Daily Archive: April 11, 2018

காவேரி

காவேரி மீதான தமிழகத்தின் உரிமைக்காக எழும் குரல்களுடன் முழுமையாகவே இணைந்துகொள்வது அன்றி இத்தருணத்தில் வேறெதையும் எண்ண இயலாது. ஒரு மக்கள் போராட்டம் அதற்கான கொந்தளிப்புகளுடன், கட்டின்மைகளுடன் மட்டுமே நிகழமுடியும் — அதை கட்டுப்படுத்தி சீரானபெருக்காக முன்னெடுக்க காந்தி போன்ற ஆளுமை இல்லாதவரை   ஆழ்ந்த சிக்கல்கள் பல இதற்குள் உள்ளன. உள்ளூர் நீராதாரங்கள் அனைத்தும் கைவிடப்பட்டு சூறையாடப்பட்டிருக்கின்றன. என் வீட்டிலிருந்து நடக்கும் தொலைவில் மூன்று ஏரிகள் சென்ற ஐம்பதாண்டுகளாக கைவிடப்பட்டு, ஆக்ரமிக்கப்பட்டு கிடக்கின்றன.  நீர்மேலாண்மை என்பதே தமிழகத்தில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108288

பேசத்தொடங்கும் பெண்ணுக்கு…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வெண்கடல் சில நாள்களுக்கு முன் படித்துமுடித்தேன். ஆனால் அதைப் பற்றி எதுவும் எழுதி பதிவு செய்துகொள்ளவில்லை. இன்று தாள்களுடன் மட்டும் விடப்பட்டேன். பேச்சுவழக்கில் எழுதியிருந்தேன். அதை மாற்றி எழுதியிருக்கிறேன். கைதிகள் கைதிகள் வாசித்துமுடிக்கையில் காந்தியினுடைய ரகுபதி ராகவ பாடல் கேட்க வேண்டும் என்று தோன்றியது. அந்தப் பாடல் கேட்கும்பொழுது இன்னும் அந்த உணர்வுகளுக்குள் செல்லலாம் என எண்ணினேன். இருட்டில் உட்கார்ந்துகொண்டு கேட்டுக் கொண்டிருந்தேன். வேறு வேறு குரல்களில். அது மேலும் அதிகமாக அவ்வுணர்வை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107951

ஏழாமுலகின் காமம்

ஐயா வணக்கம், தமிழில் எழுத முயற்சிக்கிறேன் பிழையிருந்தால் மன்னிக்கவும். நான் ஒரு ஆரம்ப கால வாசகன். உங்கள் அறம் நாவல் மற்றும் பனிமணிதனை தொடர்ந்து ஏலாம் உலகம் வாசித்து முடித்தேன். என்னுடைய புரிதல்: ஒரு கசப்பான அனுபவம். நமக்குள் எத்தனை வக்கிரங்கள். நாம் செய்வது தவறு என்ற பிரக்னையெ இல்லாமல் எல்லாம் நடக்கிறது. எனக்கு மிகவும் கசப்பான அனுபவமாக இருந்தது முத்தம்மை கடைசியில் கூணனுடன் இனைந்தது அது அவளின் முதல் பிள்ளை என்று முந்தைய அத்தியாயத்தில் எனக்கு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107770

இலங்கைத்தமிழ் ஆவணக்காப்பகங்கள்

சடக்கு – ஒரு மகத்தான முயற்சி வணக்கம் சடக்கு பற்றிய அறிமுகக் குறிப்புக்கு நன்றி. சடக்கு ஓர் அருமையான தொடக்கம். பிரிவுகள், வகைகள், ஆண்டு, ஆளுமைகள் எனத் தேடல் வசதிகளை ஆரம்பத்திலேயே உள்வாங்கியிருக்கின்றனர். கையெழுத்துப்பிரதிகள், துண்டுப் பிரசுரங்கள், கடிதங்கள் என ஏனைய ஆவணங்களையும் இணைக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர். வல்லினம் குழுவினர்க்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல இத்தகைய முயற்சிகள் அரசுசார்பில் செய்யப்பட வேண்டியவை. ஏனெனில் பெரும் பொருட்செலவினைக் கோரிநிற்பவை. ஈழத்தினைப் பொறுத்தவரை 2005 இலிருந்து நூலக …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108241

எம்.ஏ.சுசீலாவிழா கடிதங்கள்

  எம்.ஏ.சுசீலா நன்றியுரை எம்.ஏ.சுசீலா விழா -புகைப்படங்கள் எம்.ஏ.சுசீலா விழா காணொளி     அன்புள்ள ஜெ, சென்னையில் நிகழ்ந்த தங்கள் விழாவுக்கு வரவேண்டுமென பலமுறை நினைத்தும் வரமுடியவில்லை. நான் போதிய முயற்சி செய்யவில்லை என்பதுதான் உண்மை. காரணம் முக்கியமாக இது மொழியாக்கத்தைப்பற்றிய விழா என நினைத்துக்கொண்டதுதான். ஆனால் காணொளிகளைப்பார்த்தபோதுதான் விரிவான ஒரு தளத்தில் விழா நடந்தது தெரியவந்தது. பொதுவாக இம்மாதிரி ஆளுமைகளைப்பற்றிய விழாக்களில் ஒருவர் பேச்சை இன்னொருவர் திரும்பப்பேசி சலிப்பூட்டுவார்கள். பெரிதாகப் பேசவும் இருக்காது என்பதும் நிஜம்தான். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108265

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-18

பகுதி ஐந்து : விடுதல் நைமிஷாரண்யத்தின் எல்லையை அடைந்த யமன் நின்று திரும்பி நோக்கி நெடுமூச்செறிந்தார். அவரருகே வந்த ஏவலனாகிய திரிதண்டன் “அரசே, நாம் திரும்புகிறோமா?” என்றான். யமன் “இல்லை, இது இங்கே இப்படி முடியாது என்று எனக்குப் படுகிறது. இன்னும் பல படிகள் உள்ளன இதற்கு” என்றார். “அதெங்ஙனம்?” என சொல்லத் தொடங்கிய திரிதண்டன் யமனின் தத்தளிக்கும் முகத்தை நோக்கியபின் “என்ன எண்ணுகிறீர்கள் என்பது தெளிவாகவில்லை” என்றான். யமன் “இறுதி வினா ஒன்று உண்டு. அதுவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108172