Daily Archive: May 16, 2018

கண்ணகியும் மாதவியும்

    நண்பர் ஒருவர் அவரது தந்தையின் நாட்குறிப்புநூல் ஒன்று கிடைத்திருப்பதாகச் சொல்லி என்னிடம் காட்டினார். அவருடைய தந்தை நாற்பதாண்டுகாலத்துக்கு மேலாக ஒரு தமிழ்ச் சங்கத்தின் செயலாளர் பொறுப்பில் இருந்தார். அரசு ஊழியராக தொழிற்சங்கப் பணியும் ஆற்றினார். அந்தப் பணிகளைப் பற்றிய நடைமுறைக்குறிப்புகள் மட்டுமே அவரது டைரியில் இருந்தன. ஆங்காங்கே சில அரசியல் நிகழ்வுகளைப்பற்றிய செய்திகள். அபூர்வமாக சில அரசியல் கருத்துக்கள். திரைப்படங்கள் வெளியான தேதிகளும் அவற்றைப்பற்றி ஒற்றை வரிக்கருத்துக்களும் நிறையவே இருந்தன. புரட்டிச் செல்கையில் ஆர்வமூட்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108910

கெடிலக்கரை நாகரீகம் -கடிதங்கள்

கெடிலநதிக்கரை நாகரீகம்   அன்பின் சீனு,   ’’கெடிலக்கரை நாகரிகம்’’ நூலை வாசித்தேன். அதன் இணைப்பை அளித்ததற்கு மிக்க நன்றி.     ஒரு சிறு நதியை இவ்வளவு நுட்பமாய்ப் பின் தொடர ஒரு படைப்பு மனத்தால் மட்டுமே முடியும். மூன்று தாலுக்காக்களுக்குள் உற்பத்தியாகி ஓடி கடலுடன் சங்கமிக்கும் ஒரு ஆற்றை முகாந்திரமாய் கொண்டு அப்பிரதேசத்தின் பண்பாட்டையும் வரலாற்றையும் மிக நுட்பமாக எழுதியுள்ள சுந்தர சண்முகனார் போற்றுதலுக்குரியவர்.     பண்பாட்டின் வெவ்வேறு முகங்களை கல்வெட்டுக்கள் மூலமாகவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109186

செல்லம்மாள் -கடிதங்கள்

  செல்லம்மாள் – ஒருவாசிப்பு   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   புதுமைப்பித்தனின்  செல்லம்மாள்  சிறுகதையில் – காதலுமில்லை,  கத்தரிக்காயும்  தென்படவில்லை.  இச்சிறுகதை  ஒரு உளவியல்  த்ரில்லர் என்றே  தோன்றுகிறது.  தென்தமிழகத்திலிருந்து  செல்லம்மாள்  எனும் செடியை  வேரோடு  பிடுங்கி  சென்னையில்  நடுகிறார் பிரமநாயகம்.  அந்த  செடிக்கு  தேவையான  ஒளி,  நீர்,  காற்று,  உரம்   எதுவும் தரப்படவில்லை.  அவர் அழைத்து  வரும் வைத்தியர்களும் படு மோசம்.   பொருளாதார  வசதியற்ற குடும்பங்களில்  பெண்கள் வேலைக்கு செல்வது  நடைமுறை.  அதிகாலை  வேலைக்குபுறப்படும்  பெண்களின் குறிப்பு  கதையில் வருகிறது.  பூ தொடுக்கலாம்.  இட்லி சுட்டு விற்கலாம்.  அதற்கானசாத்தியங்கள்  செல்லம்மாளுக்கு கிடைத்ததா?  செல்லம்மாளின்  நோயால்  பிரமநாயகம்  நசிகிறாரா அல்லது பிரமநாயகத்தின்  இயலாமையால்  செல்லம்மாள்  சீரழிகிறாளா  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109188

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-53

அர்ஜுனன் சொன்னான். கிருஷ்ணா, நூல்நெறியை மீறி ஆனால் நம்பிக்கையுடன் வேள்வி செய்பவர்களுக்கு என்ன நலன் அமைகிறது? நிறையா செயலூக்கமா அமைவா? இறைவன் சொன்னார். உயிர்களின் இயல்பான நம்பிக்கை மூன்றுவகை. நிறை, செயல், அமைவு. அனைவருக்கும் நம்பிக்கை அவர்கள் உள்ளியல்புக்கு ஒத்தபடியே அமைகிறது. மானுடன் உளக்கூர் கொண்டவன். எப்பொருளில் நம்பிக்கையுடையவனோ அதுவே ஆகிறான். ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். செயலூக்கம் கொண்டவர்கள் யட்சர்களுக்கும் அரக்கருக்கும். பிறர் இறந்தோருக்கும் பேருருக்களுக்கும். நெறிநோக்காது பெருமிதமும் ஆணவமும் கொண்டு காமமும் விழைவும் அற்றவர்களாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109239