Daily Archive: April 22, 2018

ஒரு சிறு வெளி

இளைஞன் தன் காதலியின் ஊருக்கு வருகிறான். அங்கு ஒரு விழா நடந்து கொண்டிருக்கிறது. காதலியின் வீட்டைக் கண்டுபிடித்து உள்ளே நுழைகிறான். ”குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்று கேட்கிறான். காதலி தண்ணீருடன் வெளியே வருகிறாள். அவளுக்கு அவனைத் தெரியும் அவன் கண்களில் காதலையும் பார்த்திருக்கிறாள். ஆனால் எதையும் வெளிக்காட்டாமல் அவள் தண்ணீர் குவளையை நீட்டும்போது அவன் அவள் கையைப் பற்றிவிடுகிறான். அவள் அறியாது ’அம்மா இவன் என்ன செய்கிறான் பார்!” என்று குரலெழுப்புகிறாள். சற்று அப்பால் இருக்கும் காதலியின் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108499

சதிரும் பரதமும்

  சதிர், பரதக் கலையின் மூலம்; ஆதி முதல் அந்தம் வரை பெயர்த்தெடுத்து ‘பரதநாட்டியம்’ என மறுகட்டமைக்கப்பட்டிருக்க வேண்டிய சதிர், அது கையிலெடுக்கப்பட்டவர்களால் மறுதலிக்கப்பட்டது. இன்று உலகம் முழுவதிலும் மேட்டுக்குடிக் கலையாகப் பரிணமித்திருக்கிறது பரதநாட்டியம். ஆனால், அதற்கு உடல்கொடுத்த சதிர், இப்போது தனது உயிரை மட்டும் தக்கவைத்துக்கொண்டு அமைதியாக நிற்கிறது  ‘சதிர்’ கலை இழந்த வரலாறு!

Permanent link to this article: https://www.jeyamohan.in/108527

குற்றவாளிகளின் காவல் தெய்வம்-கடிதங்கள்

      குற்றவாளிகளின் காவல்தெய்வம் அன்புள்ள ஜெ   காந்திஜியின் கனவுகளுக்கு நேர் மாறாய் ஆண்கள் கூட பாதுகாப்பாக செல்ல முடியாத அள்விற்கு நமது  ஜனநாயகம் பாழ்பட்டு கிடக்கிறது. இதற்கு புறையோடி போயிருக்கும் லஞ்சம் ஊழல் இவற்றுடன் தாமதிக்கப்படும் நீதியும் ஒரு காரணமாய் இருக்கிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இப்பொழுதெல்லாம் நீதி மன்றத்திற்கு செல்பவர்களில் பெரும்பாலானோர் நீதியை தாமத்ப்படுத்தவே செல்கிறார்கள் என்பதே உண்மை.     ஒரு வீட்டின் உரிமையாளர் வாடகைக்கு இருப்பவரை  ஒப்பந்தத்தின்படி மூன்று மாதம் நோட்டிஸ் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108502

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-29

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவர் கிருஷ்ண துவைபாயன வியாசரிடம் சொன்னார் “கவிமுனிவரே, பிரம்மத்திற்கு ஆயிரம் யுகம் ஒரு பகல், ஆயிரம் யுகம் ஓரிரவு. ஆயிரம்கோடி பகலிரவுகளாலான ஆயிரம்கோடி யுகங்கள் அரைக்கணம். நாம் கோருவதனைத்தும் காலத்தில், இடத்தில், கருத்தில் விளையும் விடைகளை. நம்மால் கோரப்படுவது காலமும் இடமும் கருத்தும் கடந்த ஒன்று. அது துளித்துச் சொட்டும் ஒரு துளி இப்புவியை ஆயிரம் துண்டுகளென சிதறடிக்க வல்லது.” ஆயிரம் மடங்கு எடைகொண்டுவிட்டதென தன் உடலை உணர்ந்தபடி அமர்ந்திருந்த வியாசரிடம் இளைய யாதவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108523