Monthly Archive: May 2018

அஞ்சலி: ம.இலெ.தங்கப்பா

  தமிழ் மரபிலக்கியத்தின் முதன்மையான ஆளுமைகளில் ஒருவரான ம.இலெ.தங்கப்பா மறைந்தார். புதுக்கவிதையின் எழுச்சியிலும் தொடர்ந்து மரபின் சந்தத்திற்கும் அணிகளுக்கும் ஆதரவாக நிலைகொண்டவர். மரபுநெறி நின்று கவிதைகள் எழுதியவர். மரபான முறையிலேயே அவை அமைந்திருந்தன. கவிதைக்கான உள எழுச்சியைவிட சந்தத்தாலும் சொல்லழகாலும் உருவானவை அவை   ம.இலெ.தங்கப்பா அவர்கள் எழுதிய குழந்தையிலக்கியப் படைப்புகளே குறிப்பிடத்தக்கவை. இறுதிக்காலத்தில் அவருடைய மொழியாக்கத்தில் பெங்குவின் பதிப்பகம் வெளியிட்ட சங்கப்பாடல்களின் மொழிபெயர்ப்பான  ‘LOVE STANDS ALONE அவருடைய வாழ்நாள் சாதனை என நினைக்கிறேன்.   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109683

பெயர் சொல்லாதது சரசரக்கும் பாதை -கடலூர் சீனு

  குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018 கண்டராதித்தன் கவிதைகள் கவிஞர் கண்டராதித்தன் அவர்களுக்கு  கவிஞர் குமரகுருபரன் -விஷ்ணுபுரம்  விருது  எனும் செய்தி மகிழ்வு அளித்தது .  முந்தய விருது பெற்ற கவிஞர் சபரிநாதன் கவிதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக இணையத்தில் வாசித்திருந்தேன் . விருது அறிவிப்புக்குப் பிறகே அவரது தொகுதிகளை தேடிப் படித்தேன் .  இம்முறையும் அவ்வாறே . புனைவுகள் என்று வருகையில், என் தேர்வில் கவிதைகள் இரண்டாம் நிலையில் நிற்கக்  காரணம் கவிதை எனும் இயல் ரசனையின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109644

கீதையைச் சுருக்குதல்

http://www.charlesnewington.co.uk/bhagavad-gita/ அன்புள்ள ஜெ.. கீதை குறித்த சமீபத்திய விவாதங்களின் தொடர்ச்சியாக ஒரு கேள்வி.. பாபா படம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்த தன்னை மீட்டெடுத்த நூலாக கீதையை ரஜினி சொல்லி இருந்தார்.  புல்கேந்த சின்கா எழுதிய , உண்மையான கீதை , என்ற நூலைப்பபடித்ததாகவும் செயல் புரி என்ற கிருஷ்ணரின் ஆணை தன்னை ஊககப்படுத்தியதாகவும் சொல்லியிருந்தார் நானும் படித்தேன்…  உண்மையான கீதை எண்பது ஸ்லோகங்கள் மட்டுமே கொண்டது..  தற்போது நாம் படிப்பது இடைச்செருகல்கள் கலந்த கீதை என்பது அந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109561

எழுத்தும் எழுதுபவனும்

  அன்புள்ள ஜெ.,   தூத்துக்குடி பற்றிய தங்கள் பதிவு படித்தேன். அதற்கு சற்று முன்னால் “அம்மா வந்தாள்” பற்றிய பதிவையும். முதலில் அது தாங்கள் எழுதியது என்று நினைக்கவில்லை. தூத்துக்குடி போன்ற கனமான சம்பவங்களுக்கு மத்தியில் இந்த பதிவை எதிர்பார்க்கவில்லை. புறவுலக நடவடிக்கைகள் எந்த அளவுக்கு ஒரு எழுத்தாளனை, அதாவது அவனது தினசரிச் செயல் பாடுகளை பாதிக்கும். பாதிக்கவேண்டுமா?   அன்புள்ள,   கிருஷ்ணன்   அன்புள்ள சங்கரன்,   இந்தத்தளத்தில் வெளியாகும் பெரும்பாலான கட்டுரைகள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109519

சிறுகதைகள் – கடிதங்கள்.

அன்புடன் ஆசிரியருக்கு   இக்கதையை வாசிக்கத் தொடங்கிய சற்று நேரத்துக்குள்ளாகவே அங்கு நிகழவிருப்பதை மனம் ஊகித்து விடுகிறது .தாய்மை என்ற உணர்வு போற்றப்படுகிறது. வழிபடவும் படுகிறது. ஆனால் அவ்வுணர்வின் ஆதார இச்சை என்ன? தன்னில் எழுந்த உயிரை எந்த எல்லைக்கும் சென்று வாழவைக்க விழையும் துடிப்பு அது. அத்துடிப்பின் வளர்ச்சியாக மொத்த சமூக உருவாக்கத்தையும் பார்க்கிறவர்கள் உண்டு. எஸ்.ராமகிருஷ்ணனின் காந்தியோடு பேசுவேன் சிறுகதை சற்று செயற்கையாக இருந்தாலும் காந்தியின் தாய்மை உணர்வைத்தான் பேசுகிறது. அதை மனம் ஆமோதிக்கவும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109559

சிந்தாமணி

  தமிழின் ஐம்பெருங்காப்பியங்களில் முழுமையாகக் கிடைப்பவை மூன்று. சிலப்பதிகாரம் மணிமேகலை சீவக சிந்தாமணி. வளையாபதியும் குண்டலகேசியும் கிடைப்பதில்லை. இம்மூன்றில் சமநிலையும் அழகும் கொண்ட காப்பியம் சிலப்பதிகாரமே. ஆனால் ஒரு காப்பியத்திற்குரிய விரிவு சீவக சிந்தாமணியிலேயே காணக்கிடைக்கிறது. காவியச்சுவை என்பது சுருக்கமாகச் சொன்னால் ஒரு மொழியின் அழகின் அனைத்து முகங்களும் வெளிப்படும் நிலையே. ஆகவே ஒரு காவியம் என்பது ஒரு வாசகனால் வாழ்நாள் முழுக்க வாசிக்கத்தக்கதாக இருக்க வேண்டும். அவ்வகையில் பார்த்தால் தமிழில் கம்பராமாயணமும் சீவகசிந்தாமணியும் மட்டுமே அந்தத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/787

மேமாதங்கள்

அன்புடன் ஜெயமோகன் அண்ணனுக்கு, எனது இந்தப்பதிவு உங்கள் பார்வைக்கு, நீங்கள் விரும்பின் உங்கள் தளத்துக்கும். நன்றி தெய்வீகன் மெல்பேர்ன்   மேமாதங்கள் ஆஸ்திரேலிய பெரு நகரங்களின் வீதிகளெங்கும் சிவப்பு மஞ்சள் கொடிகளோடு தமிழர்களின் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்த காலம் அது. வார விடுமுறைகளில் மாத்திரம் வசதியான ஆர்ப்பாட்டங்களை நடத்திய சம்பிரதாயங்கள் எல்லாம் கடந்து, மக்கள் வார நாட்களிலும் வேலைகளுக்கு செல்லாமல் – விடுப்பெடுத்துக்கொண்டு – குடும்பத்தோடு வந்து வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் கரைந்து கிடந்த காலம். நாளைக்கு ஆர்ப்பாட்டம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109542

மு.தளையசிங்கம் பற்றி…

மு. தளையசிங்கம் பற்றி சுயாந்தன் எழுதியிருக்கும் விமர்சனக்குறிப்பு. தளையசிங்கத்தின் படைப்புகளின் முழுத்தொகுப்புக்கான அறிமுகமாக அமைகிறது இது. மு.தளையசிங்கம் என்னும் முதற் சிந்தனையாளன்

Permanent link to this article: https://www.jeyamohan.in/109517

ஆடம்பரக் கைப்பை -கடிதம்

  ஆடம்பர கைப்பைகளின் வாழ்க்கை அன்புள்ள ஜெமோ,   ‘ஆடம்பரக் கைப்பைகளின் வாழ்க்கை’ பதிவை வாசித்துவிட்டு இதை எழுதுகிறேன். ஒருவகையில் என்னை இதை எழுத வைக்கத்தான் நீங்கள் அந்தப் பதிவையே எழுதுனீர்கள் என சும்மாவேனும் நினைத்துக்கொள்வது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் கடைசியாக உங்களுக்கெழுதிய கடிதத்தில் ரத்னாபாயின் ஆங்கிலம் பற்றிய எனது புரிதல்களை எழுதிக்கொண்டிருப்பதாகச் சொல்லி இருந்தேன். அதை அன்றே முடித்து எனது வலைத்தளத்தில் பதிவேற்றி இருந்தேன். உங்களது பதிவை வாசித்ததும், நான் எழுதியதையும் ஒருமுறை வாசித்துப் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109515

குமரகுருபரன் விஷ்ணுபுரம் விருது 2018

  மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக விஷ்ணுபுரம் அமைப்பு சென்ற ஆண்டுமுதல் அளிக்கப்பட்டுவரும் குமரகுருபரன் நினைவு விஷ்ணுபுரம் விருது இவ்வாண்டு கவிஞர் கண்டராதித்தனுக்கு வழங்கப்படுகிறது.   விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் கண்டராதித்தன். இதழியலாளர். இயற்பெயர் இளங்கோ. கண்டாச்சிபுரத்தை ஆண்ட சிற்றரசர் கண்டராதித்தர் நினைவாகக் கண்டராதித்தன் என்கிற பெயரில் கவிதைகள் எழுதி வருபவர் கண்டராதித்தன் கவிதைகள் (2002) சீதமண்டலம் (2009) திருச்சாழல் (2015) என மூன்று தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவற்றில் திருச்சாழல் சென்ற இரண்டு ஆண்டுகளில் பெரிதும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/109615

Older posts «