Daily Archive: April 28, 2018

செய்திதுறத்தல்

நேற்று ஸ்ரீகலாவின் இறப்புச் செய்தியை ஒட்டி இரவெல்லாம் எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவருடைய இறப்பு உள அழுத்தத்தால். இந்தத் தலைமுறையில் உள அழுத்தங்கள் மிகுதியாகிக் கொண்டே இருக்கின்றன. நானறிந்த ஐந்தில் ஒருவர் உள அழுத்ததிற்கான மருந்துக்களை ஏதேனும் ஒரு தருணத்தில் எடுத்துக்கொண்டவர்கள், தொடர்பவர்கள்   பலகாரணங்கள். முதன்மையாக பொறுப்பு. சென்ற நூற்றாண்டில் தனிமனிதன் மேல் இத்தனை பொறுப்பு இல்லை. கூட்டாகவே அவன் உலகைச் சந்தித்தான். குடும்பமாக, குலமாக. தனியாளுமை பெரும்பாலும் அன்று இல்லை. அதன் குறுகல் ஒருபக்கமென்றாலும் அது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108786

குற்றவாளிகளின் காவல்தெய்வம் கடிதம்

குற்றவாளிகளின் காவல்தெய்வம் குற்றவாளிகளின் காவல் தெய்வம்-கடிதங்கள் அன்புள்ள எழுத்தாளர் அவர்களுக்கு, வணக்கம். நான் தங்கள் எழுத்தை கடந்த நான்கு வருடங்களாக வாசித்து வருகிறேன். விஷ்ணுபுரம் , இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் , இந்திய ஞானம் , இந்தியப் பயணம், அருகர்களின் பாதை, நவீன தமிழிலக்கிய அறிமுகம் , பின் தொடரும் நிழலின் குரல் , உலோகம், இரவு, அனல் காற்று, ஊமைச்செந்நாய், ஈராறு கால்கொண்டு எழும் புரவி, கன்னி நிலம் , அறம் சிறுகதைகள், …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108643

சவரக்கத்தி மேல் நடை -கடிதங்கள்

சவரக்கத்திமுனையில் நடப்பது   ஜெ   சவரக்கத்திமுனையில் நடப்பது கட்டுரை படித்தேன். என்னுடைய அனுபவமும் ஏறத்தாழ இதேதான். உங்கள் எழுத்து எனக்குப்பிடிக்கும். ஆனால் அதை எங்கேனும் பேசத்தொடங்கினால் வரும் எதிர்வினைகள் ஒரே மாதிரியானவை   பெரும்பாலானவர்களுக்கு உங்கள் பெயர் மட்டும்தான் தெரியும். ஆனால் தெரிந்ததுபோல காட்டிக்கொள்வார்கள். தெரியுமே இந்த நூலை எழுதியவர் என்று சொல்லிவிட்டு இந்துத்துவா இல்ல, கருணாநிதிய திட்டினார்ல என்று ஏதாவது சொல்வார்கள்.   உங்களுக்கு எதிரான மனநிலை திராவிடக் கட்சி, இடதுசாரிக் கட்சிக்காரர்களிடம் உண்டு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108618

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-35

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரின் குடில்முற்றத்திற்கு மீண்டு வந்ததுமே யுதிஷ்டிரர் உரத்த குரலில் “எனக்கு ஐயமென ஏதுமில்லை, இத்தெளிவை நான் எப்போதும் அடைந்ததில்லை. யாதவனே, இந்தக் கசப்பு நிறைந்த கனவின்பொருட்டு நான் உனக்கு நன்றியுடையவன்” என்றார். “இங்கு அறமென்றும் நெறியென்றும் மாறாத ஏதுமில்லை. அவையனைத்தும் மானுட உருவாக்கங்களே. அவரவர் இலக்குக்கும் இயல்புக்கும் ஏற்ப கண்டடைவன. அந்தந்த சூழலுக்கேற்ப விளைவன. ஆற்றலுக்கேற்ப நிலைகொள்வன” என்றார். “கணமொரு அறம். தருணத்திற்கு ஒன்று. உள்ளத்திற்கு ஏற்ப. இங்கு ஒவ்வொரு கணமும் நிகழ்ந்துகொண்டிருப்பது அறங்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108649