Daily Archive: April 23, 2018

சவரக்கத்திமுனையில் நடப்பது

ஜெயமோகன் அவர்களுக்கு நான் தங்களது புதிய வாசகி. நான் முதலில் படித்தது நான் இந்துவா கட்டுரை. பின்னர் தங்களுடைய அனைத்து எழுத்துக்களையும் படித்த கொண்டிருக்கிறேன் முக்கியமாக ஆன்மீகம் சார்ந்தவையை. மிக்க நன்றி என்னுள்ளே இருந்த பல கேள்விகளுக்கான விடை கிடைத்துள்ளது. பல நூல்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. வட இந்தியா வட மொழி மேல் இருந்த அல்லது இப்போதுள்ள ஊடகங்களினால் ஏற்படுத்தப்பட்ட வெறுப்பு நீங்கியுள்ளது. ஆனால் தங்களின் கருத்துக்களை என்னுடைய நண்பர்கள் வட்டத்தில் ஒன்றை கூட பேச முடிய …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108531

சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்

  தமிழின் முதன்மையான நவீன எழுத்தாளர்களில் ஒருவரான சுரேஷ்குமார இந்திரஜித்தின் புனைவுலகம் குறித்த ஒரு சிறப்பு மலரை பதாகை இணைய இதழ் வெளியிட்டிருக்கிறது. சுரேஷ்குமார இந்திரஜித் முப்பதாண்டுகளாக எழுதிவருபவர். குறைத்துச் சொல்லுதலின் கலை என அவருடைய ஆக்கங்களைப் பற்றிச் சொல்லமுடியும். சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். குறைவாக எழுதியும் தமிழிலக்கியத்தில் தவிர்க்கமுடியாத இடத்தில் இருப்பவர்   சுரேஷ் பிரதீப், ஜிஃப்ரி ஹஸன் முதலிய இளைய படைப்பாளிகளும் க.மோகனரங்கன், சுகுமாரன், ந.ஜயபாஸ்கரன் போன்ற முந்தைய தலைமுறை படைப்பாளிகளும் எழுதியிருக்கும் இந்த …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108562

டு லெட்

இனிய ஜெயம்   செழியன் அவர்களின் டு லெட் திரைப்படம் தேசிய விருது வென்றமைக்கு எனக்கு தெரிந்து பொதுவில்  வாழ்த்து தெரிவித்த ஒரே ஆளுமை நீங்கள் . இதில் இரண்டு தளங்கள் உள்ளது .ஒன்று  பொதுவில், இது தமிழ் நிலத்துக்கு கிடைத்த பெருமிதம் அதை ஒரு எழுத்தாளராக  நினைவூட்டும் வகையில்  . தனியே திரை உலகின் ஒரு பகுதியை சேர்ந்தவர் நீங்கள் என்பது மற்றொன்று, அதன் பகுதி நீங்கள்  எனும் நிலையில் இது முக்கியமாகிறது  .   …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108549

பிறந்தநாள்

இன்று [22-4-2018]  என் பிறந்தநாள். வழக்கமாக பிறந்தநாட்களை நினைவில் வைத்திருப்பதில்லை. எவர் பிறந்தநாளையும். என் பிறந்தநாளே எவரேனும் சொல்லி நினைவுக்கு வரவேண்டும். பிறந்தநாளைக் கொண்டாடுவதும் வழக்கமில்லை. காலையில் எழுந்து முழுப்பகலும் வெண்முரசின் ஒரே ஒரு அத்தியாயம் எழுதினேன். 11 மணிநேரம். எழுதிமுடித்து அந்தியில் ஷேவ் செய்து குளித்தேன். வாழ்த்துக்கள் வந்துகொண்டிருந்தன.   மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகள். அனைவருக்கும் நன்றி அ.முத்துலிங்கம் அவர்களின் வாழ்த்து எப்போதுமே ஓர் ஆசி. பாரதிமணி, கல்யாண்ஜி, பா.ராகவன், தேவதேவன் என எழுத்தாளர்களின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108573

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-30

நான் வசிட்டரின் முதல் மைந்தர் சக்திக்கு அதிருஸ்யந்தி என்னும் மலைமகளில் மைந்தனாகப் பிறந்தவன். விழியறியாது காட்டில் உலவும் கலையறிந்த ஹரிதகர் என்னும் குலத்தில் பிறந்தவள் என் அன்னை. காட்டில் தவமியற்றச் சென்ற என் தந்தை அவளை அவள் நோக்காலேயே உணர்ந்து தன் எண்ணத்தால் கட்டி அருகணையச் செய்தார். அவள் நாணி முன்வந்து நிற்க “என்மேல் நீ கொண்ட காதலை நான் உணர்ந்தேன்” என்றார். சிரித்தபடி “விழியறியாது எதையும் மறைக்கலாம், காமத்தை தவிர” என்றார். அவளும் நகைத்தாள். எந்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108525