Daily Archive: April 6, 2018

பாரஞ்சுமக்கிறவர்கள்  (அசடன் நாவலை முன்வைத்து)  – விஷால்ராஜா

  தஸ்தயேவ்ஸ்கியை நிராகரித்தல் -நபக்கோவ் “ஒரு பாவி முழுமனதுடன் தன்னை நோக்கி பிரார்த்தனை செய்வதை ஒவ்வொருமுறை ஆகாயத்திலிருந்து பார்க்கும்தோறும் கடவுள் பேருவகை அடைகிறார். தன் குழந்தை முதன்முதலாகச் சிரிப்பதைக் காணும் அன்னையைப் போல்”  – தஸ்தாவெய்ஸ்கி    மனித சமூகம் என்பது பல்வேறு நம்பிக்கைகளால் ஆனது; பல்வேறு மதிப்பீடுகளால் பிணைக்கப்பட்டது. ஆனால் இந்த நம்பிக்கைகள் என்பவையும் மதிப்பீடுகள் என்பவையும் உண்மையில் என்ன? அவற்றுக்குப் புறவயமான இறுதி விளக்கங்கள் உண்டா? அறம், நீதி, மன்னிப்பு, காதல் என நாம் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108070

அசடன் -மேரி கிறிஸ்டி

  அன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு,   நம்மைச் சுற்றி அசுர வேகத்தில் சுழன்று அடித்துக் கொண்டிருக்கும் புயல்காற்றொன்று திடீரென்று நின்றுவிட்டால் எப்படியிருக்கும்! பத்து நாட்களாக என்னைப் பைத்தியம் பிடிக்காத குறையாக அலைக்கழித்துவிட்டு பத்தாவது நாள்,  “நீ யார்?” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு வானத்திலிருந்து கீழே குனிந்து அப்புயலசடன் என்னைப் பார்த்துக் கேட்டபோது எனக்கு அப்படித்தானிருந்தது. நான் உண்மையில் செய்வதறியாது என்ன சொல்வதென்றறியாது அண்ணாந்து அதை வெறுமனே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.     அறுநூறு …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108039

ஊட்டி இலக்கியச் சந்திப்பு நிபந்தனைகள்

    ஊட்டி சந்திப்பு குறித்து    அன்புடையீர், ஊட்டி இலக்கியச்சந்திப்பின் நிபந்தனைகளை தங்களுக்கு தபாலில் அனுப்புவதில் பேருவகை கொள்கிறோம். இவ்வகையான உவகைகள் எங்களுக்கு எப்போதாவதுதான் கிடைக்கின்றன என்பதனால் அவற்றை தவிர்க்க விரும்பவில்லை.இலக்கியக்கூட்டங்கள் இலக்கிய வாசகர்களுக்காக நடத்தப்படுபவை என்பதை நீங்கள் அறிவீர்கள். இலக்கியவாசகர்கள் பொதுவாக இலக்கியம் என்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல என்று அறிந்தவர்கள். இந்தச்சிக்கலைச் சமாளிக்கவே கீழ்க்கண்ட நிபந்தனைகள் என்பதை குறிப்பிட விரும்புகிறோம். எங்கள் இலக்கியக்கூட்டம் தரையில் அமர்ந்து நிகழ்த்தப்படுவது. மொத்தம் எட்டு அமர்வுகள். ஆகவே …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108128

ஆண்பெண் ஆடல்

அசோகமித்திரனும் ஆர்ட்டிஸ்டும்     அன்புடன் ஆசிரியருக்கு   அசோகமித்திரனும் ஆர்டிஸ்டும் வாசித்தேன்.   இந்த ஆண் பெண் ஆணவ விளையாட்டை விமோசனத்தில் மிகுந்த கலைத்தன்மையுடன் அசோகமித்திரன் நிகழ்த்தியிருப்பதாக எண்ணுகிறேன். அவருடைய வழக்கமான அன்றாடத்திற்கு அல்லற்படும் குடும்பம். ஆனால் இன்றிலிருந்து பார்க்கும் போது அத்தகைய அல்லற்படுகிறவர்களின் வழியாகவும் அனைத்து உணர்வுத்தளங்களிலும் நுட்பமான கலை வெளிப்பாடுகளை நிகழ்த்திக்காட்ட முடியும் என்பதே அசோகமித்திரனின் சாதனை என்று தோன்றுகிறது.   விமோசனத்தில் சரஸ்வதி ஒரு புள்ளியில் கடும் கோபம் கொண்டு எழுகிறாள். …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107922

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-13

இமைக்கணக் காட்டில் தன் முன் அமர்ந்திருந்த பீஷ்மரிடம் யாதவராகிய கிருஷ்ணன் செயலெனும் யோகத்தை விளக்கி இவ்வண்ணம் சொல்லத் தொடங்கினார். மூப்பையும் திறனையும் மறந்து, சலிப்பையும் விலக்கத்தையும் இழந்து, கைகட்டி விழிநிலைக்க அமர்ந்து அச்சொற்களை பீஷ்மர் கேட்டிருந்தார். பிதாமகரே, முன்பு சுலபை எனும் பேரறிவை அரசமுனிவராகிய ஜனகரிடம் கேட்டாள். ஒவ்வொரு பொருளும் அப்பொருளின் நுண்கூறுகளில் திகழும் தனித்தன்மையினால் ஆனது என்று கணாத காசியப முனிவரால் வகுக்கப்பட்டுள்ளது. அத்தனித்தன்மைகளோ அறியப்படுவதனூடாக அமைபவை. ஆகவேதான் அறிமுறையைக் குறித்த அறிவே அறிவில் தலையாயதென்று …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107881