Daily Archive: April 21, 2018

பேய்க்கிழக்கு

  குளிர்கால இரவு. ஒரு வீட்டில்மட்டும் வரவேற்பறை விளக்குகள் எரிந்தன. ஜன்னல்கள் இழுத்துவிடப்பட்டு கணப்பு கனன்றுகொண்டிருந்தது.  வயதான அப்பா வைட்டும் இளைஞனான மகன் ஹ்ர்பெர்ட்டும் சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அருகே வெண்ணிறமான தலைமயிர்கோண்ட அம்மா பின்னல்வேலைசெய்துகொண்டிருந்தாள். அது அவர்கள் மூவர் மட்டும் கொண்ட சிறியகுடும்பம்.   ”இந்தமாதிரி காற்றும் பனியும் கொட்டுகிறதே…அவர் வருவாரா?”என்று மகன் சந்தேகப்பட்டான். ”பார்ப்போம்”என்றான்.   அப்போது வண்டிவந்து நிற்கும் ஒலி கேட்டது. கனத்த காலடி ஓசைகள் கேட்டன.   ”வந்துவிட்டார்” என்றார்  வைட். அவர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1471

குரங்குத்துணை -கடிதங்கள்

  குரங்குத்துணை அன்புள்ள ஜெ,   உங்கள் தளத்தில் சில நாட்களுக்கு முன்பாக வெளிவந்த ‘குரங்குத்துணை’ என்ற மொழியாக்கக்கதை தொடர்பாக சில கேள்விகள்.   இந்தக்கதை மொழியாக்கம் என்று அல்லாமல் கதைச்சுருக்கம் என்று அளிக்கப்பட்டுள்ளது. மூலத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் மூலத்தின் உணர்வுகளெல்லாம் சிறப்பாககடத்தப்பட்டுள்ளது என்றாலும் வரிக்கு வரி மொழிபெயர்ப்பாக இல்லை. சில இடங்கள் விடப்பட்டுள்ளது. தமிழ் வாசகனுக்குபல இடங்கள் முக்கியமற்றவை என்றாலும் சில முக்கியமானவையும் கூட (கதைசொல்லி குரங்கை பற்றிச் சொல்லும் போது மூலத்தில் உள்ள ஒரு வரி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108505

கையை தொடாதே!

நேற்று வெண்முரசில் எழுதிய கடுவெளியின் காட்சி மீண்டபின் அச்சத்தை, தனிமையை அளித்தது. இரக்கமில்லாத பிரம்மாண்டம் என்ற சொல் துரத்திவந்தபடியே இருந்தது. மீள்வதற்காக இரவில் யூடியூபில் தேடி இந்தப் பாடலைக் கண்டேன். மீண்டும் மீண்டும் இரண்டுநாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது பத்மினியின் நடனம் இயல்பான உணர்வுகளுடன் மிகவிரைவான அசைவுகளுடன் உள்ளத்தைக் கவர்கிறது. கதக் சாயல்கொண்ட சுழற்சிகள். துள்ளலான இசை. அதுவே இதுவும். முடிவிலாதது கரிய அழகனாக வந்து கையைப்பிடித்து இழுக்கிறது     நீல வண்ணக் கண்ணனே உனது எண்ணமெல்லாம் நானறிவேன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108538

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-28

நைமிஷாரண்யத்தில் இளைய யாதவரின் சிறுகுடிலின் அறையில் தன்னை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தமர்ந்த வியாசர் “என்ன நிகழ்ந்தது? துயின்றேனா? கனவா?” என்றார். “மீண்டீர்கள்” என்றார் இளைய யாதவர். வியாசர் “என்னை காட்டுக்குள் சூக்ஷ்மம் என்னும் சுனைவரை கொண்டுசென்றீர்கள். நான் அதில் இறங்கினேன்…” என்றபின் தன் ஆடைகளை தொட்டுநோக்கி “அதுவும் உளமயக்கா?” என்றார். “இப்போது இங்கு நீங்கள் சொல்லாடிக்கொண்டிருப்பது உளமயக்கென்றால் அதுவும்தான்” என்றார் இளைய யாதவர். “ஆம், ஒருகணம் நடுவே நான் என் காட்டுக்குள் சோலையில் தனித்திருப்பதாகவும் உணர்ந்தேன்” என்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108517