Daily Archive: April 14, 2018

வாழ்த்துக்கள்,செழியன்

நண்பர் செழியன் இயக்கிய டுலெட் என்னும் திரைப்படம் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. செழியனை நான் பத்தாண்டுகளாக அறிவேன். பாலாவின் இரண்டு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.டு லெட் படத்தை நான் இன்னமும் பார்க்கவில்லை. செழியன் பெற்றுள்ள இந்த வெற்றி மகிழ்வளிக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

Permanent link to this article: https://www.jeyamohan.in/108372

மொழியாக்கம் பற்றி மீண்டும்…

எம்.ஏ.சுசீலா நன்றியுரை இந்திரா பார்த்தசாரதி உரை   அன்புள்ள ஜெ,   எம்.ஏ.சுசீலாவின் மொழியாக்கத்தைப் பாராட்டிய நிகழ்ச்சியில் பேசப்பட்ட ஒரு கருத்தைப்பற்றி இங்கள் எண்ணத்தை அறியவிரும்பியே இந்தக்கடிதம். மொழியாக்கம் பற்றிப் பேசும்போது எம்.ஏ.சுசீலா அவர்களும் இந்திரா பார்த்தசாரதி அவர்களும் அவர்களுக்கு மொழியாக்கப் பயிற்சிகள், அதற்கான கொள்கைகளில் நம்பிக்கை இல்லை என்று சொல்லியிருந்தார்கள். [எங்கள் கல்லூரியில் மொழியாக்க வகுப்புகள் உள்ளன. பாடத்திட்டத்திலேயே மொழியாக்கம் உள்ளது]  எம்.ஏ.சுசீலா பேசும்போது மூலமொழியில் இருந்து மொழியாக்கம் செய்யவேண்டும் என்பது கட்டாயமில்லை என்று சொன்னார்கள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108303

துகள்

அன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,   மென்பொருள் துறையில் செய்து கொண்டிருந்த பணியில் இருந்து விலகி கைநெசவு சார்ந்து பயணப்பட வேண்டும் என்ற விருப்பத்திலும் மனபலம் இல்லா நிலையிலும் இருந்து கொண்டிருந்தபொழுது குக்கூ காட்டுப்பள்ளியில் சிவராஜ் அண்ணன் மூலம் கிடைக்கப்பெற்ற இன்றைய காந்தியின் வரிகள் உண்மையிலேயே என்வாழ்விற்கும் கைநெசவு சார்ந்த பயணத்திற்கும் தாய் உரமாக இருந்தது. அது தந்த உத்வேகம்தான் நிறைய இடையூறுகள் இருப்பினும் இன்றும் சாதக பாதகங்களை அறிந்து விருப்பத்துடன் தீர்க்கமாக பயணப்பட வைத்துக் கொண்டிருக்கிறது.   கைநெசவினை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108358

இரண்டாம் மொழிபெயர்ப்பு

  அன்பின் ஜெ.எம், உங்களைச் சிரமப்படுத்துவதற்கு மன்னியுங்கள். எனக்குக் கீழ்க்காணும் கடிதமொன்று அண்மையில் பெயரில்லாமல் வந்தது. அதை நான் அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை;காரணம் உங்கள் வழிகாட்டுதலால் இப்படிப்பட்ட ஆட்கள், தாங்களும் எதுவும் செய்ய மாட்டார்கள்..,மற்றவர்கள் ஏதேனும் செய்தாலும் தேவையின்றி வம்புக்கிழுப்பார்கள் என்ற அக அமைதி எனக்கு நிறையவே கிட்டியிருக்கிறது. எனினும் இக் கருத்துத் தொடர்பாக (மூன்றாவது மொழி வழியான மொழிபெயர்ப்புக்கள் பற்றி)-அவையும் நமது சூழலில் ஏற்கப்படக் கூடியனவே என்று ஒரு பதிவை நீங்கள் ஏற்கனவே எழுதியிருப்பதான …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/8679

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-21

சுவடிகளில் குருதிமணம் இருந்தது. கொழுங்குருதி. மானுடக்குருதிக்கு மட்டுமே உரிய மணம். அதை அறியாத மானுடர் இல்லை. உமிழ்நீரின், உயிர்த்துளியின், கண்ணீரின் மணம். சுவையின், காமத்தின், துயரின் மணம். ஒவ்வொரு சுவடியும் எனக்கு எனக்கு என வீறிட்டது. நான் நான் என அறைகூவியது. விதுரர் மெல்ல விசைதளர்ந்து மூச்செறிந்து அமைந்தார். கைகளை கட்டிக்கொண்டு தன் முன் பீடத்தில் விரிந்துகிடந்த சுவடிகளை நோக்கிக்கொண்டிருந்தார். கனகர் அருகே வந்து தணிந்து “மேலும் ஓலைகள் உள்ளன” என்றார். வேண்டாம் என அவர் கைகாட்டினார். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108322