Daily Archive: April 9, 2018

எம்.ஏ.சுசீலா விழா -புகைப்படங்கள்

  படங்கள் இணைப்பு – கணேஷ் பெரியசாமி படங்கள் இணைப்பு – கே பி வினோத்  

Permanent link to this article: https://www.jeyamohan.in/108204

ஆன்மிகமும் அரசியலும்

அன்புள்ள ஜெ   அரசியலைக் காவு கொள்ளும் ஆன்மீகம்    அரசியலை ஆணையில் வைப்பதின் வழியே விடுதலையை அடையமுடியும் என்ற நம்பிக்கையைச் சிதைத்து, ஒதுக்கப்படும் – ஒடுக்கப்படும் விளிம்பு மனிதர்களைச் சமயச்சொல்லாடல்களுக்குள் இழுத்துக்கொண்டே இருக்கின்றனர். நிகழ்கால உலகம் நவீனத்துவம், பின் நவீனத்துவம் என அரசியல் தத்துவச்சொல்லாடல்களை விவாதித்துக் கொண்டிருக்கிறது. உலகத்திலிருந்து இந்தியாவைத் துண்டித்துச் சமயம், ஒற்றைச் சமயம், அறுசமயம், பரசமயம் எனப் பேசவைக்கிறார்கள். அரசியல் நீக்கம் செய்து நிலவுடைமைக்காலத்திற்கு இழுக்கும் பின்னோக்கிய இழுப்பைத்தவிர வேறில்லை. –   அ. …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107730

நல்லிடையன் நகர்- கடிதம்

    நல்லிடையன் நகர்-2 நல்லிடையன் நகர் -1 அன்புள்ள ஜெ   நல்லிடையன் நகர் மன்னார்குடி நகரை புதிய பரிணாமத்தில் காட்டியதுடன் ஆலயங்களைப் பற்றிய அரிய செய்திகளையும் அறிய முடிந்தது. அத்துடன் மன்னார்குடியைப் பற்றிய எனது மலரும் நினைவுகளையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.   வைதீக மதங்கள் எழுச்சிப் பெற்ற காலத்தில் ஆலயங்களின் தமிழ் பெயர்கள் வட மொழி பெயர்களாக மாற்றம் பெற்றன. மறைக்காடு வேதாரண்யம் என்றும் மயிலாடுதுரை மயுரம்(மாயவரம்) என்றும் பெயர் மாற்றம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108147

இலங்கை,நவீன்

  இதுவரை இலங்கை சென்றதில்லை. பல்வேறு சிறு சிக்கல்கள் இருந்தன. சிலமுறை திட்டமிட்டுத் தள்ளிப்போயிற்று. சென்ற ஆண்டு சென்றிருக்கவேண்டியது. மலேசிய எழுத்தாளர் ம.நவீன் இலங்கை சென்று வந்த அனுபவக்குறிப்புகளை வாசித்தேன். ஓர் உறுதியான முடிவுக்கு வந்தேன், இலங்கை சென்றால்கூட அது தனிப்பட்ட நண்பர்களைச் சந்திப்பது, சுற்றுலா என்றிருக்கவேண்டுமே ஒழிய இலக்கியக்கூட்டம், வாசகர்சந்திப்பு எதற்கும் ஒப்புக்கொள்ளக்கூடாது. அங்கே இலக்கியவாசகர் என எவரேனும் இருக்கிறார்களா என்ற ஐயத்தையே நவீன் குறிப்பு உருவாக்குகிறது. தன் வழக்கப்படி ‘போட்டு உடைக்கும்’ பாணியில் எழுதியிருக்கிறார் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108034

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-16

சிகண்டியின் விழிகள் கூர்கொண்டு இளைய யாதவர்மேல் நிலைத்திருந்தன. அவர் பேசும்போது இளைய யாதவரைக் கடந்து அப்பால்சென்று பேசுவதுபோல் தோன்றியது. “யாதவரே, எக்கணமும் எழுவேன், செயலாற்றுவேன் என்னும் இறுதிப்புள்ளியில் நூறு ஆண்டுகளாக நின்றிருக்கிறது என் வாழ்க்கை, மலைவிளிம்பில் காலமிலாது நின்றிருக்கும் பாறை என. இப்புள்ளி நீண்டு முடிந்து என் வாழ்வென்றே ஆகிவிடுமென்றால் என் பிறவிக்கு என்ன பொருள்? நான் கொண்ட வஞ்சினமும், நோன்பும் இம்மண்ணில் எதன்பொருட்டு எழுந்தன?” என்றார். “அவற்றை பொருள்கொள்ளச் செய்யவேண்டுமென்றால் நான் பீஷ்மரை எதிர்கொள்ளவேண்டும். கொல்லவேண்டும் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108096