Daily Archive: April 24, 2018

கல்வியும் காதலும்

    ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படி காதல் மலரும்? கோயிலில் குளக்கரையில் அவர்கள் சந்தித்துக்கொள்ளலாம். கல்விச்சாலைகளில் சந்தித்துக் கொள்ளலாம். கண்ணும் கண்ணும் சந்திக்கும். ஓரிரு அன்புச்சொற்கள், கேலிகள். பின் காதல் தெரிவிக்கப்படும். ஆனால் நூறாண்டுகளுக்கு முன்பு பல நாவல்களில் காதல் மலர்வது ஆண் பெண்ணுக்கு எழுதப்படிக்கச் சொல்லிக்கொடுப்பதன் வழியாக! நூறாண்டுகளுக்கு முன்பு ஆண் தன் பெண்ணுக்கு எழுத்தறிவிப்பது என்பது பரமரகசியமாகச் செய்யவேண்டிய ஒன்றாக இருந்தது. வீட்டுப்பெரியவர்களுக்குத் தெரிந்தால் அவ்வளவுதான். ரகசியமான எந்தச்செயலும் கிளர்ச்சியூட்டக்கூடியதுதானே?   1877 …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108594

சோர்பா கடிதங்கள்

சோர்பா    எனும்   கிரேக்கன் – அருண்மொழி நங்கை   அன்புநிறை ஜெ,   சோர்பா எனும் கிரேக்கன் நாவல் குறித்த பதிவை வாசித்தேன். தெளிவான நடையில் ஆழ்ந்த அவதானிப்புகளை எழுதியிருக்கிறார்கள். தத்துவம், வரலாறு, சமூகவியல், மதம் என விரியும் பார்வையில் நாவலின் விரிவும் தெரிகிறது, அருண்மொழி நங்கை அவர்களுடைய பரந்துபட்ட வாசிப்பும் தெரிகிறது. உபநிடத வரிகள் மற்றும் சார்வாக தரிசனத்தின் ஒளியில் இந்த கிரேக்க நாவல் வாசிக்கப்படும் போது கிடைக்கும் திறப்பு இலக்கியம் எப்போதும் மனித குலம் முழுமைக்குமான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108591

சிறுவெளி -கடிதங்கள்

ஒரு சிறு வெளி   அன்புள்ள ஜெ.,   கமலாம்பாள் சரித்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் அப்பளம் உடைத்தல், பூ எறிதல் போன்ற விளையாட்டுகள் என் கல்யாணத்திலும் நடந்தன.. ஆனால் அதில் குறிப்பிடட பாலியல் சீண்டல்கள் மட்டும் மிகக் குறைவு.. நீங்கள் சொன்ன மாதிரி அவ்வளவு இறுக்கமாக மாறி விடடோமோ என்ன..   அனால் ஒருபுறத்தில் இளைய தலைமுறை மிகவேகமாக எல்லைகளை கடப்பதை கண் கூடாக கண்டுகொண்டிருக்கிறேன்.. பெண்கள் வெளிப்படையாக ஒயின் பரிமாறிக் கொள்கிறார்கள்.. உடையின் எல்லைகள் மாறுகின்றன.. ஆண் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108587

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-31

பகுதி ஏழு : மறைமெய் “அவன் பெயர் யுதிஷ்டிரன், குருவின் குடியில் விசித்திரவீரியனின் குருதிவழியில் பாண்டுவின் மைந்தனாகப் பிறந்தவன். இந்திரப்பிரஸ்தத்தின் முடிபெயர்ந்த அரசன். இப்போது உபப்பிலாவ்ய நகரியின் சிறிய அரண்மனையில் தன் பள்ளியறைக்குள் இருளை நோக்கியபடி தனித்து நின்றிருக்கிறான். சற்று முன்னர்தான் அவனை அவன் இளையோன் சகதேவன் சந்தித்து மீண்டான்” என்று உபகாலனாகிய சாகரன் சொன்னான். அவன் முன் மீசையை நீவியபடி நிலம்நோக்கி மாகாலன் அமர்ந்திருந்தார். “காலத்திற்கிறைவனே, அவன் அருகிருந்த பீடத்திலிருந்து உடைவாளை எடுத்து தன் கழுத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108553

வெண்முரசு புதுவைக் கூடுகை

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் . எழுத்தாளர்  திரு. ஜெயமோகனின்  நிகழ்காவியமான  “வெண்முரசின் 14 வது கலந்துரையாடல் ”   26-04-2018வியாழக்கிழமை அன்று  நடைபெற  இருக்கிறது . அதில்  பங்குகொள்ள  வெண்முரசு  வாசகர்களையும்,  வெண்முரசுகுறித்து  அறிய  ஆர்வம்  உடையவர்களையும்  அன் புடன்  அழைக்கிறோம்.. இந்த மாத கூடுகையின் தலைப்பு   “வெண்முரசு 2 வது நூல் மழைப்பாடல்”   பகுதி ஆறு : தூரத்துச் சூரியன்   மற்றும்   பகுதி ஏழு : நீள் நதி   26 முதல் 38 வரை உள்ள பகுதிகளைக் குறித்து நண்பர்  திரு. மயிலாடுதுறை   பிரபு  அவர்கள்   உரையாடுகிறார் . நாள்:-  வியாழக்கிழமை (26-04-2018) மாலை 6:00 மணி முதல் 8:30  மணிவரை  நடைபெறும் இடம்:-   கிருபாநிதி அரிகிருஷ்ணன், ” ஶ்ரீநாராயணபரம்”, முதல்மாடி, 27, வெள்ளாழர் வீதி , புதுவை-605001 Contact no:- 99-43-951908 , 98-43-010306.  

Permanent link to this article: https://www.jeyamohan.in/108638