “எவ்வளவு தேர்ச்சி கொண்ட மொழிபெயர்ப்பாளனாலும் நெருங்கவே முடியாத கவிதைகள் இருக்கின்றன. கடினமான கவிதைகள் மட்டுமல்ல, சில எளிமையான கவிதைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109271

பினாங்கு போர்க்காட்சியகம்

அன்புள்ள ஜெ, சென்ற வாரம் வேலை நிமித்தமாக பினாங்கு வந்துள்ளேன். இங்குள்ள போர் காட்சியகத்துக்கு சென்றிருந்தேன். அதை பற்றிய பதிவு இது. http://manavelipayanam.blogspot.my/2018/05/blog-post.html என்றும் அன்புடன் செந்தில்குமார் அன்புள்ள செந்தில்   மலாயாவில் நிகழ்ந்த போர் தமிழகத்தின் அரசியல், பொருளியல், சமூக வாழ்க்கையில் பெரிய மாறுதல்களை உருவாக்கிய ஒன்று. என்றாவது தஞ்சை, புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் ஒரு முழுமையான வரலாற்றுச் சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள விழைந்தால் சென்றாகவேண்டிய இடம் பினாங்கு போர் அருங்காட்சியகம்.   ஜெ

Permanent link to this article: https://www.jeyamohan.in/109282

பாண்டி -கடிதங்கள்

கம்பன்,அரிக்கமேடு,பாண்டிச்சேரி வணக்கம். நலம் விழைகிறேன். இதைத் தட்டச்சு செய்கையில் விரல்கள் என் மனவோட்டத்தைத் தாண்டிச் செல்ல முடியாமல் திணறுவதை நானே உணர்கிறேன்.   முதலில் உங்களின் பேருரைப் பற்றி.. கம்பனை சூப்பர் ஹீரோவாக்கி அல்லது கதறக் கதற அழவைக்கும் சீரியல் இயக்குநராக்கி, மூச்சு விடாமல் பாடல்களை உரக்க ஒப்புவித்து பொதுமக்களின் கைத்தட்டலின் போது பெருமை பொங்க பார்க்கும் கம்பராமாயணப்   பேச்சாளர்கள் பலரையும், கம்பனில் ஆழங்காற்பட்ட, இலக்கியச்சுவையில் கம்பனின் பெருவடிவை, வீச்சை   எடுத்தியம்பும்  சில நல்ல பேச்சாளர்களையும் பார்த்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109276