Daily Archive: May 18, 2018

தஞ்சை இலக்கியக்கூடல்

நண்பர் கே.ஜே.அசோக் குமார் தஞ்சையில் தஞ்சை இலக்கியக்கூடல் என்னும் சந்திப்புநிகழ்ச்சியை ஒருங்கிணைத்துவருகிறார். அதில் (19/5/18) அன்று   சு.வேணுகோபாலின் படைப்புகள் குறித்த கலந்துரையாடல் நடக்க இருக்கிறது. இடம் தஞ்சை மெக்ஸ்வெல் பள்ளி வளாகத்தில். நேரம் மாலை 5.30      தொடர்புக்கு [email protected]

Permanent link to this article: https://www.jeyamohan.in/109378

ஊட்டி இருகதைகளின் முன்னுரை -நரேன்

  ஊட்டி கருத்தரங்குக்காக நரேன் இரு கதைகளை மொழியாக்கம் செய்திருந்தார். அவற்றின்மேல் ஒரு குறிப்பையும் எழுதி முன்வைப்பதாக இருந்தார். நேரமின்மையால் அது நிகழவில்லை. அக்குறிப்பும் கதைகளும் இப்போது பிரசுரமாகின்றன. வாசகர்கள் தங்கள் விவாதங்களை இங்கே எழுதலாம்   ஜெ   அன்புள்ள ஜெ.,   ஊட்டி காவிய முகாம் 2018ன் சிறுகதை அரங்கிற்காக சமகால உலகச் சிறுகதையாசிரியர்கள் இருவரை அறிமுகப்படுத்தும் பொருட்டு இரண்டு சிறுகதைகளை மொழிபெயர்த்திருந்தேன். இக்கதைகளை pdf வடிவிலும் word வடிவிலும் இவ்வஞ்சலுடன் இணைத்துள்ளேன்.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109210

அன்னா கரீனினா -செந்தில்

அன்புள்ள ஜெ, சில மாதங்களாக எழுதவேண்டும் என்று நினைத்திருந்த அன்னா கரெனீனா நாவல் வாசிப்பனுபவ்ம் பற்றிய பதிவு இது. http://manavelipayanam.blogspot.my/2018/05/1.html http://manavelipayanam.blogspot.my/2018/05/2.html http://manavelipayanam.blogspot.my/2018/05/3.html

Permanent link to this article: https://www.jeyamohan.in/109280

ஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்-     யியூன் லீ

    “நானொரு ராக்கெட் சயிண்டிஸ்ட்”, மிஸ்டர்.ஷீ தன் தொழிலைப் பற்றி  கேட்பவர்களிடம்  சொல்வார். அவர்கள் மலைப்பாய் பார்க்கையில், “ஓய்வுபெற்றவன்” என்று பிற்பாடு சேர்ப்பார்,  தன்னடக்கத்தோடு. மிஸ்டர்.ஷீ இந்தச் சொற்றொடரையே இணைப்பு விமானத்திற்காக  டெட்ராய்ட்டில் காத்திருந்தபோது ஒரு பெண்ணிடம், தன் வேலை என்ன என்பதை விளக்கும்  முயற்சியில் ஆங்கிலம் இவரை கைவிட, படம் வரைந்து  காட்டி கற்றுக்கொண்டார். அவள் வாய்விட்டுச் சிரித்து “ராக்கெட் சயிண்டிஸ்ட்” என்று கூவினாள்.   அவர் அமெரிக்காவில் சந்தித்த மனிதர்கள் பொதுவாகவே நட்பானவர்கள்தான்  என்றாலும், அவர் தொழில் என்ன என அறிந்ததும்  மேலும் அன்பு காட்டுவதால்  அவ்வார்த்தைகளை அவர் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திரும்பச் சொல்ல விரும்புவார். தன் மகளைப் பார்க்க இந்த வடமத்திய மாநில நகருக்கு அவர் வந்து சேர்ந்த ஐந்து நாட்களிலேயே சொல்லிக்  கொள்ளுமளவு அறிமுகங்களை செய்துக் கொண்டார். குழந்தைகளை கைவண்டியில் வைத்து தள்ளிக் கொண்டு செல்லும் தாய்மார்கள் இவரைப் பார்த்து கையசைப்பர்.  ஒரு வயதான தம்பதி, சூட் அணிந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109212

ஊட்டி கடிதங்கள்

அன்புள்ள ஆசிரியருக்கு, முகாமிற்க்கு அழைத்தமைக்கு மிக்க நன்றி. கலந்துகொண்ட நண்பர்கள் அனைவரும் மிக நெருக்கமாக பழகினார்கள். அனைத்தும் மேலாக ஆசிரியர்களைநேரில் கண்டது மிக நிறைவாக இருந்தது. கேட்க வேண்டும் என்ற கேள்விகள்மறந்து அவர்களின் இருப்பே நிறைவை அளித்தன. முதல் நாள் அமர்வில் காளியின் காரணம் சிறுகதை விவாதிக்கபட்டது.இதுபோல் கூட்டாக விவாதிப்பதின் மூலம் நாம் பார்க்காத பல கோணங்கள்மேலெழுந்து வந்தன. முக்கியமாக சிறுகதை விவாதம் மூலம் சிறுகதையின்வடிவங்கள் மிக விரிவாக விவாதித்தது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. கதையின்முக்கிய பேசுபொருளான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109268