Monthly Archive: April 2018

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-35

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரின் குடில்முற்றத்திற்கு மீண்டு வந்ததுமே யுதிஷ்டிரர் உரத்த குரலில் “எனக்கு ஐயமென ஏதுமில்லை, இத்தெளிவை நான் எப்போதும் அடைந்ததில்லை. யாதவனே, இந்தக் கசப்பு நிறைந்த கனவின்பொருட்டு நான் உனக்கு நன்றியுடையவன்” என்றார். “இங்கு அறமென்றும் நெறியென்றும் மாறாத ஏதுமில்லை. அவையனைத்தும் மானுட உருவாக்கங்களே. அவரவர் இலக்குக்கும் இயல்புக்கும் ஏற்ப கண்டடைவன. அந்தந்த சூழலுக்கேற்ப விளைவன. ஆற்றலுக்கேற்ப நிலைகொள்வன” என்றார். “கணமொரு அறம். தருணத்திற்கு ஒன்று. உள்ளத்திற்கு ஏற்ப. இங்கு ஒவ்வொரு கணமும் நிகழ்ந்துகொண்டிருப்பது அறங்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108649

மெலட்டூருக்கு…

இன்று கிளம்பி நாளை தஞ்சை அருகே உள்ள மெலட்டூரில் நண்பர் ராகவின் இல்லத்தில் தங்கி பாகவதமேளா பார்க்கவிருக்கிறேன். அருண்மொழியும் அஜிதனும் சைதன்யாவும் உடன்வருகிறார்கள். நண்பர்கள் ராஜகோபாலன், செல்வேந்திரன் குடும்பத்துடன் வருகிறார்கள். ஈரோடு கிருஷ்ணன், பாரி ,மணவாளன் என இன்னொரு கோஷ்டியும் வருகிறது. 29 மாலை திரும்பி வருவதாகத் திட்டம்.       இம்முறை நண்பர் ஜெயக்குமார் பரத்வாஜ் பாடுகிறார். சென்ற சில ஆண்டுகளாகவே நண்பர்கள் ராகவ் இல்லத்தில் தங்கி பாகவதமேளா பார்த்துவருகிறார்கள். சென்றமுறை போகன் சென்றிருந்தார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108775

இலங்கை வாசகர்களும், இலக்கியமும்

இலங்கைக்கு நவீன் சென்று வந்ததை ஒட்டி அவர் எழுதிய கட்டுரை மீது நான் எதிர்வினையாற்றியிருந்தேன். அதையொட்டி அனோஜன் பாலகிருஷ்ணன் எதிர்வினையை முன்வைத்திருந்தார். தன் கருத்தை வல்லினம் தளத்தில் நவீன் முன்வைத்திருக்கிறார். இலங்கை,நவீன் இலங்கை,நவீன்,அனோஜன் இலங்கை வாசகர்களும் இலக்கிய வாசகர்களும் என்னுடைய எதிர்வினையின் சாராம்சமான உணர்வை இலங்கை வாசகர் சிலராவது புரிந்துகொண்டிருப்பார்கள், அவ்வாறு புரிந்துகொள்பவர்கள் மட்டுமே நவீன இலக்கியத்திற்கு முக்கியமானவர்கள். ஒர் அயல்நாட்டு எழுத்தாளன் வரும்போது அவனைப்பற்றி அறிந்துகொள்ளாமல் அவன் முன் தோன்றக்கூடாது என்பது ஒரு பண்பு. ஒவ்வொரு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108661

போகன் கவிதைகள் பற்றி சுயாந்தன்

  அன்புள்ள ஜெயமோகனுக்கு, போகன் சங்கரின் கவிதைத் தொகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். கேரளத்தில் வாழ்ந்தவர் என்பதால் மிகச் சரளமாகத் தனது கவிதைகளின் வழி கேரள வாழ்வையும் நவீன உலகியலையும் பற்றி எழுதுகிறார். அவரைப் பற்றி எனது புளக்கரில் ஒரு தொடர் எழுதுகிறேன். போகனின் கவிதைகள் தங்களுக்கும் நெருக்கமானவை என்பதைத் தங்களது அநேக பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளீர்கள். போகன் கவிதைகள் மீது ஒரு குறிப்பு எழுதுங்கள். நவீன கவிதை வாசிப்பில் அவரது முக்கியத்துவங்கள் பற்றி இருந்தால் நன்றாயிருக்கும். போகனின் கவிதைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108748

அஞ்சலி ஸ்ரீகலா பிரபாகர்

மலையாள இதழாளர்களில் எனக்கு நெருக்கமான இரு ஸ்ரீகலாக்களில் ஒருவர் இன்று அழைத்து “இனி ஒரு ஸ்ரீகலாதான் இதழாளர்களில் உங்கள் நண்பர்” என்றார். அப்போதுதான் ஸ்ரீகலா பிரபாகர் மறைந்த செய்தியை அறிந்தேன். நான்குநாட்களுக்கு முன்பு, தூக்கமாத்திரைகளை விழுங்கி தற்கொலை செய்துகொண்டார்.   கொட்டாரக்கரையைச் சேர்ந்த என்.பிரபாகரன்நாயர் –சாரதாவின் மகள் ஸ்ரீகலா இடதுசாரி தொலைக்காட்சியான கைரளியின்செய்திப்பிரிவு தலைமைப்பொறுப்பில் இருந்தார். சிறிதுகாலம் சுதந்திரச் செய்தியாளராக செயல்பட்டார்.மீண்டும் கைரளி.கேரள அரசியலில் ஆழ்ந்த பாதிப்புகளை உருவாக்கிய பல செய்திகளை வெளிப்படுத்தியவர்.   இடதுசாரிப்பார்வை கொண்டவரும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108771

இமையம்நோக்கி…

என் நெடுநாள் நண்பரும் திருச்சி வழக்கறிஞருமான செல்வராணி திருச்சியிலிருந்து தனியாக பைக்கில் லடாக் வரை செல்லும் ஒரு பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அருண்மொழியும் அவருமாக ஒரு குழுவுடன் லடாக் செல்வதாக இருந்தது. அருண்மொழி போகமுடியாத நிலை. ஆகவே செல்வராணி தனியாக பைக்கில் கிளம்பியிருக்கிறார்   சாகசம் போல என்னை மகிழ்விப்பது ஏதுமில்லை.சாகசம் என்பது நம் எல்லையை நாமே மீறுவது. நாம் யார் என்று கண்டுபிடிப்பது. செல்வராணியை இப்போது விரும்புவதுபோல் எப்போதுமே விரும்பியதில்லை. இமையம் வசப்படட்டும்

Permanent link to this article: https://www.jeyamohan.in/108754

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-34

யுதிஷ்டிரர் சகுனியின் அறைவாயிலை அடைந்தபோது காலடியோசை கேட்டு துயில் விழித்த வாயிற்காவலன் திடுக்கிட்டு வாய்பிளந்தான். உடலில் கூடிய பதற்றமான அசைவுகளுடன் உள்ளே செல்ல திரும்பி உடனே அவரை நோக்கி திரும்பி வணங்கி மீண்டும் உள்ளே செல்ல முயல அவன் தோள்தொட்டு தடுத்த யுதிஷ்டிரர் “நான் எவருமறியாமல் தனிப்பட்டமுறையில் காந்தாரரை சந்திக்க வந்தேன். அவரிடம் சொல்” என்றார். அவன் தலைவணங்கி உள்ளே சென்றான். அவன் திரும்பிவந்து தலைவணங்கி உள்ளே செல்லும்படி கைகாட்டியதும் “என் மைந்தன் சர்வதன் எனக்குத் துணையாக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108612

தாசியும் பெண்ணும்

[மூவாலூர் ராமாமிருதத்தம்மையார்] இன்று ஆண்கள் சிலர் தனியாகக்கூடினால் பேச்சு முழுக்க சினிமா நடிகைகளைப்பற்றித்தான் இருக்கும். சினிமா தோன்றாத நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எதைப்பேசிக்கொண்டார்கள்? , தாசிகளைப்பற்றித்தான்.   இதற்கு நான் ஆதாரமாகக் கொள்வது வடுவூர் துரைசாமி அய்யங்கார் [ 1880 – 1942] அவர்களின் நாவல்களை. பி.ஏ. பட்டம் பெற்று தாசில்தாராகப் பணியாற்றிய துரைசாமி அய்யங்கார் முழுநேர எழுத்தாளராக ஆனார். தன் நாவல்களை தானே அச்சகம் நடத்தி வெளியிட்டார். தன் நாவல்களை வெளியிட ”மனோரஞ்சனி” என்ற மாதஇதழை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108621

பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் -கடிதங்கள்

அன்புள்ள ஆசானுக்கு ,   பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் படித்தேன். மிக சிறப்பாக எழுதப்பட்ட தொகுப்பு. ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு விதத்தில் வாசகனை கட்டி இழுத்து தன்னகத்தே வைத்துக்கொண்டது. விசேஷமாக என்னை ஆட்கொண்டது யட்சி சிறுகதை. மனது அந்த கதையுடனான ஒரு அழகிய இணைப்பை உணரத்தொடங்கியது. பனைமரத்து யட்சியின் கதையும் மிக மிக சாதாரணமாக ஒரு உறவில் நிகழக்கூடிய  சந்தோஷங்கள்,துக்கங்கள் சலிப்புகள், ஏமாற்றங்கள்  என்பன தத்ரூபமாக  ஆனால் ஒரு நுங்கின் 3 அறைகளுக்குள்ளே நிகழ்ந்திருக்கிறது . அத்தனை அழகு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108727

மயில்மார்க் குடைகள்

இரா முருகனின் இந்த சிறுகதை சமீபத்தில் நான் வாசித்த நல்ல படைப்புகளில் ஒன்று. சுந்தர ராமசாமியின் சீதைமார்க் சீயக்காய்த் தூளை தலைப்பிலிருந்தே நினைவூட்டுகிறது. கலை தன்னைச்  சூழ்ந்திருக்கும் வணிகத்தால், உலகியலால் சூறையாடப்படுவதன் சித்திரம் தொடர்ந்து தமிழில் எழுதப்பட்டு வருகிறது. இதுவும் அவ்வகை கதை   ஒரு பொது வாசிப்பில் ஒரு பாடகியின் வாழ்க்கையின் அவலம் என்றுதான் தோன்றும். ஆனால் மயில்மார்க் குடைக்கான விளம்பரம் முதல் கணவன் வரை எங்கெல்லாம் அவளுடைய இசை கசக்கி நுகரப்படுகிறது என்னும் அடியோட்டம் இதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108645

Older posts «

» Newer posts