Daily Archive: April 10, 2018

நடை,பொருள்

அன்புள்ள ஜெ, அவர்களுக்கு வணக்கம். நலமா? மொழி ஆளுமை குறித்து எனக்கு எப்பொழுதுமே ஒரு சந்தேகம் உண்டு. சில நூல் ஆசிரியர்கள் 50, 60 புத்தகங்கள் எழுதியிருப்பதாகக் கூறி படிக்கச் சொல்வார்கள். படித்தால் வெறும் குப்பையாக இருக்கும். வார்த்தை செறிவோ, கருத்து நுட்பமோ இல்லாமல், ’தினத்தந்தி’யின் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவியின் செய்தியை படிக்கும் தரத்திலேயே இருக்கும். சில நூல்கள் நல்ல கருத்துக்களையும் நுட்பமான விவரங்களையும் கொண்டிருக்கும். ஆனால் சொல் வளம் இருக்காது. வேறு சில …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107734

எம்.ஏ.சுசீலா நன்றியுரை

அன்பின் ஜெ, வணக்கம். இன்று காலை கோவை வந்து சேர்ந்தேன். விஷ்ணுபுர இலக்கிய வட்டம் சார்பில் அதிலும் சென்னையில் பெருவிழா எடுத்து எனக்கு நீங்கள் பெற்றுத் தந்திருக்கும் அங்கீகாரம் மிகப்பெரியது. ஓர் அர்த்தமுள்ள வாழ்வைத்தான் நான் வாழ்ந்திருக்கிறேன் என்ற உணர்வை நீங்களும் நண்பர்களும் எனக்கு ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறீர்கள். அது மேலும் பல ஆண்டுக்காலம் உற்சாகமுடன் செயல் புரிய எனக்குத் துணை வரும். ருஷ்யக்கலாசார மையத்தில் நிகழ்ந்த 7.4.2018 மாலைக்கூட்டம் என் வாழ்வில் முக்கியமான நேரங்களில் ஒன்று.தங்களுக்கும் எல்லா நண்பர்களுக்கும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108217

கவிதை மொழியாக்கம்- வெ.நி.சூரியா கடிதம்

கவிதை மொழியாக்கம் -சீனு வெ.ஸ்ரீராம் கவிதை மொழியாக்கம் -கடிதம் கவிதை மொழியாக்கம் -எதிர்வினை கவிதை மொழியாக்கம் – ஒரு விளக்கம் மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, நண்பர் கடலூர் சீனுவின் எதிர்வினைகளையும் உங்களுடைய விளக்கத்தையும் வாசித்தேன். இவை சார்ந்து சொல்ல, சில இருக்கின்றன. அவற்றை பகிர்ந்துகொள்கிறேன். ஒரேசமயத்தில் அந்தரங்கமானதாகவும் பொதுவானதாகவும் இருந்துகொண்டிருக்கும் இருப்பு கவிதையினுடையது. கிட்டத்தட்ட கவிதையும் நம்மைப் போலத்தான். அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். கவிதையின் வாசிப்பு அல்லது வரிவரியாக எடுத்துவைத்து விளக்குவது என்பது ஒருபடித்தானதாகவே இருக்கமுடியும் என்பது …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108239

இலங்கை,நவீன்,அனோஜன்

இலங்கை,நவீன் அன்புள்ள ஜெயமோகன், நவீன் எழுதிய இலங்கைப்பயண அனுபவங்கள் கட்டுரையை உங்கள் குறிப்போடு வாசித்தேன். நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.இலங்கைக்குச் சென்றால் இலக்கிய கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தவிர வேறு மடத்தனம் ஏதும் இருக்க முடியாது.ஏனென்றால் சமகாலத்தில் இங்கே அவ்வாறான ஒன்று இருப்பதில்லை. வெறுமே அரசியல் அடிதடியும் மாறி மாறி வன்மங்களை உமிழ்வதும் யார் பெரியவர் என்பதை நிரூபிக்கச் செய்யும் அகங்காரச் சிக்கலுமே இருப்பதுண்டு. இதைத்தாண்டி ஒரு விவாதத்தை முன்னெடுப்பது பெரும் சவால். நானும் பல இலக்கிய கூட்டங்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108231

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-17

சிகண்டி எழுந்துகொண்டு “நான் விடைகொள்கிறேன் யாதவரே, இன்று நாள் நலம்கொண்டது” என்றார். இளைய யாதவர் அவருடன் எழுந்துகொண்டு “உங்கள் ஐயங்கள் தீர்ந்துவிட்டனவா?” என்றார். “இந்த வினாவுக்கு இதற்குமேல் ஒரு விடை இல்லை” என்றார் சிகண்டி. இளைய யாதவர் புன்னகைத்தார். சிகண்டி “நான் உங்களைத் தேடிவந்தது வீணாகவில்லை. இவை எங்கு நிகழ்ந்தன என நான் அறியேன். என்னுள் இருந்து எழுந்தவையாக இருக்கலாம். காலத்துளியெனக் கூறப்படும் இக்காட்டில் எழுந்தவையாக இருக்கலாம். ஆனால் அவை மெய்மையென்றே உறுதியாகத் தோன்றுகிறது” என்றார். தலைமுடியை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108143