Daily Archive: May 14, 2018

தலையீடு

  இன்று [12-5-2018] இமைக்கணம் எழுதி முடித்தேன். இதுவரை வெண்முரசு நாவல்கள் எழுதும்போது பலர் அணுக்கவாசகர்களாக உடனிருந்திருக்கிறார்கள். எல்லா நாவல்களுடனும் கிருஷ்ணன் உண்டு, நல்ல காரியங்களுக்கு உடன் குற்றவியல் வழக்கறிஞர்கள் கூடவே இருப்பது உதவிகரமானது. அரங்கசாமி, ஸ்ரீனிவாசன் உட்பட பலர் உதவியிருக்கிறார்கள். இந்தியாவின் புகழ்மிக்க மகாபாரத அறிஞர்கள் சிலரின் உதவிகளை நாடியதுமுண்டு.   பொதுவாக எழுதிய அத்தியாயங்களை உடனடியாக வாசித்துக் கருத்துச் சொல்வது ஒரு வழிகாட்டல். அணுக்கமாக உடன் வரும் உள்ளம் அதற்குரிய முதல்தேவை. எழுதப்போகும் அத்தியாயங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109014

இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் -சுயாந்தன்

ஆகிய ஆறு தரிசனங்களின் அடிப்படைக் கூறுகளும் அவை பிற்கால இந்துத் தத்துவ மரபுக்கு எப்படி கால்கோளாயின என்றும் மிகத் தெளிவாக உரையாடப்பட்டுள்ளது. இது தவிர அவைதீக மதங்களான பௌத்தம், சமணம் பற்றியும் அவற்றை வைதீக மதங்கள் வன்முறை ரீதியில் ஒடுக்கியதற்கான ஆதாரங்கள் பொய்யானவை என்றும் மிகத் தெளிவாக விவாதிக்கப்படுகிறது. அவைதீக மதங்களின் வீழ்ச்சிக்கு வேதாந்தியான சங்கரரின் அத்வைதமே உதவியது என்பது ஜெயமோகனின் வாதம். உண்மையில் எந்த மதங்களையும் வன்முறை ரீதியில் துடைத்தழிக்க முடியாது. அதனைத் தத்துவார்த்த ரீதியில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109036

ஊட்டி கடிதங்கள்

அன்புள்ள ஜெ. வணக்கம். ஊட்டி காவியமுகாம்’18 சிறப்பாக இருந்தது. இதற்கு நீங்கள் செலுத்தும் அர்பணிப்பும், சிரத்தையும் சாதாரணமானதல்ல. நேர்மையும், தொடர் உழைப்பால் மட்டுமே சாத்தியம் ஆகும் நிகழ்வு இது. மற்றவர்கள் நினைத்து பார்த்திராத, படைப்பை தாண்டி ஒரு எழுத்தாளனுக்கு தன் வாழ்நாளில் பெரிய சாதனையாக நினைக்குமளவிற்கு மகிழ்வை அளிக்ககூடியாதாக நிச்சயம் இருக்கும். என்னை கவர்ந்த விஷயமாக இந்த நிகழ்வில் இளம் படைப்பாளிகளுக்கு நீங்கள் அளிந்திருக்கும் இடம். அவர்கள் இலக்கிய வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த கூடியதாக அமைந்துவிடும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109180

காந்தி -வரிகள்

  பேரன்பிற்குரிய ஜெ,   வணக்கம். சில வருடங்களுக்கு முன்பு, காந்தியைப் பற்றிய கட்டுரைகளை தங்கள் தளத்தில் வாசிக்க நேர்ந்தது. உங்களின் எழுதகளின் வழியாகவே நான் அவரை அறிந்துகொள்ள ஆரம்பித்தேன் நாள் தோறும் முயன்று கொண்டிருக்கிறேன். என் வாழ்வில் இவ்வளவு பெரிய தாக்கத்தை காந்தி ஏற்படுத்துவார் என்று அதற்கு முன் நான் சற்றும் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இன்று தினசரி வாழ்வின் அவரை நினையாது, படிக்காது ஒரு நாள் கூட கடப்பதில்லை.   அவரைபற்றிய புகைப்படங்களை, வரலாற்று சம்பவங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109132

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-51

அர்ஜுனன் சொன்னான். என்மீது அருள்பூண்டு எனக்கிரங்கி ஆத்மஞானம் என்னும் ஆழ்ந்த மந்தணத்தை நீ எனக்கு உரைத்தது கேட்டு என் மயக்கம் தீர்ந்தது. ஏனென்றால் உன்னிடமிருந்து உயிர்களின் தோற்றத்தையும் அழிவையும் விரிவாக கேட்டேன். அழிவற்ற பெருமையையும் கேட்டேன். உயர்ந்தவனே, இறைவனே, நீ உன்னைப்பற்றி கூறியவாறு உன் இறையுருவை காண விழைகிறேன். தலைவ, என்னால் அதை பார்க்கமுடியுமென நீ எண்ணுவாய் என்றால் அருள்புரிக! உன் அழிவிலா ஆத்மாவை எனக்கு காட்டுக! இறைவன் சொன்னார். பலநூறாகவும் பல்லாயிரமாகவும் பலவகை நிறங்களும் அளவுகளும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109166