[Live] | எம்.ஏ.சுசீலா விழா | Jeyamohan | விஷ்ணுபுரம் https://www.youtube.com/watch?v=dIiwM62OeXQ கபிலன் – சுருதி டிவி
Daily Archive: April 7, 2018
Permanent link to this article: https://www.jeyamohan.in/108185
சுவையின் வழி
சென்ற 2016-ல், பிரித்தானிய எழுத்தாளரான ராய் மாக்ஸம் என் இல்லத்திற்கு விருந்தினராக வந்திருந்தார். பிரித்தானியர் இந்தியாவை ஆட்சிசெய்த தொடக்கக் காலகட்டத்தில், உப்பு வணிகத்திற்குச் சுங்கம் வசூலிக்கும் பொருட்டு இந்தியாவுக்குக் குறுக்கே அவர்கள் எழுப்பிய மாபெரும் வேலி குறித்தும், அவர்கள் இங்கே உருவாக்கிய செயற்கைப் பஞ்சங்களைப் பற்றியும் விரிவாகப் பேசும் புகழ்பெற்ற நூலாகிய ‘The Great Hedge of India’ எனும் நூலை எழுதியவர் ராய் மாக்ஸம். [‘உப்புவேலி’ என்ற பெயரில் சிறில் அலெக்ஸால் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய …
Permanent link to this article: https://www.jeyamohan.in/107942
கவிதை மொழியாக்கம் -சீனு
வெ.ஸ்ரீராம் கவிதை மொழியாக்கம் -கடிதம் கவிதை மொழியாக்கம் -எதிர்வினை கவிதை மொழியாக்கம் – ஒரு விளக்கம் இனிய ஜெயம் உங்கள் கடிதம் கண்டேன் கவிதை மொழியாக்கம் – ஒரு விளக்கம் எனது வாசிப்புப் பின்புலத்தை செம்மை செய்துகொள்ள உதவியது .கடந்த இரு தினங்களாக அவ்வப்போது அந்த கவிதைக்குள்தான் கிடந்தது திளைத்துக்கொண்டு இருக்கிறேன் . இணையத்தில் தேடி சென்று அதன் மூலத்தை வாசித்தேன் .எலிசபத் பிஷப் என்பவர் அதை ஸ்பானிஷ் இல் இருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கிறார் . [கவிதையில் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/108140
தஸ்தயேவ்ஸ்கி இரு கடிதங்கள்
ஜெமோ, ஒரே ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு ஒரு நாவலின் பாதிப்பகுதியைக் கடந்திருக்கிறது தஸ்தயேவ்ஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகள்’. அந்த ஒரு கதாபாத்திரத்தை, நீ யார்? உன் பெயர் என்ன? என்று கேட்பதற்குக் கூட யாருமில்லாமல் கதைசொல்லியான நானொருவனே போதுமென்ற இறுமாப்புடன் படைக்கப்பட்டிருக்கிறது இக்குறுநாவலின் முதல் பகுதி. படைப்பூக்கத்தின் உச்சத்திலிருக்கும் ஒரு படைப்பாளியின், அன்றாடங்களைப் பற்றிய நுண்ணிய அவதானிப்பாகத்தான் இந்நாவலை நான் கருதுகிறேன். ஆரம்பித்து முற்றுப் பெறாமலேயே சென்று கொண்டிருக்கும் கதைசொல்லியின் சொல்லாடல்களில் …
Permanent link to this article: https://www.jeyamohan.in/108165
வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-14
நான்கு : அறிவு யமன் மூன்றாவது முறையாக வந்தபோது சிகண்டியின் வடிவிலிருந்தார். நைமிஷாரண்ய எல்லையில் அவருக்காகக் காத்திருந்த யமதூதனாகிய திரிதண்டன் “அரசே, நீங்கள் விரும்புவீர்கள் என்பதனால் இச்செய்தியுடன் காத்திருந்தேன்” என்றான். சினத்துடன் “நான் விரும்புவேன் என எவ்வாறு அறிந்தாய்?” என்று யமன் கேட்டார். அவர் ஒவ்வொரு அடியிலும் நிறைவின்மைகொண்டு உடல் எடைமிகுந்து நடக்கமுடியாதவராக வந்துகொண்டிருந்தார். காட்டின் எல்லை தொலைவில் தெரிந்த பின்னரும் தன்னை உந்தி உந்தி செலுத்தினார். சலிப்புடன் நின்று அவனை நோக்கி “நான் நிறைவுகொள்ளவில்லை என எப்படி …
Permanent link to this article: https://www.jeyamohan.in/108003