Daily Archive: April 5, 2018

தஸ்தயேவ்ஸ்கியை நிராகரித்தல் -நபக்கோவ்

அன்புள்ள ஜெ, ஈரோடு சந்திப்பின்போது ஒரு உரையாடல் தருணத்தில் இயல்பாக என்னிடம் “தஸ்தாவெய்ஸ்கியின் பெருநாவல்களை வாசித்ததுண்டா?” என்று நீங்கள் கேட்டீர்கள். அப்போது நிலவறை குறிப்புகள் மட்டுமே வாசித்திருந்ததால் குற்றவுணர்ச்சியுடன் – அடியில் சின்னதாக அவமான உணர்ச்சியும் நெளிய- இல்லை என்று பலவீனமாகத் தலையசைத்தேன். அந்தச் சந்திப்பின்போதே சுசீலா அவர்களுக்குப் பாராட்டு விழா நடக்கவிருப்பது குறித்த ஆரம்ப நிலை அறிவிப்பும் நண்பர்களிடையே பகிரப்பட்டதால் நிகழ்வில் பங்கேற்பதற்குள் “அசடன்” நாவலை மட்டுமேனும் வாசித்து முடித்துவிட வேண்டும் என்று மனதுக்குள் உடனடியாகத் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108066

அசடன் வாசிப்பு- சௌந்தர்

  அன்புள்ள ஜெ சார்,   இப்போது தான்  சற்றே பெரிய நாவலான ”அசடன்” படித்து முடித்தேன், தஸ்தோயெஸ்க்கியின் பிரமாண்ட எழுத்தை பற்றி பேசுவதற்கு முன், இதை தமிழில் இவ்வளவு துல்லியமாக மொழிபெயர்த்த  எம். ஏ.சுசீலா அம்மா அவர்களுக்கு , வணக்கமும் வாழ்த்துக்களும்.   ஒரு இடத்தில் கூட தடங்கல் இல்லாத, சலிப்பு தட்டாத ஒரு நடை. நிச்சயமாகவே, மிகப்பெரிய உழைப்பும், ஈடுபாடும் இன்றி இது சாத்தியமில்லை.இதற்கு முன் வேறுசிலரின்  சில மொழிபெயர்ப்பு நூல்கள் சிரமப்பட்டு படித்து 30 பக்கங்கள் தாண்டாத நிலையில் ”பத்திரமாக” இருக்க, …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107901

கவிதை மொழியாக்கம் – ஒரு விளக்கம்

வெ.ஸ்ரீராம் கவிதை மொழியாக்கம் -கடிதம் கவிதை மொழியாக்கம் -எதிர்வினை அன்புள்ள சீனு, சூரியா,   இவ்விவாதத்தில் எனக்குச் சொல்வதற்கொன்று உண்டு. விவாதம் எத்தனை தீவிரமாக இருந்தாலும் அதை வெளியே நின்று பார்ப்பவர்கள் தெரிந்துகொள்ள ஏதேனும் இருக்கவேண்டும், அப்போதுதான் அது பயனுள்ள விவாதம்   ஒரு சொல்லை ‘சரியாக’ மொழியாக்கம் செய்வது எப்படி என்பதல்ல இங்கே விவாதம். கவிதையை மொழியாக்கம் செய்வது பற்றி. கவிதைமொழியாக்கம் என்பது மிகச்சிக்கலான ஒரு பண்பாட்டு நிகழ்வு. கவிஞர்கள் பலர் கவிதைமொழியாக்கம் பற்றியே கவிதைகள் …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/108055

வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-12

பீஷ்மரின் அருகே வந்து மேலிருந்து குனிந்து நோக்கிய இளைய யாதவர் “பிதாமகரே” என்று அழைத்தார். “யாதவரே, இந்தக் கட்டுகளை அவிழ்த்துவிடும்… என்னை மீட்டெடும்” என்று பீஷ்மர் கூவினார். அவர் புன்னகைத்து “மிக எளிது அது பிதாமகரே, கிளம்பிச் செல்வதில்லை என முடிவெடுங்கள். அனைத்தும் நீங்கள் செல்வதை தடுக்கும்பொருட்டு எழுந்தவை அல்லவா?” என்றார். “ஆம், நான் செல்லப்போவதில்லை” என்றதுமே பீஷ்மர் தன்மேல் மரநிழல்கள் விழுந்துகிடப்பதை கண்டார். அனைத்தும் விழிமயக்கா என திகைத்தபின் எழுந்து நின்று புழுதியைத் தட்டியபடி “கனவு!” …

மேலும் »

Permanent link to this article: https://www.jeyamohan.in/107877