Daily Archive: April 8, 2018

எம்.ஏ.சுசீலா விழா

சென்னை ருஷ்ய கலாச்சார மையமும் விஷ்ணுபுரம் இலக்கியவட்டமும் இணைந்து எம்.ஏ.சுசீலா அவர்களின் மொழியாக்க முயற்சிகளைப் பாராட்டி நிகழ்த்திய விழாவின் காணொளிக்காட்சி .நன்றி ஷ்ருதி டிவி  

Permanent link to this article: https://www.jeyamohan.in/108192

பக்தியும் தத்துவமும்

  அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு, இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். தங்களுடைய செவ்விலக்கியப் படைப்பில் கொற்றவையும், விஷ்ணுபுரமும் , வாசித்துள்ளேன். தவிர, கட்டுரைகள், தொகுப்புகள், இணையத்தில் தொடர் வாசிப்புகள். உங்களின் எழுத்துக்கும் அது தரும் சிந்தனைத் தொலைவிற்கும் நன்றி. அது நான் வரலாறு, இலக்கியம், தத்துவம், கலை என்று எந்த ஒன்றினை வாசிக்கும் பொழுதும் அது ஒரு முறையைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. உங்களுடைய குறுந்தொகை பற்றிய உரையை ராக சுதா அரங்கில் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/35363

ஒன்றுமில்லை

  அன்புடன் ஆசிரியருக்கு சில மாதங்களுக்கு முன் அம்மாவுக்கு கருப்பை நீக்க அறுவை சிகிச்சை நடந்தது. திருவாரூர் மெடிக்கல் சென்டர் என்ற தனியார் மருத்துவமனை. சுந்தர் என்ற பிரபலமான மருத்துவர் அறுவைசிகிச்சை செய்தார். அறுவை சிகிச்சை சனிக்கிழமை காலை பத்து மணிக்கு தொடங்குமென்று முந்தைய தினம் சொல்லியிருந்தார்கள். வெள்ளிக்கிழமை அலுவலகத்தில் இருந்து நேராக மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அம்மாவை ஒரு நோயாளிப் படுக்கையில் பார்த்தபோது மனம் துணுக்குற்றுவிட்டது. அப்பாவும் தைரியமாக காண்பித்து கொண்டாலும் அவரும் அப்படித்தான் இருந்தார் .அண்ணன் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107954

அசடன் ,நற்றிணை

அன்புள்ள ஜெயமோகன், தஸ்தாயெவ்ஸ்கியின் “அசடன்” நாவலை கடந்த ஓராண்டாகவே தேடிக் கொண்டிருக்கிறேன். சென்னைப் புத்தகக் காட்சியில் கிடைக்கும் என எதிர்ப்பார்ப்புடன் இருந்தேன். அங்கும் கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை நியூ புக்லேண்ட்ஸ் கடையிலும், டிஸ்கவரி வேடியப்பன் அவர்களிடமும் கேட்டுப் பார்த்தாயிற்று. நூல் அச்சில் இல்லை என்று சொல்லப்பட்டது. உங்கள் தளத்தில் “அசடன் வாங்க” என்ற சுட்டி டிஸ்கவரி தளத்திற்கு இட்டுச் செல்கிறது. அதிலும் நூல் இருப்பில் இல்லை என்ற தகவல்தான் கிடைக்கிறது. எம்.ஏ. சுசீலா அவர்களை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108181

இரண்டுமுகம் -கடிதங்கள்

இரண்டு முகம்   எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு, நலமாக இருக்கிறீர்களா? அம்மா, தம்பி, தங்கை நலம் என்று நம்புகிறேன். 25 வயதில் தான் ஒரு புரிதல் பிறக்கும் என்பது நூறு சதவீதம் உண்மை. நான் முதுகலை ஆங்கில இலக்கியம் படிக்கும் போது civil service கனவுகளில் இருந்தேன். யார் கேட்டாலும் civil service எழுத போகிறேன் என்றே சொல்வேன். நானும் நூலகமே கதி என்று கிடப்பதை பார்த்து விட்டு எல்லாரும் அதை நம்பவும் செய்தனர். ஆனால் இலக்கியத்தை …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107964

சுவை -கடிதங்கள்

  இரண்டு முகம் தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்   அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு   தங்கள் இரண்டு முகம் கட்டுரை படித்தேன் இதை வேறு கோணத்திலும் பிரயோகிக்கலாம் என்று தோன்றியது. இன்று இல்லறத்தினுள்ளும் இந்த பிரச்சனை இருக்கிறது. ஆண் பெண் இருவருக்கும் தனி தனி எண்ணங்கள் குறிக்கோள்கள் இருக்கின்றன,ஒருவருக்கு மிக முக்கியமான ஒன்று மற்றவர்க்கு ஏளனமாக இருக்கிறது. பலர் குழந்தைகள் நலனிற்காக ஒன்றாக இருக்கின்றனர். வேலை போன்றவற்றிலாவது வேறு வகையில் விடுபடலாம் இது போன்ற நிலைமைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107997

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-15

சிகண்டி இளைய யாதவரிடம் சொன்னார் “யாதவரே, நான் அந்தப் பெரும்பன்றியை நோக்கியபடி நின்றேன். அது மேலும் தன் வாயை தாழ்த்தியபோது குருதிச்சொட்டுகள் உதிர்வதை கண்டேன். இரவின் வானொளியில் செம்மை துலங்கவில்லை என்றாலும் மணத்தால் அது குருதியென்று உணர்ந்தேன். நான் ஆம் என்று அதனிடம் சொன்னேன். அவ்வாறே என தலைவணங்கினேன். விழிநாட்டி என்னை நோக்கி நின்றுவிட்டு மெல்ல பின்கால் எடுத்துவைத்து அது புதர்க்குவைக்குள் மறைந்தது. அது மெல்ல அமிழ்வதன் கூச்சத்தை என் உடலெங்கும் உணர்ந்தேன். என் முலைக்காம்புகள், விரல்முனைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108063