Daily Archive: April 17, 2018

ஆயுதம் செய்தல்

ஆசிரியருக்கு,   சென்னையில் நடைபெற்ற இந்த ஆயுத தளவாட கண்காட்சி பற்றி பார்த்திருப்பீர்கள். இது நாம் காந்தி தேசம் எனக் கூறிக் கொள்வதன் அடிப்படைக்கு எதிராக உள்ளது. இது ஒரு அறப்  பிறழ்வு எனவே நான் எண்ணுகிறேன்.   இரண்டாம் உலக  போரில் ஜெர்மானிய வதை முகாமுக்கு எதிராக ஜெர்மானிய அறிவு ஜீவிகளோ அல்லது சமூகப் போராளிகளோ அல்லது பொதுமக்களோ எதுவும் கருத்து தெரிவித்ததாக பெரிதாக வரலாற்றில்  இல்லை , அதே போல சீனாவில், கொரியாவில், மலேயாவில் கட்டவிழ்க்கப்பட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108376

கவிதை மொழியாக்கம் -விவாதம்

கவிதை மொழியாக்கம்- வெ.நி.சூரியா கடிதம் கவிதை மொழியாக்கம் -சீனு வெ.ஸ்ரீராம் கவிதை மொழியாக்கம் -கடிதம் கவிதை மொழியாக்கம் -எதிர்வினை கவிதை மொழியாக்கம் – ஒரு விளக்கம் அன்பின் ஜெ, ஆக்டோவியா  பாஸ்  எழுதிய “நீரின் சாவி”  என்ற கவிதையின்  மொழியாக்கம் தொடர்பான எதிர்வினைகளை வாசித்தேன்.  குறிப்பாக அதில் வரும்  பிரெஞ்சு வாசகத்திற்கு அணுக்கமானபொருளை  தமிழில்  எடுத்து வர வேண்டும்  என்ற முனைப்பை  என்னால் உணர முடிகிறது . ஆனால்,  அந்தக்  கவிதையில்  அதை விட முக்கியமாக எனக்குத்  தோன்றுவது,  அதற்கும் முன்றைய  தொடர் – Above and  below/great  gulfs of  calm. இயற்கையின்  பெருவெளியை  சுருக்கித் திருத்துவது  கவிதையின்  ஆடுகளம்.மெல்லிசையில் ஓடும்  வலியின்  இழை போல,  கவிதைளில்   மனித நேசத்தின்   தொனி  …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108353

பனிமனிதன் -கடிதங்கள்

அன்புள்ள ஜெ,   இரண்டு வருடங்களுக்கு முன் கலிஃபோர்னியாவில் நண்பர் திருமலைராஜன் இல்லத்தில்  உங்களை சந்தித்தேன். பிறகு வேலை மாற்றலாகி  இப்போது டெக்சாஸில் வசிக்கிறேன்.   கடந்த ஆண்டு இந்தியா சென்ற போது “பனி மனிதன்” வாங்கி வந்து என் மகள்களுக்கு தினம் ஒரு பகுதி என்று இரவில் படித்து கதையை சொன்னேன். நேற்று என் மகள் பள்ளியில் இருந்து திரும்பி வந்த பின், “அப்பா, நாங்கள் “Big Foot” பற்றி படித்தோம். அதற்கு இந்தியாவில் பெயர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108252

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-24

யாதவரே, நான் தவிர்க்கமுடியாத இடத்தை உருவாக்கிவிட்டு சாத்தன் அமர்ந்திருந்தார். “காவிய ஆசிரியன் என்பது தீயூழ் என எவரும் சொல்லி கேட்டதில்லை. காலத்தை வென்று வாழ்பவன் அல்லவா அவன்?” என்றேன். “ஆம், முதற்கவிஞன் கொல்லப்பட்ட அன்றிலை நோக்கி விடுத்த விழிநீர்த்துளியின் ஈரம் இன்னமும் காயவில்லை என்பார்கள். தலைமுறைகளைக் கடந்து, காலப்பெருக்கைத் தாண்டி நிலைகொள்கிறதென்றால் அது எத்தனை பெரிய துயர்!” என்றார். என் உள்ளம் நடுங்கியது. “அத்தகைய பெருந்துயர் எனக்கும் காத்திருக்கிறது என்கிறீர்களா?” என்றேன். அவர் அதற்கு நேரடியாக மறுமொழி …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108356