Daily Archive: May 11, 2018

ஊட்டி- எண்ணங்கள், திட்டங்கள்.

இந்த முறை நிகழ்ந்த குருநித்யா இலக்கிய அரங்கம் எத்தனையாவது நிகழ்ச்சி என அதில் கலந்துகொள்ள வந்திருந்த பி.ஏ.கிருஷ்ணன் கேட்டார். 1994ல் நித்ய சைதன்ய யதி கேட்டுக்கொண்டதற்கேற்ப நான் இளம் எழுத்தாளர்களை அழைத்துவந்து அங்கே ஒரு சந்திப்பை ஒருங்குசெய்தேன். அதில் கலந்துகொண்டவர்களில் ஒருவர் இந்நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார், க.மோகனரங்கன். இன்னொருவரான எம்.கோபாலகிருஷ்ணன் [சூத்திரதாரி] வருவதாக இருந்தது. அலுவலகப்பணி காரணமாக வரமுடியவில்லை. தமிழிலக்கியத்தின் மூன்றுதலைமுறையின் முக்கியமான கவிஞர்கள், எழுத்தாளர்கள் பலர் இதற்கு முன் இதில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.  .   அப்படியென்றால் கிட்டத்தட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109102

ஊட்டி -நவீன்

    அன்புள்ள ஜெ,   மனிதன் இயந்திரமாக மாறுவதை தன்னில் உணர்ந்த நாட்களாக கருதுகிறேன். மூன்று தினங்கள் கண்ணுக்கு பசுமை, செவிக்கு சிந்தனை பேச்சுகள், சிரித்து களித்த பொழுது என கடந்து சென்ற பின்பு மீண்டும் பழைய சுழல் சக்கரமாய் அதே இயந்திர வாழ்க்கையில் அடுத்த மூன்று நாட்கள் கடத்தியது சிறிது ஏக்கத்தை தான் ஏற்படுத்தியது ஊட்டியிலேயே இருந்தால் எப்படி இருக்கும் என்று. தங்கள் காடு நாவலில் வருவது போல் காடு கண்டவன் நாட்டை வெறுப்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109096

நத்தையின் பாதை -கடிதம்

ஜெமோ, ஒன்றைப் பற்றிய புரிதல் ஏற்படும்போதே அதை மீற முடிகிறது. மீறுவது பெரும்பாலும் பொதுப்புத்திக்கு ஓங்குவதாகவே தெரிகிறது. அதிகாரமும் பயம் கண்டு அதை ஒடுக்கவே முற்படுகிறது. மரபார்ந்த அறிவு கொண்ட எவருமே தன் மரபுகளோடு முரண்பட்டு அதை வளர்த்தெடுத்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுக்கு சமூகமளித்த பெயர் கலகக்காரர்கள். கலகம் இல்லாமல் இங்கு நியாயம் பிறப்பதில்லை. யார் கண்டது, ஆண்டனி போன்றவர்களால் கிறிஸ்து இன்னமும் நமக்கு அணுக்கமாயிருக்கலாம், நிகாஸ் கஸண்ட்ஸகீஸுக்கு ஆனது போல. கிறிஸ்துவம் இதைத் தடுத்திருக்கிறது.   கிறிஸ்துவின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108991

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-48

அர்ஜுனன் கிருஷ்ணனிடம் கேட்டான். அறிவு செயலைவிட மேலானது என்று நீர் எண்ணினால் இரக்கமற்ற இச்செயலுக்கு என்னை ஏன் தூண்டுகிறீர்? சிக்கலான சொற்றொடர்களால் எனது அறிவு மயங்குகிறது. எதன் வழியாக நான் சிறப்படைவேனோ அந்த ஒன்றை மட்டும் எனக்குக் கூறுக! கிருஷ்ணன் கூறினார். பழியற்றவனே, முற்காலம் முதலே இவ்வுலகில் உலகியலாருக்கு ஞானயோகமும் யோகிகளுக்கு செயல்யோகமும் என இருவகைப்பட்ட முறைகளை நான் கூறியிருக்கிறேன். முதலோன் செயல்களை தொடங்காமலிருப்பதனால் செயலின்மையை அடைவதில்லை, துறப்பதனால் வீடுபேறு பெறுவதுமில்லை. பிறந்தவர் எவரும் கணமேனும் செயலாற்றாமல் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109099