இப்படி அரிதாகவே நிகழ்கிறது, எனக்குக் கடந்தகால ஏக்கங்கள் மேல் ஈடுபாடு மிகக்குறைவு. நான் நிகழில் வாழ்பவன். என்னைமீறிய எதிர்காலக் கனவுகள் கொண்டவன். ஆனால் இறந்தகாலம் அழுத்த அழுத்தச் செறிந்து எங்கோ விதையென்று ஒளிந்திருக்கிறது. நேற்றிரவு புலரியில் ஒரு கனவு. நான் படுத்துக்கொண்டிருக்கிறேன். விடிந்துவிட்டிருந்தது. அலெக்ஸ் மாடியேறி என் படுக்கையறைக்குள் வந்து காலடியில் அமர்ந்தார். “ஜெ, எப்டி இருக்கீங்க?” என்றார். “எப்ப வந்தீங்க?” என்று எழுந்துகொண்டேன். ”இப்பதான். அருண்மொழி காபி போடுறாங்க. அதான் …
Daily Archive: April 16, 2018
Permanent link to this article: https://www.jeyamohan.in/108363
பழைய யானைக் கடை
இனிய ஜெயம் சமீபத்தில் வெளியாகி நான் வாசித்த நூல்களில் ஒன்று காலச்சுவடு வெளியீடான கவிஞர் இசையின் பழைய யானைக் கடை எனும் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய நூல் . தொல்காப்பியம் முன்வைக்கும் எண்வகை மெய்ப்பாடுகளில் நகை என்பதே முதல் மெய்ப்பாடு . [ அதற்கான உதாரண கவிதை எதுவும் தொல்காப்பியம் சுட்டவில்லை என ஆ இரா வெங்கடாஜலபதி தெரிவிக்கிறார் ]. சங்கம் முதல் இன்று வரை தீவிர தமிழ் இலக்கிய கவிதைகள் எனும் வெளிக்குள் தொழில்பட்ட நகை …
Permanent link to this article: https://www.jeyamohan.in/108350
ஒரு சந்திப்பு -கார்த்திக் குமார்
இனிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு ., நலம். நலம் அறிய ஆவல். தங்களின் வாசகன் என்ற முறையில் , நான் எழுதும் முதல் கடிதம் இது. கட்டுரை வாயிலாக தான் அறிமுகம். தங்களுடைய சிறுகதை, புதினம் என்று வாசித்த பிறகு, ஏதோ சரியான ஆளிடம் வந்து சேர்ந்த உணர்வு. என்னுடைய வாசிப்பு பாலகுமாரனின் “இரும்பு குதிரை”யில்துவங்கி தற்பொழுது “விஷ்ணுபுரத்தில் வந்து நிற்கிறது. உங்களுக்கு கடிதம் எழுத வேண்டும் என பல முறை எண்ணியபொழுது அது …
Permanent link to this article: https://www.jeyamohan.in/108341
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-23
பகுதி ஆறு : ஊழ்கம் நைமிஷாரண்யத்திலிருந்து வெளியே வந்த யமன் ஆழ்ந்த தனிமையை உணர்ந்தார். அங்கு கிளைவிரித்து நின்றிருந்த மருத மரத்தடியில் கைகளை மார்பில் கட்டியபடி அடிமரத்தில் சாய்ந்து சூழ்ந்திருந்த கருக்கிருட்டை நோக்கினார். பின்னர் கால்தளர்ந்து வேர்களில் அமர்ந்தார். சுட்டுவிரலால் இடது மீசையைச் சுழற்றி முறுக்கி நீட்டி அளைந்து கொண்டிருந்தார். “அது புரவி” என்னும் சொல் அவருக்குள் எஞ்சியிருந்தது. எவர் எவரிடம் சொன்னது அது? எவர் எண்ணிக்கொண்டது? கூகையொன்றின் ஒலிகேட்டு தன் நிலை மீண்டு அவர் மீண்டும் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/108348