Daily Archive: April 26, 2018

தாசியும் பெண்ணும்

[மூவாலூர் ராமாமிருதத்தம்மையார்] இன்று ஆண்கள் சிலர் தனியாகக்கூடினால் பேச்சு முழுக்க சினிமா நடிகைகளைப்பற்றித்தான் இருக்கும். சினிமா தோன்றாத நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் எதைப்பேசிக்கொண்டார்கள்? , தாசிகளைப்பற்றித்தான்.   இதற்கு நான் ஆதாரமாகக் கொள்வது வடுவூர் துரைசாமி அய்யங்கார் [ 1880 – 1942] அவர்களின் நாவல்களை. பி.ஏ. பட்டம் பெற்று தாசில்தாராகப் பணியாற்றிய துரைசாமி அய்யங்கார் முழுநேர எழுத்தாளராக ஆனார். தன் நாவல்களை தானே அச்சகம் நடத்தி வெளியிட்டார். தன் நாவல்களை வெளியிட ”மனோரஞ்சனி” என்ற மாதஇதழை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108621

பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் -கடிதங்கள்

அன்புள்ள ஆசானுக்கு ,   பேய்க்கதைகளும் தேவதைக்கதைகளும் படித்தேன். மிக சிறப்பாக எழுதப்பட்ட தொகுப்பு. ஒவ்வொரு கதையும் ஏதோ ஒரு விதத்தில் வாசகனை கட்டி இழுத்து தன்னகத்தே வைத்துக்கொண்டது. விசேஷமாக என்னை ஆட்கொண்டது யட்சி சிறுகதை. மனது அந்த கதையுடனான ஒரு அழகிய இணைப்பை உணரத்தொடங்கியது. பனைமரத்து யட்சியின் கதையும் மிக மிக சாதாரணமாக ஒரு உறவில் நிகழக்கூடிய  சந்தோஷங்கள்,துக்கங்கள் சலிப்புகள், ஏமாற்றங்கள்  என்பன தத்ரூபமாக  ஆனால் ஒரு நுங்கின் 3 அறைகளுக்குள்ளே நிகழ்ந்திருக்கிறது . அத்தனை அழகு. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108727

மயில்மார்க் குடைகள்

இரா முருகனின் இந்த சிறுகதை சமீபத்தில் நான் வாசித்த நல்ல படைப்புகளில் ஒன்று. சுந்தர ராமசாமியின் சீதைமார்க் சீயக்காய்த் தூளை தலைப்பிலிருந்தே நினைவூட்டுகிறது. கலை தன்னைச்  சூழ்ந்திருக்கும் வணிகத்தால், உலகியலால் சூறையாடப்படுவதன் சித்திரம் தொடர்ந்து தமிழில் எழுதப்பட்டு வருகிறது. இதுவும் அவ்வகை கதை   ஒரு பொது வாசிப்பில் ஒரு பாடகியின் வாழ்க்கையின் அவலம் என்றுதான் தோன்றும். ஆனால் மயில்மார்க் குடைக்கான விளம்பரம் முதல் கணவன் வரை எங்கெல்லாம் அவளுடைய இசை கசக்கி நுகரப்படுகிறது என்னும் அடியோட்டம் இதை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108645

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-33

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரிடம் யுதிஷ்டிரர் கேட்டார் “யாதவனே, நான் உன்னை காணவேண்டுமென எண்ணிய தருணத்தை சொல்கிறேன். விழியிலாதாயிற்றெனச் செறிந்த இருளை நோக்கி நின்றபோது என்னை எண்ணி வியந்தும் மருகியும் இகழ்ந்தும் அலைபாய்ந்தேன். ஒரு தருணத்தில் தோன்றியது நான் இந்திரன் அல்லவா என்று. அக்கணத்தில் ஏற்பட்ட நடுக்கில் நான் அவனென்றே ஆனேன். அவனென நின்று அனைத்தையும் நோக்கி மீண்டேன்.” “விஸ்வஃபுக் ஏன் மேலும் விழைவுகொண்டான்? பிரம்மத்தின் பேருருவை கண்ட தேவர்க்கிறைவன். முடிவிலிகளாலான முடிவிலி என்று நூல்கள் சொல்வதை, அறிதல்களுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108582