Daily Archive: May 5, 2018

செல்லம்மாள் – ஒருவாசிப்பு

  இரண்டு கணவர்கள் அன்புள்ள ஜெயமோகன், இரண்டு கணவர்கள் வாசித்தேன். செல்லம்மாளை ஆகச்சிறந்த காதல் கதை என்கிறார் சுந்தர ராமசாமி. இந்தக் கதையை கணவன் மனைவிக்கு இடையே உள்ள காதலை, அன்பை வெளிப்படுத்தும் ஒரு கதையாகவே நானும் காண்கிறேன். நீங்கள் குறிப்பிடுவது போல  “பாவி! பாவி! என் வாழ்க்கையை நாசம் பண்ணிவிட்டாயே” என்ற வரி கதையில் எங்கேயும் இருப்பதாகத் தெரியவில்லை. http://kesavamanitp.blogspot.in/2016/07/blog-post_39.html   அன்புடன், கேசவமணி அன்புள்ள கேசவமணி   இக்கட்டுரைகள் ஜன்னல் இதழுக்காக எழுதப்பட்டவை – சொல்லி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108840

பயணம், கிண்டில்

  குற்றவாளிகளின் காவல்தெய்வம் கடிதம் அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு,   வணக்கம்.   குற்றவாளிகளின்  காவல் தெய்வம் கட்டுரை  குறித்து  நான்எழுதிய  கடிதத்திற்கான  (https://assets1.jeyamohan.in/108643#.WudaCNFRWf0)   தங்களதுபதிலைத்  தங்களது தளத்தில் வாசித்தேன் .  என் கடிதம் தங்களது தளத்தில்  தங்களது  பதிலுடன் வெளியிடப்படும்  என்று நினைத்துக்கூடப்  பார்க்கவில்லை.  பரிசு  பெற்றதைப்  போன்ற உணர்வை  அடைந்தேன்.     தொழில்முறைப்  பயணமாக  நிறைய  நாடுகளுக்கு நான் செல்வதுண்டு.  ஆப்கானிஸ்தான் ,  நைஜீரியா , உகாண்டா போன்ற  நாடுகளும்  அவற்றில் உண்டு. தங்களது  பயணங்கள் குறித்த  புத்தகங்களை வாசித்த பின்னர் என் பயணங்கள் அனைத்தும்   பிறிதொன்றாக மாறிக் கொண்டிருப்பதை மெதுவாக  உணர ஆரம்பிக்கிறேன். பயணத்தின்போது  மனிதன் அள்ளிக்கொள்ள  நிறைய  இருக்கின்றன  என்பதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108861

செய்தி -கடிதங்கள்

  செய்திதுறத்தல் அன்புள்ள ஜெ சார், வணக்கம். நான் இதை உங்களுக்கு ஏற்கனவே எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். உங்களுடைய தன்னைத் தக்கவைத்துக்கொள்ளல் என்று தலைப்பிடப்பட்ட கேள்வி பதிலுடன் இதை இணைத்து புரிந்து கொள்கிறேன். சமஸ் அவர்களும் செய்தி பிரதானம் அல்ல கேளிக்கை தான் என்கிற ரீதியில் செய்தி ஊடகங்கள் செயல்படுவதை பற்றி எழுதியிருந்தார். தொலைக்காட்சி நம் வீட்டின் நடுவில் அமர்ந்திருக்கும் சனியன். செய்தித்தாள் நம்மை தேடி வரும் மரண அறிவிக்கை. என்னுடைய தந்தை காவல் துறையில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108838

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-42

நைமிஷாரண்யத்தில் கர்க்கர் இளைய யாதவரிடம் கேட்டார் “யாதவனே, வேதம்நாடும் முதற்பொருள் முடிவிலாதது எனில் வேதம் எனத் திரள்வது என்ன? எங்கள் எரிகுளத்தில் எழுந்து அவிகொள்ளும் தெய்வங்கள் எவை?” தௌம்யர் அவருடன் இணைந்துகொண்டார். “ஒவ்வொரு நாளும் இந்தப் பெருங்களத்தில் மானுடர் போரிடுகிறார்கள். வெல்கிறார்கள், தோற்கிறார்கள். வெற்றியுடனும் தோல்வியுடனும் வேதம் இணைந்திருக்கிறது. அவர்கள் பொருட்டு அவிசொரிந்து வேட்கும் அந்தணர்களாகிய நாங்கள் இங்கு இயற்றும் செயலின் பயன்தான் என்ன?” சண்டகௌசிகர் சொன்னார் “நேற்று முன்னாள் நெடுந்தொலைவிலுள்ள சிற்றூரில் இருந்து ஓர் எளிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108923