Daily Archive: April 12, 2018

எம்.ஏ.சுசீலா விழா :இந்திரா பார்த்தசாரதி உரை

எம்.ஏ.சுசீலா நன்றியுரை எம்.ஏ.சுசீலா விழா -புகைப்படங்கள் எம்.ஏ.சுசீலா விழா காணொளி   சென்ற 7 -4-2018 அன்று சென்னை ருஷ்யக்கலாச்சார மையத்தில்  எம்.ஏ.சுசீலா அவர்களை பாராட்டும் முகமாக  ருஷ்யக்கலாச்சார மையமும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டமும் இணைந்து நிகழ்த்திய ‘தஸ்தயேவ்ஸ்கியின் தமிழ்முகம்’ என்னும் இலக்கிய நிகழ்வில் இந்திரா பார்த்தசாரதி அவர்கள் தலைமைதாங்கி ஆற்றிய உரை     ரஷ்யக் கலாசார மையமும். விஷ்னுபுரம் இலக்கிய வட்டமும் இணைந்து, பேராசிரியர் எம்.ஏ.சுசீலா வின் இலக்கியப் பணியையும், குறிப்பாக, அவருடைய மொழியாக்கத் திறனையும் பாராட்ட …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108296

காவேரிப்போராட்டம்

அன்புள்ள ஜெ காவேரி போராட்டத்தை ஆதரித்து நீங்கள் எழுதிய குறிப்பை வாசித்தேன். அப்போராட்டத்தின் வன்முறையை நீங்கள் ஏற்கிறீர்களா? அதில் பெரும்பாலும் சினிமாப்பிரபலங்கள்தானே கலந்துகொண்டார்கள்? செந்தில்குமார் *** அன்புள்ள செந்தில்குமார், காவேரி தமிழ்நாடு முழுமைக்குமான பிரச்சினை அல்ல. டெல்டா மாவட்டங்கள் தவிர எங்கும் அது வாழ்க்கைப்பிரச்சினை அல்ல. பிற நிலமே இங்கு பெரும்பகுதி. அங்கெல்லாம் ஏரிகள் கைவிடப்பட்டு, கால்வாய்கள் ஆக்ரமிக்கப்பட்டு நீர்மேலாண்மை அறவே ஒழிந்துள்ளது. விவசாயம் ஆழ்துளைக் கிணறுகளை நம்பியே உள்ளது. ஒவ்வொருநாளுமென விளைநிலங்கள் கைவிடப்படுகின்றன. ஆகவே பிற …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108315

மூன்று சிறுகதைகள்

மின்கேத்தலில் தண்ணீரை கொதிக்கவைக்கும்போது விசும்பல் ஒலிகளை விட்டுவிட்டுக் கேட்டேன். உன்னிடம் இருந்துதான் அவை எழுகின்றனவோ என்ற ஐயத்துடன் எட்டிப்பார்த்தேன். உன்னிடமிருந்துதான், உன் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. உன்னிடம் வந்து பேசுவோமா வேண்டாமா என்ற சில கணம் யோசித்துவிட்டு விலகிச்சென்றேன்.   சாய்வு – அனோஜன் பாலகிருஷ்ணன் காயத்ரியை கடக்கும் முன்பே கனிமொழியை பார்க்க நேர்ந்தது.  முகத்தில் ஒரு சில பெரிய பருக்கள் தென்படத் தொடங்கியிருந்தன கனியின் முகத்தில். ஒரு முடிக்கற்றை மட்டும் முன்னே வந்துவிழ அவனுக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108258

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-19

இளைய யாதவர் புன்னகையுடன் “அங்கநாட்டரசரும் பீஷ்மரும் சிகண்டியும் இங்கே வந்தனர். இங்கு வருபவர்கள் எவரும் தங்கள் மெய்யான வினா என்ன என்பதை உடனே உரைப்பதில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை பற்றித்தான் முதலில் சொல்லத் தொடங்குகிறார்கள். அதுகூட அவர்களின் வாழ்க்கை அல்ல, அவர்களின் அகப்புனைவுதான்” என்றார். விதுரர் அவர் என்ன சொல்லப்போகிறார் என விழிகளில் வியப்புடன் நோக்கினார். “மானுட வாழ்க்கை நிகழ்ந்த அக்கணமே தடமின்றி மறைந்துவிடுகிறது. அதன் ஒரு துளிகூட எங்கும் எஞ்சக்கூடாதென்பதே நெறி. ஏனென்றால் அது பிரம்மலீலை. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108260