Daily Archive: May 9, 2018

பிள்ளைகள் வழியே…  

  பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் எழும் பதற்றம் மிக்க ஆவல் நாம் எத்தனை கடந்து வந்திருக்கிறோம் என்பது மட்டும் அல்ல, பிள்ளைகள் எத்தனை கடந்துசென்றிருக்கிறார்கள் என்பதும்கூடத்தான். அவற்றில் தெரியும் அவர்களின் ஆளுமை உற்சாகமான இளமையால் ஏந்தப்பட்டிருக்கிறது.   நாம் எப்போதும் அந்த இளமையைத்தான் பார்க்கிறோம். பிள்ளைகள் மேல் நமக்கிருக்கும் தீராத ஆர்வம் என்பது உண்மையில் இளமை என்னும் உயிர்த்துடிப்பின்மீதுதான். வேறு எதையும் நாம் கவனிப்பதேயில்லை. அவர்களின் கொண்டாட்டம், துள்ளல், அறியாமையின் அழகு, அறிதலின் பேரழகு – திரும்பத்திரும்ப …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109020

ஊட்டி கடிதம், தாமரைக்கண்ணன்

  அன்புள்ள ஜெ ஊட்டி காவிய முகாம் பற்றி  அறிவிப்பு வந்தவுடனே விண்ணப்பித்து விட்டேன், தேர்ந்தெடுக்கப்பட்டதாக அஞ்சல் வந்ததும் நம்ப முடியாமல் சிறிது நேரம் அசைவற்றிருந்தேன். முட்டாள்த்தனமான அலுவலகச்சூழலில் இருந்து,  விட்டு விடுதலையாகி, எனக்கு மட்டுமான மூன்று உன்னத நாட்கள். பாண்டியிலிருந்து கடலூர் சீனு அண்ணா, மணிமாறன், நான் மூவரும் ஊட்டி வந்தோம், நண்பர் திருமாவளவன் ஊட்டியில் இணைந்து கொண்டார். புகைப்படங்களாகப் பழகிய அறை, முன்பே படித்திருந்த அணுகுமுறை, வரிகளில் கண்ணோடும் போதெல்லாம் மனதில் எப்போதும் வாசிக்க …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109043

ஊட்டி -லோகமாதேவி

சார் வணக்கம் ஊட்டி முகாமிலிருந்து  வீட்டிற்கு மாலை 6 மணிக்கெல்லாம் திரும்பி விட்டோம் நானும் சரணும். பெருமழை பெய்துகொண்டிருந்த வெள்ளியன்று காலை புறப்பட்டு இப்போது வீடுதிரும்பியது வரையிலான இம்மூன்று நாட்களின் நிறைவிலும் இனிமையிலுமாய்  மனம் நிறைந்திருக்கின்றது. வெள்ளியன்று நாங்கள் இருவரும் வருகையிலேயே முதல் அமர்வு துவங்கியிருந்தது, அப்போதிருந்து இன்றைய நிறைவான அரங்குவரை, வழக்கம் போல  எந்த தொய்வும் குளறுபடிகளும் இன்றி குறித்த நேரத்திற்கு முறையாக அரங்குகள் நடந்தன. இந்த ஒழுங்கு எப்போதுமே என்னை ஆச்சர்யப்படுத்தும் ஒன்று. பல்வேறு தளங்களிலிருந்து , பள்ளி இறுதி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109029

ஊட்டி,லக்ஷ்மி மணிவண்ணன்

  “பெருவனத்திடம் விடைபெற்று திரும்புகிறேன் வனம் விட மனமின்றி காட்டுமாட்டின் ரூபத்தில் பனிப்புகை மூட்டமாய் பின்தொடர்ந்து வருகிறது சிறுபொட்டாய் எனை எடுத்து அதற்கொரு திலகமிட்டேன் நாளைய புலரி திலகமிட்ட வண்ணம் உதிக்கும் இவ்வனத்தில் வனம் முளைக்கும் என் முற்றத்தில் திலகமும் வனமும் இருவேறிடங்களில் இருந்தாலும் “   விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கழிந்த மூன்று தினங்களில் ஊட்டியில் ஏற்பாடு செய்திருந்த காவிய முகாமில் முழுமையாகப் பங்கேற்றேன்.இப்போது நடைபெறுவது 25 ஆவது முகாம் என்று சொன்னார்கள்.சில காலங்களுக்கு முன்பிருந்தே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109009

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-46

இளைய யாதவர் உள்ளுணர்வால் அழைக்கப்பட்டு கதவைத் திறந்து வெளியே வந்தபோது அங்கே சுகர் நின்றுகொண்டிருப்பதை கண்டார். மண்படிந்த மெலிந்த ஆடையற்ற சிற்றுடல் புதிதாக அகழ்ந்தெடுக்கப்பட்ட கிழங்குபோல் நறுமணம் கொண்டிருந்தது. சடைத்திரிகள் தோளில் பரவியிருந்தன. இரு கைகளும் தொடைதொட்டு தொங்கின. இளங்குழவிகளுக்குரிய தெளிந்த கண்களுடன் அவர் நின்றார். சில கணங்கள் அவரை நோக்கியபடி நின்ற இளைய யாதவர் கைகூப்பியபடி இறங்கிச் சென்று அவர் கால்களில் தலைவைத்து வணங்கினார். அவர் வணங்குவதை சுகர் அறியவில்லை எனத் தோன்றியது. வாழ்த்தோ தலைதொடுகையோ …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109040