Daily Archive: April 15, 2018

குரங்குத்துணை

  வி.எஸ்.பிட்செட் எழுதிய தி செயிண்ட் என்னும் சிறுகதை இது * பதினேழு வயதிருக்கும்போது எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமலாகியது. கொஞ்சநாளாகவே அது நிலையிலாமல்தான் இருந்துகொண்டிருந்தது. நாங்கள் வசித்துவந்த இடத்தின்றருகே இருந்த ஆற்றங்கரையில் இதற்குக் காரணமான சம்பவம் நடந்தது.   நான் அப்போது என் மாமாவுடன் தங்கியிருந்தேன். அவர் நொடித்துப்போனபின்னர் ஒரு சின்ன மரச்சாமான்கடையை ஆரம்பித்து நடத்திவந்தார். கடவுள் எப்படியாவது உதவிசெய்வார் என்று அவர் நம்பினார். அப்போது கனடா டொரொண்டோவிலிருந்து ‘கடைசிச் சுத்திகரிப்பு சபை‘ என்ற பெயருள்ள …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/1752

சுவையின் வழி -கடிதங்கள்

  சுவையின் வழி   ஜெமோ,   சுவை நாவிலிருக்கிறதா?இல்லை சுவைக்கும் பொருளில் இருக்கிறதா என்று பிரித்தறியமுடியாத அத்வைத நிலையில்தான் நீங்கள் குறிப்பிட்டிருந்த சிட்டுக்குருவி இருக்கிறது. அணுகுந்தோறும் ஏற்படும் அணுகமுடியாதவனின் தவிப்பு அச்சிட்டுக்குருவிக்கு இருக்கப் போவதில்லை. இயற்கைக்கு தன்னை ஒப்புக்கொடுத்தவர்கள் மெனக்கெடல் எதுவுமில்லாமல் தாங்களாகவே தங்களை செதுக்கிக் கொள்கிறார்கள். இந்ந நுண்ணர்வற்றவர்கள் தான் பல மரவெட்டி அறிஞர்களின் கோடாலிகளைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள், பூக்களை கொய்வதற்கு.   எம்.ஏ. சுசீலா அவர்கள் மொழிபெயர்த்த தஸ்தயேவ்ஸ்கியின் ‘நிலவறைக் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107970

இரண்டுமுகம் கடிதம்

தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்   இரண்டு முகம்   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு   தங்கள் இரண்டு முகம் கட்டுரை படித்தேன் இதை வேறு கோணத்திலும் பிரயோகிக்கலாம் என்று தோன்றியது. இன்று இல்லறத்தினுள்ளும் இந்த பிரச்சனை இருக்கிறது. ஆண் பெண் இருவருக்கும் தனி தனி எண்ணங்கள் குறிக்கோள்கள் இருக்கின்றன,ஒருவருக்கு மிக முக்கியமான ஒன்று மற்றவர்க்கு ஏளனமாக இருக்கிறது. பலர் குழந்தைகள் நலனிற்காக ஒன்றாக இருக்கின்றனர். வேலை போன்றவற்றிலாவது வேறு வகையில் விடுபடலாம் இது போன்ற நிலைமைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107995

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-22

விதுரர் நொண்டியபடி படிகளில் மீண்டும் ஏறி கதவை அடைந்து அதை ஓங்கி ஓங்கி அறைந்தார். கால்களாலும் கைகளாலும் அதை மாறி மாறி தாக்கினார். உரக்க ஓலமிட்டார். ஒவ்வொரு கணமும் எடைமிகுந்தபடியே செல்ல அழுகையும் ஆத்திரமுமாக கதவின்மேல் மோதினார். தாளமுடியாமல் தலையால் அதை அறைந்தார். “யாதவரே! யாதவரே” என தான் கூவுவதை தானே உணர்ந்தபோது திகைப்புடன் என்ன நிகழ்கிறதென்று உணர்ந்தார். “யாதவரே, போதும்… என்னை மீட்டெடுங்கள்” என்றார். “அத்தருணத்தை கைவிடுவது உங்கள் கைகளிலேயே” என்றார் இளைய யாதவர். விதுரர் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108339