Daily Archive: April 18, 2018

ஊட்டியில் ஒருநாள்

ஏப்ரல் 14 விஷு. கேரளத்தின் கணிகாணும் திருநாள். தமிழ்ப்புத்தாண்டு. தொன்மையான தமிழ் ஆண்டுப்பிறப்பு இதுதான்.  வெவ்வேறு வகையில் தென்னிலம் முழுக்கவே இந்நாள் கொண்டாடப்படுகிறது, நாம் இன்று ஊகிக்கவே முடியாத தொல்பழங்காலத்தில் பொதுவாக இளவேனிலை ஒட்டி ஆண்டைத் தொடங்கி நாட்களைக் கணக்கிட்டிருக்கிறார்கள். அன்றெல்லாம் கொன்றை பூப்பதுதான் இளவேனிற் காலத்தின் அடையாளம். கொன்றைக்கொடி ஏந்தி இளவேனில்மகள் எழுந்தாள் என்பது மலையாளக் கவிதை.   கொன்றை என்றால் சரக்கொன்றை மட்டும்தான். இன்றுள்ள பெரும்பாலான கொன்றைகள் சீமைக்கொன்றை வகை. 1700 களில் இந்தியாவுக்கு போர்ச்சுக்கீசியர்களாலும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108399

கொல்லிப்பாவை, கைதி

அன்பின் ஜெயமோகனுக்கு. நீங்கள் கொல்லிப்பாவையில் கைதி என்ற தலைப்பில் எழுதிய உங்கள் முதல் கவிதையை அண்மையில் வாசித்திருந்தேன். இதன் பிறகு தங்களுடைய மலையாள மொழிபெயர்ப்புக் கவிதை நூலையும் வாசித்துள்ளேன். தாங்கள் கவிதைகளை ஆரம்பத்தில் எழுதுவதில் அதிக பிரயத்தனம் காட்டியதற்கான சான்றாக கைதி என்ற கவிதையைக் கருதுகிறேன். இதன் பிற்பாடு நாவல், சிறுகதை, அல்புனைவுகளில் மூழ்கிய ஜெயமோகன்தான் தமிழுலகில் பெருமளவில் அறியப்பட்டவராக இருக்கிறார். ஒருவேளை கவிதைத்துறையில் சென்ற ஜெயமோகன் தேடல்கள் குறைந்தவராக மாறியிருப்பாரா. இதை அறிந்தேதான் தவிர்த்தீர்களா.  அத்துடன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108415

மொழியாக்கம் ஒரு கடிதம்

  மொழியாக்கம் பற்றி மீண்டும்… எம்.ஏ.சுசீலா நன்றியுரை இந்திரா பார்த்தசாரதி உரை இரண்டாம் மொழிபெயர்ப்பு அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,   நான் செந்தில்நாதன். எம்.ஏ.சுசீலா அவர்களுக்கு விஷ்ணுபுரம வாசகர் வட்டமும் ரஷ்ய கலாச்சார மையமும் இணைந்து நடத்திய பாராட்டு விழாவிற்கு வந்திருந்தேன்.  ”மூல மொழி தெரியாமல் மொழிபெயர்க்கக் கூடாது” என்று குற்றம் சாட்டி வந்திருந்த கடிதம் அவருக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியது என்று எழுதியிருந்தார். அதன் விளைவாகவே இந்தக் கடிதம்.   சுசீலா அவர்கள் செய்துள்ளது எத்தனை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108425

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-25

நைமிஷாரண்யத்தில் கிருஷ்ண துவைபாயன வியாசர் இளைய யாதவரிடம் சொன்னார் “யாதவரே, நான் வியாசவனத்தில் இருந்து கிளம்பும்போது தாளவொண்ணா ஆற்றாமையுடன் வந்தேன். வெறுமையும் கசப்பும் என்னில் நிறைந்திருந்தன. இங்கு வந்து உங்களைப் பார்த்த முதற்கணமே அவையிரண்டும் அகன்றன. ஏனென்றால் நீர் நான் புனைந்த கதைத்தலைவன். எத்தனை துயரடைந்தாலும், எவ்வளவு வெறுமையில் திளைத்தாலும் பிறர்போல் பொருளின்மையை நான் அடைவதில்லை. என் விழுப்பொருளாக நான் படைத்தவை நின்றிருக்கும்.” “உங்களை கால்தலை என நோக்க நோக்க நான் நான் என்று என் உள்ளம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108368