Daily Archive: May 15, 2018

அஞ்சலி பாலகுமாரன்

சென்னையில் விடுதியில் தங்கியிருந்தபோது சௌந்தரின் செய்தி வந்தது, பாலகுமாரன் மறைந்தார். சென்ற சில மாதங்களாகவே உடல்நலம் குன்றியிருந்தார். சாரு நிவேதிதா மகன் திருமணத்தில் சந்தித்தபின் நேரில் வீட்டுக்குச் சென்று சந்திக்கவேண்டும், நலம் விசாரிக்கவேண்டும் என நினைத்திருந்தேன். சௌந்தரும் குங்குமம் உதவி ஆசிரியர் கிருஷ்ணாவும் சொல்லிக்கொண்டிருந்தனர். நான் செல்லவிருந்தபோது ஒருமுறை அவர் ஆஸ்பத்திரியில் இருந்தார். சிலமுறை தட்டிப்போயிற்று. நாம் மனிதர்கள் என்றுமிருப்பார்கள் என்றே நம்ப விரும்புகிறோம். மாறாக எண்ணம உளம் ஒப்புவதில்லை.   பாலகுமாரனின் இல்லத்திற்கு நானும் சில்லென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109241

இலக்கியமும் மொழியும்

 [குறிஞ்சிவேலன]   வணக்கம் திரு ஜெயமோகன்   நான் படித்த முதல் மொழியாக்க நூல் சுந்தர ராமசாமி தமிழில் மொழியாக்கம் செய்த தகழி சிவசங்கரன் பிள்ளையின் செம்மீன். பிறகு ரஷ்ய மற்றும் பிரெஞ்சு மொழி நூல்களை ஆங்கில மொழியாக்கத்தில் படித்திருக்கிறேன். தற்போது அன்னா கரேனினா படித்துமுடித்தவுடன் ஒரு சந்தேகம் .   டால்ஸ்டாயின் நூல்களின் மூலம் ஒரு ரஷ்யனின் வாழ்க்கை முறையையும் அவன் எண்ணங்களையும் வழக்கங்களையும் என்னால் அறிய முடிகிறது. ரஷ்ய மொழியில் ஒரு வார்த்தை கூட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109178

காஞ்சனையும் மகாமசானமும்

    அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நேற்று உரையாட முடிந்ததில் மகிழ்ச்சி. இத்தோடு கட்டுரையின் இணையதள சுட்டியை இணைத்திருக்கிறேன். வழக்கமாக நான் எழுதுவது போலன்றி, சிறிய கட்டுரைதான். மகாமசானமும் வசனத்தின் முக்கியத்துவமும் புதுமைப்பித்தனின் வேறு சில கதைகள் குறித்தும் என் வாசிப்பை எழுதிப்பார்த்திருக்கிறேன். ஏனோ, காஞ்சனை தொடர்பான கட்டுரையின் சுட்டியை உங்களுக்கு அனுப்பத் தோன்றுகிறது. நேரமிருந்தால் பார்க்கவும். புதுமைப்பித்தனின் காஞ்சனை அன்புடன் பெருந்தேவி அன்புள்ள பெருந்தேவி, மகாமசானம் கதை குறித்த கட்டுரை சிறப்பாக இருந்தது. எல்லா விமர்சனங்களும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109192

ஊட்டி கடிதங்கள்

அன்புள்ள ஜெ,     ஊட்டி சந்திப்பு அளித்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் விவரிக்கமுடியும் என்று தோன்றவில்லை. சோபியாவின் விளியை பின்தொடர்தல் என்று வேண்டுமென்றால் ஒற்றைவரியில் சொல்லலாம் :-)     குறிப்பாக கவிஞர் தேவதேவன் அவர்களை சந்தித்து ஒரு பேரனுபவம்.  அரங்கு  ஆசிரியத்துவமும்  நட்பும்  அன்பும் அறிவுக்கூர்மையும்  பொருந்தியதாயிருந்தது.  மிகப்பெரிய ஒன்றுக்கு முன்னால் நின்றது போன்ற பிரமிப்பும் வினையமும் நன்றியுணர்வும்  நினைவுகளாக மிஞ்சுகின்றன. ஆசிரியர்கள் அனைவருக்கும் வணக்கங்களும்  நன்றிகளும். அரசியல் பேச்சுக்கள் இருக்குமோ என்ற ஐயம் இருந்தது. இல்லாதது மிகுந்த நிறைவளித்தது, வாசிப்பு மனநிலையிலேயே தொடர்ந்து இயங்கவும் வழிவகுத்தது. செறிவான, எதிர்மறை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109197

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-52

அர்ஜுனன் கேட்டான். கேசவா, முதலியற்கை, முதலோன், நிலையம், நிலையன், அறிவு, அறிபடுபொருள் எனும் இவற்றை அறியவிழைகிறேன். இறைவன் சொன்னார். இவ்வுடல் நிலையம். இதை அறிபவன் நிலையன் என்கின்றனர் அறிஞர். எல்லா நிலையங்களிலும் நிலையன் நானே என்று உணர்க! நிலையம் நிலையன் எனும் அறிவே மெய்மை என்பது என் கொள்கை. அந்த நிலையம் என்பது எது? எவ்வகைப்பட்டது? என்ன மாறுதல்களுடையது? எங்கிருந்து வந்தது? நிலையன் யார்? அவன் பெருமை எப்படிப்பட்டது? இவற்றை நான் சுருக்கமாக சொல்லக் கேள். அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109174