Daily Archive: May 1, 2018

யாருடைய சொத்து?

  மாயாவி எழுதிய கண்கள் உறங்காவோ என்னும் தொடர்கதை என் அம்மாவுக்கு மிகவும் பிடித்தமானது.  வீணா என்னும் இளம்விதவை ஒரு கிராமத்திற்கு டாக்டராக வருகிறாள். அவள் சிறுமியாக இருக்கும்போதே திருமணம் செய்யப்பட்டு கணவனை இழந்தவள். கிராமத்தில் அவள் சேவைசெய்ய நினைக்கிறாள். அவளுக்கு மறுமணம் செய்யும் எண்ணம் வருகிறது. அவள் மறுமணம் செய்வது அந்தக்கிராமத்தையே உலுக்குகிறது. மிகப்பெரிய சமூகமோதலாக அதுவெடிக்கிறது. அவளை மறுமணம் செய்யவிருந்த விகாஸ் என்பவனை ஊர் பண்ணையார் தானாவதிப்பிள்ளை குத்திக்கொல்கிறார். வீணாவை வைப்பாட்டியாக வைத்துக்கொள்ள ஆசைப்பட்டவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108654

ராஜம் அய்யர் -கடிதங்கள்

ஒரு சிறு வெளி அன்புள்ள ஜெயமோகன்,   ராஜம் அய்யரைப் பற்றிய சமீபத்திய பதிவுகளின் தொடர்ச்சியாக ஒரு செய்தி. கமலாம்பாள் சரித்திரத்தில் இடம் பெறும் பெரிய வீடு எழுத்தாளர் அசோகமித்திரனின் தாய் வீடு. என்னுடைய ஊர் நிலக்கோட்டை. பக்கத்துக்கு ஊர். வத்தலகுண்டில் சொந்தக்காரர்கள் யாராவது இருக்கிறார்களா என்று நான் கேட்டிருந்த போது, அசோகமித்திரன் இறப்பதற்கு சில மாதங்கள் முன்பு அவரிடமிருந்து வந்த மெயிலில்(ஒரு விழாவில் அவரை சற்றே எரிச்சல் படுத்தியிருந்ததற்கு மன்னிப்பு கேட்டு நான் எழுதிய மெயிலில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108703

துகள் -கடிதம்

  துகள்   அன்பிற்கினிய ஜெயமோகன் அவர்களுக்கு,   நிகழ்விற்கு முந்தைய பின்னிரவில் பதட்டத்துடன் பணிகள் செய்துகொண்டிருந்தபோது குக்கூ காட்டுப்பள்ளி நண்பர்களோடு வந்திருந்த சுயம்புசெல்வி அக்கா, உனது கடிதத்தை ஜெயமோகன் அய்யா தனது இணையத்தில் பதிந்திருக்கிறார் என்று சொன்ன கணத்தில், மனதில் பதற்றம் தணிந்து அமைதியும் நம்பிக்கையும் வியாபித்துக்கொண்டது. பின்னர் வேலைகள் செய்தபடியே உரையாடிக் கொண்டிருந்தபோது பொழுது புலர்ந்தது.   மிகுந்த ஆனந்தத்துடனும் நண்பர்களின் அரவணைப்புடனும்  துகள் மற்றும் நூற்பு கைத்தறி நெசவுக்கான கூட்டுறவு தொழிற்கூட திறப்புவிழா நிகழ்வு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108705

லெஸ்டர் -அஞ்சலி

  முற்போக்கான எண்ணங்களும் இடதுசாரிச்சிந்தனைகளும் கொண்டிருந்த லெஸ்டர், சிறந்த இலக்கியவாசகராகவும் திகழ்ந்தார். இலங்கைச்சிங்கள மக்களின் இயல்புகள், கலாசாரம், நம்பிக்கைகள், நாகரீகம் என்பனவற்றை யதார்த்தமாக பிரதிபலித்த சிங்கள படைப்புகளை (நாவல், சிறுகதை) திரைப்படமாக்குவதில் ஆர்வம்கொண்டிருந்தவர். அதனால், மார்ட்டின் விக்கிரமசிங்கா (கம்பெரலிய, மடோல்தூவ, யுகாந்தய) , மடவள எஸ். ரத்நாயக்க (அக்கர பஹ) கருணாசேன ஜயலத் ( கொளு ஹதவத்த) ஜீ.பி. சேனாநாயக்கா ( நிதானய) முதலான படங்களை தமிழ் எழுத்தாளர்களும் விரும்பிப்பார்த்தனர். அவை பற்றிய விமர்சனங்களையும் எழுதினர்.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108849

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-38

மீண்டு வந்தபோது திரௌபதி மூச்சிரைத்துக்கொண்டிருந்தாள். சதோதரி “அரசி, தாங்கள் அஞ்சிவிட்டீர்கள்” என்றாள். “இல்லை, அது மெய்யாகவே நிகழ்ந்தது” என்றாள் திரௌபதி. “ஆனால், அன்று பேசியவை இவைதானா என ஐயம் எழுகிறது.” சதோதரி “மீண்டுமொருமுறை அங்கு செல்லமுடியும்” என்றாள். “ஆனால் சொற்கள் மாறியிருக்கும். மனிதர்கள்கூட மாறியிருக்க வாய்ப்புண்டு.” சினத்துடன் திரௌபதி “அங்கே மெய்யாகவே நிகழ்ந்தது என் சித்தத்தில் இருக்கும்” என்றாள். “எவருடைய சித்தத்தில்? அன்று அங்கே இருந்த சேடியொருத்தியின் சித்ததில் முற்றாக பிறிதொன்று இருக்கும். மண்ணில் நிகழ்ந்த எதுவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108733