Daily Archive: May 13, 2018

ரகசியப்பேய்

  ’காதல் சிறகை காற்றினில் விரித்து வானவீதியில் பறக்கவா?” என்ற பாட்டு இன்றும்கூட அடிக்கடி காதில் விழுந்துகொண்டிருக்கிறது. கணவனைப்பிரிந்த மனைவி அவனுடன் சேரும் ஏக்கத்துடன் பாடும் கண்ணீர் பாடல் அது. “கண்ணில்நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர்க்கடலில் குளிக்கவா” என அவள் ஏங்குவாள். இந்த உணர்வுநிலைகொண்ட ஏராளமான பாடல்கள் அன்று வெளிவந்தன. “கண்கள் இரண்டும் என்று உன்னைக்கண்டு பேசுமோ” இன்னொரு பெரும்புகழ் பெற்ற பாடல்   நான் தமிழ்சினிமாவின் அன்றைய பிரமுகர் ஒருவரிடம் அதைப்பற்றிக் கேட்டேன். அவர் சொன்னார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109176

ஊட்டி -மணிபாரதி

அன்புள்ள ஜெ, முதல் முறையாக காவிய முகாமில் கலந்து கொள்ள போகிறேன் என்ற  ஆர்வத்துடனும் கவிதை அரங்கில் கருத்துரை கூறவேண்டும் என்ற கலக்கத்துடனும்  பாரி, பிரபு,இராஜ மாணிக்கம் , மற்றும் சிவகுமார் ஆகியோருடன் இணைந்து குருகுலம் வந்து சேர்ந்தேன். முதல் நாள்  தொடங்கி மூன்றாம் நாள் வரை தொடர்ந்த சிறுகதை   கவிதை அரங்குகள்  அவைகளை எவ்வாறு  புரிந்து கொள்ள வேண்டும் என்று உணர்த்தின.கம்ப இராமயாண அமர்வு  மரபிலக்கியங்களை எவ்வாறு படிக்க வேண்டும் என்ற புரிதலை ஏற்படுத்தியது.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109125

மயில் நீலம்.

அன்புள்ள ஆசிரியருக்கு… அறம் வரிசைக் கதைகளில் பொதுவான நிகழ்வுகள் சொல்லப்பட்ட கதைகள் முதலில் மனத்தில் பதிந்தன. அறம், சோற்றுக்கணக்கு போல. பிறகு ஆழ் உள்ளே நிற்பவை மிக அந்தரங்கமான மத்துறு தயிரும், மயில் கழுத்தும் தான். முதலில் இக்கதைகளில் வரும் பாத்திரங்கள் பழக்கமற்று இருந்ததால், அவர்கள் கொள்கின்ற அந்த குண விவரிப்புகள் ஆர்வம் ஏற்படுத்தவில்லை. இப்போது அவற்றை மீறி அந்தக் கதைகளில் எழுந்து நிற்கும் உணர்ச்சிகள், பிடிக்க வைத்து விட்டன. மயில் கழுத்தை முதலில் படிக்கையில் ராமன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108892

ஊட்டி – ஜனார்த்தனன்

  அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, ஊட்டி காவிய முகாமில் கலந்து கொள்வதற்கு அறிவிப்பு வெளியான முதல் நாளே விண்ணப்பித்திருந்த போதிலும், நான் கலந்துகொள்வது உறுதியாகும் வரை நம்பிக்கையில்லாமல் தான் இருந்தேன். என் வருகை உறுதி செய்யப்பட்டு ஊட்டி வந்த பின்னர் தான் ஏறக்குறைய 40 பேர் வரை இடமின்மையால் அழைக்கப்படாமல் விடப்பட்டிருந்ததது தெரிய வந்தது. அவ்வகையில் எனக்கு வாய்ப்பளித்து, ஊட்டி காவிய முகாமை நேர்த்தியுடன் ஒருங்கிணைத்து நடத்திய விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட அமைப்பாளர்களுக்கு என் அன்புகடந்த நன்றி. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109136

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-50

அர்ஜுனன் கேட்டான். அந்த பிரம்மம் எது? ஆத்மஞானம் எது? செயலென்பது என்ன? எது பொருள்மெய்மை? எது தெய்வமெய்மை? வேள்விமெய்மை என்பதென்ன? இவ்வுடலில் எப்படி அது உறைகிறது? தம்மை வென்றவர்களால் இறுதியில் நீர் எப்படி அறியப்படுகிறீர்? இறைவன் சொன்னார். அழிவற்ற முதற்பொருளே பிரம்மம். அதன் இயல்பறிதல் ஆத்மஞானம். உயிரெனத் தோன்றுவது இயற்கை. அது பெருகுவதே செயல். அழிவுபடும் இயற்கையைக் குறித்தது பொருள்மெய்மை. முதலுருவனைப் பற்றியது தேவமெய்மை. உடலென என்னை அறிதல் வேள்விமெய்மை. இறுதியில் தன் உடலை முற்றிலும் துறந்து …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109149